logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
உங்கள் ஸ்மார்ட் போனில் குறுஞ்செய்தி / தட்டச்சு விளையாட்டுகளை விளையாட தயாரா?

உங்கள் ஸ்மார்ட் போனில் குறுஞ்செய்தி / தட்டச்சு விளையாட்டுகளை விளையாட தயாரா?

இன்று தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக அனைவரிடமும் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. இவை பல செயளிகுடன் வருவதால், இவற்றின் பயன்பாடுகளும் அதிகரித்துள்ளது. தொடர்பு கொள்ள மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமல்லாது, இந்த ஸ்மார்ட் போன்கள் இன்று நீங்கள் சில சுவாரசியமான விளையாட்டுகளை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து விளையாடவும் (games) பயன்படுகின்றது. 

இத்தகைய விளையாட்டுகள், உங்களது சொல் அறிவிக்கு ஒரு சவாலைத் தருவதோடு, சுவாரசியமாகவும் உள்ளது. நீங்களும், நீங்கள் விரும்புபவருடன் குறுஞ்செய்தி தட்டச்சு விளையாட்டுகளை விளையாட விரும்புகின்றீர்களா? அப்படியென்றால், இங்கே உங்களுக்காக சில சுவாரசியமான மற்றும் புதுமையான விளையாட்டுகள்!

pixabay

ADVERTISEMENT

எப்படி உங்கள் குறுஞ்செய்தி விளையாட்டுகளை தேர்வு செய்வது? (Tips To Choose Best Texting Games)

உலகளாவில் பல குறுஞ்செய்தி விளையாட்டுகள் (games) உள்ளன. இவை உங்கள் வயதிற்கேற்ப தேர்ந்தெடுப்பவையாகவும், உங்கள் விருப்பதிற்கேற்ப தேர்ந்தெடுப்பவையாகவும், மற்றும் உங்கள் திறனிர்கேர்ப்ப தேர்ந்தெடுப்பவையாகவும் உள்ளன. இந்த விளையாட்டுகளை, உங்கள் நண்பர்களுடன், உங்களது ஓய்வு நேரங்களிலோ அல்லது, நீங்கள் ஏதாவது சுவாரசியமாக செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது விளையாடலாம். 

இதை இருவர் மற்றும் இருவருக்கும் மேல் பலர் சேர்ந்து விளையாடலாம். உங்கள் நேரத்தை பயனுள்ளதாக கடத்தவும், தொலைதூரத்தில் இருக்கும் உங்கள் நண்பர் அருகில் இருந்து விளையாடும் உணர்வை பெறவும் இந்த விளையாட்டு உதவுகின்றது. இது உங்கள் நட்பையும், உறவையும் பலப்படுத்தும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

இந்த விளையாட்டுகளை எளிதாக உங்கள் ஸ்மார்ட் போன்களில் இரக்கம் செய்து உடனடியாக விளையாடத் தொடங்கலாம்.

ADVERTISEMENT

நீங்கள் ஒரு நல்ல குறுஞ்செய்தி விளையாட்டை தேர்வு செய்ய எண்ணுகின்றீர்கள் என்றால், இங்கே உங்களுக்காக சில பயனுள்ள குறிப்புகள்:

  • நீங்கள் முதன்முறையாக விளையாடப் போகின்றீர்கள் என்றால், ஒரு எளிதான விளையாட்டைத் தேர்ந்தெடுங்கள்.
  • நீங்கள் தேர்வு செய்யும் விளையாட்டு உங்களுக்கும் உங்களுடன் விளையாடப் போன்கின்றவருக்கும் பிடித்ததாக இருக்க வேண்டும்
  • நீங்கள் தேர்வு செய்யும் விளையாட்டை விளையாடும் முன் விதிகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
  • உங்களால் அந்த விளையாட்டின் விதிகளை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், வேறு ஒரு எளிதான விளையாட்டை தேர்வு செய்யுங்கள்.
  • உங்களது குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்த விளையாட்டு முடிந்து விடும் படி ஒன்றை தேர்வு செய்யுங்கள்.

pixabay

  • இணையதளத்தில் பல இலவச விளையாட்டுகள் உள்ளன. அவற்றில் ஒன்றை முதலில் தேர்வு செய்யலாம்.
  • நீங்கள் தேர்வு செய்யும் விளையாட்டு முதல் படிப்படியாக கடினமான நிலைக்கு செல்லும் படியாக இருக்க வேண்டும்.
  • உங்களுக்கு விரும்பிய மொழியை தேர்வு செய்யுங்கள். இது உங்களுக்கு சரியான புரிதலை உண்டாக்குவதோடு, சுவாரசியமாகவும் விளையாட உதவும்
  • இருவருக்கு மேல் விளையாடும் போது, அதற்க்கான சரியான விளையாட்டை தேர்வு செய்ய வேண்டும்.
  • ஒரு விளையாட்டை தேர்வு செய்வதில் உங்களுக்கு குழப்பமோ அலல்து சந்தேகமோ இருந்தால், இதை முன்பு விளையாடியவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகளை பார்த்து, அதன் பின் ஒரு நல்ல தெளிவோடு தேர்வு செய்யலாம்.

ADVERTISEMENT

உங்கள் தோழி / நண்பனோடு விளையாட சுவாரசியமான சில விளையாட்டுகள் (Fun Texting Game To Play With Your Girl/Guy)

ஒரு சுவாரசியமான குறுஞ்செய்தி விளையாட்டை (games) உங்கள் தோழி அல்லது நண்பனோடு விளையாட எண்ணினால், உங்களுக்காக, இங்கே சில தொகுப்பு;

1. நான் எங்கே இருக்கிறேன் (Where Am I)

இந்த விளையாட்டில் நீங்கள் எங்கு இருகின்றீர்கள் என்பதை உங்கள் நண்பர் கண்டு பிடிக்க வேண்டும். ஒரு சில குறிப்புகளை நீங்கள் மறைமுகமாக கூறலாம், ஆனால் சில வினாடிக்குள் அல்லது குறிப்பிட்ட குறிப்பின் எண்ணிக்கைக்குள் அவர் உங்களை கண்டு பிடித்து விட வேண்டும். இது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

2. பாடல் வரிகள் (Song Lyrics)

இந்த விளையாட்டு இசை பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த விளையாட்டில், நீங்கள் ஒரு பாடலின் சில வரிகளை தேர்வு செய்து உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டும். அவர் சற்று முயற்சி செய்து அந்த வரிகள் எந்த பாடலில் வருகின்றது என்பதை கண்டு பிடிக்க வேண்டும். இது மிகவும் சுவாரசியமாக இருக்கும். மேலும் இசை மீது இருக்கும் உங்களது ஆர்வத்தையும் இது அதிகப்படுத்தும்.

3. ஒற்றன் (I Spy)

இந்த விளையாட்டில், நீங்கள் உங்கள் நண்பரிடம் ஒரு சில குறிப்புகளை கூறி, அது என்னவென்று கண்டுபிடிக்கச் சொல்ல வேண்டும்.  அவருக்கு சில குறிப்புகளை கொடுக்கும் போது, அது பொய்யாகவும் இருக்கலாம், அல்லது உண்மையாகவும் இருக்கலாம். மேலும் நீங்கள் தரும் குறிப்புகளை ஒரு அளவிற்குள் குறைத்துக் கொள்ள வேண்டும். இதன் விளையாட்டு மிகவும் சுவாரசியமாக இருக்கும். இதனை பெரும்பாலும், சிறுவர்கள் பயணத்தின் போது விளையாடுவார்கள்.

ADVERTISEMENT

pixabay

4. 2௦ கேள்விகள் (20 Questions)

இந்த விளையாட்டில் 2௦ கேள்விகள் கேட்கப்பட வேண்டும். நீங்கள் ஒரு துறையை அல்லது தலைப்பை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின் அது சார்ந்தே உங்கள் கேள்விகள் இருக்க வேண்டும். அந்த 2௦ கேள்விகளுக்கும் சரியான பதில்களை உங்கள் நண்பர் தந்துவிட்டால், அவர் வெற்றிப் பெற்றவராக ஆகி விடுவார். அப்படி அவர் கூறா நிலையில், மதிப்பென்கள் குறையும், நீங்கள் வெற்றிப் பெற்றவராக ஆவீர்கள். இந்த விளையாட்டு நீங்கள் அதிக தகவல்களை ஒரு துறையைப் பற்றியோ அல்லது தலைப்பைப் பற்றியோ தெரிந்து கொள்ள உதவும். இது உங்கள் அறிவை வளர்க்கும் வகையில் இருக்கும்.

5. சொற்களை விரிவு படுத்து (Abbrivation)

இது மற்றுமொரு சுவாரசியமான விளையாட்டு. இந்த விளையாட்டில், ஒரு நீண்ட சொல்லின் இரண்டு அல்லது மூன்று எழுத்தின் சுருக்கம் கொடுக்கப்படும், அதில் இருந்து அந்த நபர் அதன் விரிவாக்கத்தை கண்டறிய வேண்டும். இது உங்கள் சொற் திறனை வளர்க்கும் வகையிலும், பல சொற்களின் விரிவாக்கங்களைக் கற்றுக் கொள்ளும் விதத்திலும் இருக்கும்.

ADVERTISEMENT

6. கதை நேரம் (Story Time)

நீங்கள் ஒரு எழுத்தாளராக இருந்தால், இந்த விளையாட்டு உங்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த விளையாட்டில் முதலில் ஒருவர் ஒரு சொல்லில் தொடங்க வேண்டும். அந்தச் சொல்லை வைத்து மற்றொருவர் அதற்குத் தொடர்பான சொல்லை சேர்க்க வேண்டும். இப்படியே நீங்கள் இருவரும் யூகித்து ஒரு வரியை, பின் ஒரு தொகுக்கப் உருவாக்க வேண்டும். இதனை அப்படியே ஒரு முழு கதையாக சுவாரசியமாக மாற்ற வேண்டும். இது உங்கள் கற்பனைத் திறனை வளர்க்கும் ஒரு விளையாட்டாக இருக்கும்.

pixabay

7. இந்த சூழலில் என்ன செய்வீர்கள் (What If)

இது மற்றுமொரு சுவாரசியமான விளையாட்டு. இந்த விளையாட்டு நிச்சயம் உங்கள் தற்காப்புத் திறனை ஒரு இக்கட்டான சூழலில் உடனடியாக குறைந்த நேரத்தில் விரைவாக சிந்தித்து செயல்பட செய்யும் வகையில் இருக்கும். இந்த விளையாட்டில் நீங்கள் உங்கள் நண்பரிடம் ஒரு சூழலை கூறி, அந்த சூலில் அவர் எப்படி உடனடியாக செயல்படுவார் என்று கேட்க வேண்டும். இந்த விளையாட்டில் சரி, தவறு என்று எதுவும் இல்லை. அது ஒருவர் எதிர் பாரா விதமாக ஏற்படும் ஒரு சூழலில் எப்படி செயல்படுகின்றார் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் ஒரு விளையாட்டு. ஆனால் சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ADVERTISEMENT

8. பெயர் விளையாட்டு (Name Game)

இந்த விளையாட்டில் இருவரும் ஒருவரின் வார்த்தையின் கடைசி எழுத்தை தொடக்கமாக கொண்டு நீங்கள் தேர்வு செய்யும் தலைப்பை அடிப்படையாக கொண்டு அதில் இருந்து வேறுபடாமல் சரியான பெயரை கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் பறவைகளை தேர்வு செய்தால், ஒரு பறவையின் பெயரில் இருக்கும் கடைசி எழுத்தை மற்றுமொரு பரவின் பெயரில் இருக்கும் முதல் எழுத்தாக கொண்டு பதில் தர வேண்டும். அப்படி நீங்கள் விலங்குகள், நகரங்கள், நாடுகள், என்று பலவற்றை தேர்வு செய்யலாம். இதற்கு முடிவே இல்லை. ஆனால், ஒருவர் எந்த பெயரும் கிடைக்காமல் திணறினாள், அல்லது பின் வாங்கி விட்டால், இந்த விளையாட்டு முடிவுக்கு வந்து விடும்.

9. பின்னோக்கி எழுதுதல் (Reversed Writing)

இந்த விளையாட்டு மிகவும் சுவாரசியமாக இருக்கும். இந்த விளையாட்டில் நீங்கள் சொல்ல விரும்பும் ஒரு தகவலின் வார்த்தைகள் பின்னோக்கி எழுதப்பட்டிருக்க வேண்டும். மேலும் அதற்கான பதிலும் அவ்வாறே பின்னோக்கி எழுதப்பட்டிருக்க வேண்டும். இது மிகவும் சுவாரசியமான விளையாட்டு.

pixabay

ADVERTISEMENT

10. கோடிட்ட இடத்தை நிரப்புகள் (Fill In The Blanks)

இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விளையாட்டாக இருக்கும். இதில் உங்கள் நண்பருக்கு ஒரு வரியை சில கோடுகளுடன் எழுதி அனுப்ப வேண்டும். அந்த கோடிட்ட இடத்தில் அவர் நீங்கள் எண்ணிய அல்லது உங்கள் எண்ணத்திற்கு நெருக்கமான சரியான பதிலை நிரப்ப வேண்டும். இது மிகவும் சுவாரசியமாக இருக்கும். மேலும் இந்த விளையாட்டில் இருவரும் ஒருவரின் என்னத்தை மற்றொருவருக்கும் மறைமுகமாக வெளிபடுத்தும் அல்லது அவர் அதை உங்களிடம் இருந்து கண்டறிய முயலும் வகையில் இருக்க வேண்டும்.

மிக சுவாரசியமான விளையாட்டுகள் (More Interesting Games To Play)

மேலே கொடுக்கப்பட்ட விளையாட்டுகள் மட்டுமன்றி நீங்கள் மேலும் சுவாரசியமான விளையாட்டுகளை விளையாட எண்ணுகின்றீர்கள் என்றால், உங்களுக்காக இங்கே மேலும் சில பட்டியால்;

1. அதிர்ஷ்டவசமாக துரதிர்ஷ்டவசமாக (Fortunately Unfortunately)

இந்த விளையாட்டில் சில விதிமுறைகள் உள்ளன. மேலும் இதில் சில கட்டுபாடுகளும் உள்ளன. இதில் ஒருவர் ஒரு கதையைத் தொடங்க வேண்டும். பின் அதனை பாதியிலேயே மற்றுமொருவருடன் கொடுத்து அங்கிருந்து அதனைத் தொடரச் சொல்ல வேண்டும். இதில் ஒவ்வொரு கட்டத்திலும், அதிர்ஷ்டவசமாக இப்படி நடந்தால் மற்றும் துரதீர்ஷ்டவசமாக இப்படி நடந்தால் என்னவாகும் என்று யூகித்து கதையைத் தொடர வேண்டும். பின் முடிக்க வேண்டும். இது உங்கள் கற்பனை வளத்தை நிச்சயம் அதிகப்படுத்தும். மேலும் சுவாரசியமாவும் உங்கள் நேரத்தை கடத்த உதவும்.

ADVERTISEMENT

2. மாறாக என்ன செய்வீர்கள் (Would You Rather)

இந்த விளையாட்டில் ஒரு கேள்வியை கேட்டு, அதனை உங்கள் நண்பரிடம் முடிக்க சொல்ல வேண்டும். நீங்கள் எவ்வளவு கடினமாகவும், திகிலுடனும் கேள்வியை கேட்கின்றீர்களோ அவ்வளவு சுவாரசியமாகவும், அதிகம் சிந்திக்கும் வகையிலும் இந்த விளையாட்டு உங்கள் நண்பருக்கும், உங்களுக்கு அமையும்.

pixabay

3. வகைகள் (Categories)

இது மிகவும் விரைவாக விளையாடும் ஒரு விளையாட்டு. இதில் அதிகம் சவால்கள் நிறைந்திருக்கும். இந்த விளையாட்டை நீங்கள் விளையாடத் தொடங்கும் முன் ஒரு தலைப்பை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின் முதலில் விளையாடுபவர், அந்த தலைப்பிற்கு ஏற்றவாறு முடிந்த அளவிற்கு அதிக அளவு வார்த்தைகலை தேர்வு செய்ய வேண்டும். ஒரு தருணத்தில் நீங்கள் தேர்வு செய்யும் தலைப்பிற்கு போதுமான வார்த்தைகள் கிடைக்கவில்லை என்றால் இந்த விளையாட்டு முடிவுக்கு வந்து விடும்.

ADVERTISEMENT

4. பட்டியால் தொகுப்பு (List Builder)

இது ஒரு போட்டி நிறைந்த விளையாதட்டு. இந்த விளையாட்டில், ஒருவர் முதலில் ஒரு குறிப்பிட்ட தலைப்பிற்குத் தகுந்தவாறு பெயர்களை தேர்வு செய்ய வேண்டும். இது ஒரு தலை நகரங்களாக இருக்கலாம், பிரபலங்களாக இருக்கலாம், திரைப்படங்களாக இருக்கலாம், மேலும் பல. இதில் யார் இறுதிவரை பட்டியலை நிரப்பிக் கொண்டே இருக்கின்றார்களோ அவர்கள் வெற்றிபெற்றவராக கருதப்படுவார்.

5.எளிய வினாடி வினா (Simple Quiz)

இது எப்போதுமே ஒரு சுவாரசியமான விளையாட்டாக இருக்கும். இந்த விளையாட்டில் இருவரும் வினாடி வினா கேள்விகளை கேட்டு அதற்கு தகுந்தவாறு மதிப்பென்களை சேர்த்துக் கொண்டே போக வேண்டும். இது உங்களுக்கு பொது அறிவை வளர்க உதவுவதோடு, உங்கள் நினைவாற்றலையும் அதிகப்படுத்தும். இது மிகவும் சுவாரசியமான ஒரு விளையாட்டு.

pixabay

ADVERTISEMENT

6. ஒரு பயணம் செய்யுங்கள் (Take A Trip)

இதில் ஒருவர் முதலில் தொடங்கும் போது, தான் ஒரு பயணத்தை தொடங்குவதாக கூறித் தொடங்க வேண்டும். பின் மற்றுமொருவர் வேறு ஒன்றை கூரை, அதாவது தான் படிப்பதாக அல்லது விளையாடுவதாக கூற வேண்டும். இப்படியே “அ” என்னும் எழுத்தில் தொடங்கி ஒரு வரியை முடிக்க வேண்டும். அதன் பின் “ஆ” என்னும் எழுத்தில் தொடங்கி முடிக்க வேண்டும். இப்படியே தொடர வேண்டும்.

7. பேய் – Ghost :

இந்த விளையாட்டில் முதலில் நீங்கள் ஒரு எழுத்தை எழுத வேண்டும், அதன் பின் மற்றுமொருவர் வேறு ஒரு எழுத்தை எழுத வேண்டும், அப்படியே உங்கள் குழுவில் இணைந்திருக்கும் அனைவரும் ஒரு வார்த்தையை உருவாக்கும் நோக்கத்திள், ஆளுகொரு எழுத்தை சேர்க்க வேண்டும். ஒரு வார்த்தை சேர்ந்தவுடன், அடுத்த வார்த்தைக்கான தொகுப்பை தொடங்க வேண்டும். இந்த விளையாட்டு முடிவில்லாமல் போகும்.

8. வார்த்தயை சரி செய் (Correct The Spelling)

இந்த விளையாட்டில் நீங்கள் ஏதோ ஒரு வார்த்தையை தவறாக எழுத வேண்டும். அந்த வார்த்தை என்னவென்று சரியாக மற்றுமொருவர் கண்டறிய வேண்டும். இதை அனைவரும் விளையாடலாம். இது மிகவும் எளிமையான ஒரு விளையாட்டு. ஆனால் ஒரு வார்த்தைக்கு தீர்வு காண நீங்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்தை பொறுத்து அது நீடிக்கும்.

9. வரியை முடிக்கவும் (Finish The Sentence)

இந்த விளையாட்டில் ஒருவர் முதலில் ஒரு வரியைத் தொடங்க வேண்டும். அதன் பின் மற்றுமொருவர் அதனை சரியாக கண்டு பிடித்து சரியான பதிலோடு முடிக்க வேண்டும். இது சற்று சவாலான விளையாட்டாக இருக்கும். எனினும், உங்களது அறிவையும், சிந்திக்கும் திறனையும் இது நிச்சயம் அதிகரிக்க உதவும் ஒரு விளையாட்டாக இருக்கும்.

ADVERTISEMENT

pixabay

10. ட்ரிவியா (Trivia)

இந்த விளையாட்டில் ஒரு தலைப்பை நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின் முதலில் ஒருவர் 1௦ கேள்விகள் கேட்க வேண்டும், அதற்கு மற்றுமொருவர் சரியான பதிலை கூற வேண்டும். பின் வேறொருவர் கேள்வி கேட்க மற்றுமொருவர் பதில் சொல்ல வேண்டும். இது சற்று கடினமாகத் தெரிந்தாலும், உங்கள் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் இருக்கும்.

ADVERTISEMENT

குறுஞ்செய்தி விளையாட்டை விளையாட சில தந்திரங்கள் (Tricks To Win Texting Games)

இந்த குறுஞ்செய்தி விளையாட்டு சுவாரசியமாக இருந்தாலும், பலருக்கும் இதனை சரியாக விளையாடத் தெரியாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள். ஆனால், ஒரு சில தந்திரங்களை நீங்கள் தெரிந்து கொண்டால் நிச்சயம் வெற்றிப் பெறலாம். உங்களுக்காக சில பயனுள்ள குறிப்புகள்;

  • நீங்கள் உங்கள் நண்பரோடு இந்த விளையாட்ட விளையாட ஒரு சரியான நேரத்தை தேர்வு செய்யுங்கள்.
  • இதை விளையாடத் தொடங்கும் முன் உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
  • சில தந்திரமான மற்றும் அதிகம் பிரபலமில்லாத வார்த்தைகளை பயன்படுத்தலாம்
  • சுவாரசியம் குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • காலத்தை நோக்கி விளையாடுங்கள், குறிப்பாக ஆண்டுகள், தேதிகள் போன்று குறிப்பாக விளையாடலாம்.
  • உங்களுக்குத் தேவையான தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்
  • சற்று வார்த்தைகளை சுற்றி விடுங்கள்.

கேள்வி பதில் (FAQ’s)

1. இந்த குறுஞ்செய்தி விளையாட்டு எனது சொற்களஞ்சியத்தை மேம்படுத்துமா?

நிச்சயமாக உங்களது சொற் திறனும், நினைவாற்றலும், அறிவும் அதிகரிக்கும், என்பதில் ஐயம் வேண்டாம்.

2. பிற விளையாட்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த விளையாட்டு பலனுள்ளதா?

நிச்சயம் இந்த விளையாட்டு உங்கள் சுவாரசியத்தை அதிகப்படுத்தும். மேலும் பிற விளையாட்டுகளை விட நல்ல பலன் தருபவையாகவும் இருக்கும்.

3. இந்த விளையாட்டை நண்பர்கள் இல்லாமல் தனியாக விளையாட முடியுமா?

விளையாடலாம். தனியாக ஒரு நபர் விளையாடும் விளையாட்டும் உள்ளது. அந்த விளையாட்டும் சுவாரசியம் குறையாமல் இருக்கும். 

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

27 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT