உங்க 'பாய்பிரண்ட்' என்ன 'ராசி'ன்னு சொல்லுங்க.. அவரைப்பத்தி 'நாங்க' சொல்றோம்!

உங்க 'பாய்பிரண்ட்' என்ன 'ராசி'ன்னு சொல்லுங்க.. அவரைப்பத்தி 'நாங்க' சொல்றோம்!

பொதுவா பசங்க அளவுக்கு அதிகமா பேச மாட்டாங்க. இதனால அவங்கள புரிஞ்சுக்குறதுக்குள்ள பொண்ணுங்களுக்கு போதும்,போதும்னு ஆகிடும்.
அதேபோல என்னதான் உருகி,உருகி லவ் பண்ணாலும் இவன நம்மளால முழுசா புரிஞ்சுக்க முடியலையேன்னு உங்களுக்குத் தோணுதா? அப்போ இது உங்களுக்குத்தான். இத படிச்சு உங்க பாய்பிரண்ட்(Boyfriend)/ஹஸ்பண்ட் எப்படிப்பட்டவர்னு தெரிஞ்சுக்கங்க.


மேஷம்உங்க பாய்பிரண்ட்(Boyfriend) மேஷ ராசியா? அப்போ நீங்க கொடுத்து வச்ச ஆளுதான். மேஷ ராசியினர் பிறக்கும்போதே தலைமைப்பண்புகளுடன் பிறந்தவர்கள். இவர்கள் தங்கள் மனைவி/காதலி சுதந்திரமாக, தனித்து இயங்க வேண்டும் என நினைப்பர். தங்கள் மனைவி/காதலியை பாதுகாக்க வேண்டும் என நினைக்கும் அதேநேரம், தங்களது லைப் பார்ட்னர் தங்களை சேலஞ்ச் செய்யவேண்டும் எனவும் மேஷராசியினர் விரும்புவர். உறவைப்
பொறுத்தவரையில் தங்களது லைப் பார்ட்னர் தங்களுக்கு சரிசமமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.


விளையாட வேடிக்கையான குறுஞ்செய்தி விளையாட்டுகளையும் படிக்கவும்


ரிஷபம்ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் வெற்றிபெற உறுதியுடன் போராடுவார்கள். அதேபோல சில விஷயங்களில் இவர்கள் மிகுந்த பிடிவாதத்துடனும்
இருப்பார்கள். ரிஷப ராசி(Zodiac) ஆண்களைப் பொறுத்தவரையில் பெண்கள் நேர்மையாக இருப்பதை பெரிதும் விரும்புவர். அதேநேரம் வீடு மற்றும் குடும்பம் தொடர்பான விஷயங்களில் பெண்கள் 'டிரெடிஷனலாக' இருக்க வேண்டும் என ஆசைப்படுவர்.


Also Read About காதலனுக்கான அழகான புனைப்பெயர்கள்


மிதுனம்தொடர்ந்து ஒரேமாதிரியான வாழ்க்கை என்பது மிதுன ராசிக்காரர்களுக்கு வேப்பங்காய் போல கசக்கும். இவர்கள் புதிதாக எதையாவது செய்ய
வேண்டும் என விரும்புவார்கள். இது மிதுன ராசியின் விசேஷ குணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எப்போதும் தன்னை உற்சாகமாக
வைத்துக்கொள்ளும் பெண்ணை இவர்கள் விரும்புவர். தனித்து இயங்கக்கூடிய நகைச்சுவை உணர்வு கொண்ட பெண்கள் இந்த ராசிக்கு
பொருத்தமானவர்களாக இருப்பர்.


கடகம்கடக ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பர். அவர்களைப் போலவே நிலையாக உணர்ச்சிகளை
வெளிப்படுத்தக்கூடிய பெண்களையே இவர்கள் விரும்புவர். தங்கள் மீது மிகவும் அக்கறை எடுத்துக்கொள்ளக் கூடிய பெண்ணாக இருந்தால், பதிலுக்கு அவர்கள் மீது அதிக அன்பை வெளிப்படுத்தி அவர்களுக்கு எப்போதும் ஆதரவாக இந்த ராசிக்காரர்கள் இருப்பர்.


சிம்மம்சிம்ம ராசிக்காரர்கள்(Zodiac) பொதுவாக பார்ட்டிகள் மற்றும் வெளியில் செல்வதை அதிகம் விரும்புவார்கள். தங்களைப் போலவே பார்ட்டிகள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடிய பெண்களை இவர்கள் விரும்புவர். இந்த ராசிக்காரர்களுக்கு தங்களைப் போல பெண்களை அதிகம் பிடிக்கும். கீழ்ப்படிதல் எதுவும் இல்லாமல் ஆதரவாக இருக்க தங்களது துணை இருக்க வேண்டும் என ஆசைப்படுவர்.


கன்னிஇந்த ராசிக்காரர்கள் பொதுவாக இளகிய மனம் படைத்தவர்கள், அத்துடன் பிறரின் கவனத்துக்கு ஆளாகாமல் தள்ளி நிற்பதையே இவர்கள் வழக்கமாக
வைத்திருப்பர். நேர்மையாகவும், தூய்மையுடனும் கூடிய பெண்களே இந்த ராசிக்காரர்களுக்குத் தேவை.தங்களைப் போலவே தங்களுக்கு வரக்கூடிய
துணையும் இளகிய மனம் படைத்தவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பர்.


துலாம்இந்த ராசிக்காரர்களுக்கு சண்டை, டிராமா என்றால் அறவே ஆகாது. தராசினைப் போல எல்லோருடனும் சமமாகவே இவர்கள் பழகுவர். அதிகம்
உணர்ச்சி வசப்படாத, மெலோ டிராமா எதுவும் இல்லாமல் இயற்கையாக இருக்கக்கூடிய பெண்களை இவர்கள் விரும்புவர். தொழில் சார்ந்து சாதிக்கும்
பெண்களை இந்த ராசிக்காரர்கள் அங்கீகாரம் செய்வர்.


விருச்சிகம்இந்த ராசி(Zodiac) ஆண்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், தீவிரத்துடனும் இருப்பார்கள். சூடான விவாதங்கள், சண்டைகளின் போது உடைந்து போகாமல் இருக்கும் பெண்களை இவர்கள் விரும்புவர். தனித்து இயங்கக்கூடிய பெண்களே இந்த ராசிக்காரர்களுக்குத் தேவை.தனுசுஉங்க பாய்பிரண்ட்(Boyfriend) தனுசு ராசியில்(Zodiac) பிறந்தவர் என்றால் நீங்கள் செம லக்கி தான். புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வது சாகசப்பயணங்கள் செய்வது என்றால் இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. குறிப்பாக சாகசப்பயணங்கள் இவர்களின் விஷேச குணமாக இருக்கும்.தங்களுக்கு வரக்கூடிய துணையும் இதேபோல இருக்க வேண்டும் என விரும்புவர்.


மகரம்இந்த ராசியில்(Zodiac) பிறந்த ஆண்கள் இயல்பாகவே கூச்ச சுபாவமும், அமைதியான குணமும் கொண்டிருப்பர். தங்களின் வேடிக்கையான மறுபக்கத்தை வெளிக்கொணரும் பெண்களை இவர்கள் விரும்புவர்.பெண்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என நினைப்பர், அதேநேரம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய பெண்களை இவர்களுக்கு பிடிக்காது.


கும்பம்பெண்கள் அறிவாளிகளாக இருப்பதை இந்த ராசிக்காரர்கள் விரும்புவர். நகைச்சுவை மிகுந்த சுவாரசியமாக பேசக்கூடிய பெண்களை இவர்களுக்கு
பிடிக்கும். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலையின்றி, சொந்த கருத்துக்கள்-சிந்தனைகள் கொண்ட பெண்கள் இவர்களுக்கு ஏற்றவர்களாக
இருப்பர்.


மீனம்உங்க பாய்பிரண்ட்(Boyfriend) இந்த ராசியில் இருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்தான். மீன ராசி ஆண்கள் தாராள மனப்பான்மை கொண்டவர்கள்.
தங்களைப்போல தாராள மனப்பான்மை கொண்ட பெண்களை இவர்கள் விரும்புவர். கடினமான நேரங்களில் தங்களுக்கு உதவக்கூடிய ஒரு பெண்ணை இந்த ராசிக்காரர்கள் தேடுவர்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.


Also read sweet romantic compliments that can melt your women's heart.