பெண்களை எப்படி பாராட்டினால் பிடிக்கும் என்பதறகான ரகசிய டிப்ஸ் - Sweet Compliments For Women

பெண்களை எப்படி பாராட்டினால் பிடிக்கும் என்பதறகான ரகசிய டிப்ஸ்  - Sweet Compliments  For Women

இந்த காலத்தில் பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்தை விட காதல் (love) திருமணங்கள் தான் அதிகம். பெண்களை அவ்வளவு எளிதில் காதலில் விளவைத்துவிட முடியாது. தனது காதலை வெளிப்படுத்த ஆண்கள் பல்வேறு யுத்திகளை கையாள்கின்றனர்.


அதில் பெரும்பாலும் காதல் (love) வசனம் பேசும் வார்த்தைகள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். ஆனால் தற்போது இருக்கும் பெண்கள் சினிமாவில் வரும் காதல் வசனங்கள் ஆண்கள் உபயோகப்படுத்துவதை விரும்புவதில்லை. தன்னை காதலிக்கும் ஆண் தனித்துவம் மிக்கவனாக திறமையானவனாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர்.


எப்படி பாராட்ட பெண்களை (Sweet Compliments To Appreciate Women) 


தன்னை காதலிக்கும் ஆண் காதலை எப்படி சொல்கிறார், தன்னை பாராட்டுவதில் எப்படி தனித்துவமாக செயல்படுகின்றார் என்பது போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.compliments-for-women-in-tamil-1


பொதுவாக பெண்களை பாராட்டுவதற்கு பெரும்பாலான ஆண்களுக்கு அவர்களின் தோற்றம் தான் முதலில் தெரிகிறது. "நீ அழகாக இருக்க, உன் கண்கள் அழகாக இருக்கு, இது போன்ற பாராட்டுகளைத் தான் ஆண்கள் காதலை(love) வெளிப்படுத்த பெண்களுக்கு அதிகமாக வழங்குகின்றனர்.


ஆனால் பாராட்டு தோற்றத்தை மட்டும் சொல்லாமல் அவர்களின் குணங்கள், ஆளுமை திறன், நகைச்சுவை உணர்வு இவற்றை கொண்டு கூட நீங்கள் பாராட்டலாம். இப்படி பாராட்டும் போது பெண்ணின் மனதை கவர்வதோடு உங்களின் மீதும் ஒரு நம்பிக்கை பிறக்கும். அப்புறம் என்ன அவர்களுக்கு உங்களை பிடிப்பதும் எளிதாகி விடும்.
நீங்கள் எப்படி பாராட்ட (appreciate) வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்லி தருகின்றோம்


எப்போதும் அழகாக இருக்கிறாய் (Always Beautiful)


ஒரு அழகான பெண்னை நீங்கள் பார்த்தவுடன் " நீ ரெம்ப அழகா இருக்க" என்று சொல்லலாம். ஆனால் இது போன்ற பாராட்டுகள் அவர்கள் ஏற்கனவே நிறைய தடவை கேட்டதாக இருக்கலாம். எல்லாரும் சொன்ன ஒரு பாராட்டு வார்த்தைகள் அவர்களுக்கு பெரியதாக தெரியாது. அதுவே நீங்கள் " ரொம்ப வருடங்களாக அப்படியே அழகாக இருக்கிறீர்கள்" இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம். இதைத் தான் பெண்களும் விரும்புகின்றனர் என்று பிரிட்டிஷ் ஆய்வு கூறுகிறது.compliments-for-women-in-tamil-2


மிகவும் புத்திசாலி ( Very Clever)


பெண்களுக்கு அவர்களின் காதலன்(love) அவர்களுடைய நகைச்சுவை உணர்வை பாராட்டுவது மிகவும் பிடிக்கும்." உன்னுடன் இருக்கும் நேரம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது." "மேலும் நீ புத்திசாலி ஏனெனில் புத்திசாலி மனிதர்கள் நகைச்சுவை உணர்வு கொண்டு இருப்பார்கள்.என்று அவர்களை பாராட்டலாம். இதனால் அவர்களும் மிகுந்த சந்தோஷம் அடைவதோடு உங்கள் உறவும் வலிமையாகும்.compliments-for-women-in-tamil-3


அழகான தேர்வு (Beautiful Choice)


அவர்கள் அணியும் ஆடைகள் மற்றும் அவர்கள் இசை கேட்கும் ஸ்டைல் இது குறித்து கூட நீங்கள் புகழலாம். "நீ அணிந்திருக்கும் கம்மல் உன் ஆடைக்கு பொருத்தமாக அழகாக இருக்கிறது", " ஆடைகளை நன்றாக தேர்வு செய்கிறாய்" இது போன்ற இனிப்பான வார்த்தைகள் மூலம் இன்னும் உங்கள் காதலை(love) வெளிப்படுத்தலாம்.


நீ திறமைசாலி (Talented)


எல்லாருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும். அதே போல் பெண்களும் நிறைய விஷயங்களில் ஆர்வமாகவும், விடா முயற்சியுடனும் செயல்படுவர். அப்படி அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யும் போது பாராட்டுங்கள். உங்கள் காதலி(love) ஒரு விளையாட்டு வீரர் என்றால் " உன்னால் முடியும், நீ திறமையாக விளையாடுவாய்", என்று சொல்லுங்கள்.compliments-for-women-in-tamil-4


இது அவருக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். உங்கள் காதலி(love) சிறந்த கடின உழைப்பாளி என்றால் " நீ திறமையாக வேலை செய்கிறாய், கண்டிப்பாக உனக்கு பெரிய பதவி கிடைக்கும்", என்று பாராட்டுங்கள். அன்பான ஒருவரின் பாராட்டு தான் அவர்கள் உற்சாகத்தை தரும். எனவே இதை மறந்து விடாதீர்கள்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். தள்ளுபடியை பெற POPXOFIRST என்கிற  கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.