உங்க 'ராசிப்படி' உங்களுக்கு எத்தன வயசுல 'கல்யாணம்' நடக்கும் தெரியுமா?

உங்க 'ராசிப்படி' உங்களுக்கு எத்தன வயசுல 'கல்யாணம்' நடக்கும் தெரியுமா?

என்னதான் சிங்கிள் தான் கெத்துனு சுத்துனாலும் நமக்கு எப்பதான் கல்யாணம் ஆகும்மோனு, எல்லோருக்கும் ஒரு எண்ணம் உள்ளுக்குள்ள ஓடிக்கிட்டே தான் இருக்கும். படிச்சு முடிச்சு வேலைக்கு போகும்போது இந்த எண்ணம் இன்னும் அதிகமாகுமே தவிர கொஞ்சமும் கொறையாது. எல்லோரும் ஜோடியா சுத்துறாங்க, எல்லாருக்கும் சீக்கிரம் கல்யாணம் ஆகுது நமக்கு மட்டும் ஏன் தள்ளிப்போகுதுன்னு சிங்கிளா இருக்கறவங்க ஒருகட்டத்துல ரொம்ப பீல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க.அதுலயும் பொண்ணா இருந்துட்டா போதும் அப்பா,அம்மாவே சும்மா இருந்தாலும் அக்கம் பக்கம் இருக்கறவங்க பொண்ணுக்கு எப்போ கல்யாணம்னு? விசாரிக்க ஆரம்பிச்சு அவங்களே நாலஞ்சு ஜாதகத்தயும் கொண்டுவந்து தர ஆரம்பிச்சிடுவாங்க. ஒருவேள நான் கொஞ்சம் லேட்டா கல்யாணம் பண்ணிக்கிறேன்மா பொண்ண சொன்னாலும் உன் வயசு(Age) பொண்ணுங்க கல்யாணம் ஆகி கைல ஒண்ணு, இடுப்புல ஒண்ணுன்னு ரெண்டு கொழந்தைக்கு அம்மா ஆகிட்டாங்க. நான் பேரப்புள்ளைங்கள பாக்க வேணாமான்னு ஆரம்பிச்சிடுவாங்க.


இதுக்காகவே நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணும். ஒருசிலவங்களுக்கு ஆறு மாசத்துலயே கல்யாணம் முடிஞ்சிடும்.சிலருக்கு
நாலஞ்சு வருஷம் கூட ஆகும். கேட்டா எதுவும் நம்ம கைல இல்லன்னு சொல்வாங்க. எது எப்படியோ இங்க ஒவ்வொருத்தவங்களுக்கும் அவங்களோட ராசிப்படி(Zodiac) எந்த வயசுல கல்யாணம் ஆகும்னு? சொல்லிருக்கோம். இத படிச்சு உங்க ராசிக்கு(Zodiac) எந்த வயசுல கல்யாணம் ஆகும்னு தெரிஞ்சுக்கங்க.


மேஷம்


மற்ற எல்லா ராசிகளையும் ஒப்பிடும்போது உங்களுக்கு பொறுமை என்பது சற்று குறைவுதான். மேஷ ராசிக்காரர்களைப் பொறுத்தவரை 22-27
வயதுக்குள் திருமணம் ஆகும். பொறுமையற்று இருப்பது, உணர்ச்சி வசப்படுவது ஆகியவை இந்த ராசிக்காரர்களுக்கு அதிகமாக இருக்கும். எனினும் திருமணம் என்பது நீண்டகால பந்தம் என்பதால், இந்த மாதிரி உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது உங்களுக்கு நல்லது.ரிஷபம்

உறவைப் பொறுத்தவரையில் நீங்கள் மிகவும் பொறுப்பு மிகுந்தவர். நீங்கள் ரொமான்சை விரும்புபவராக இருப்பீர்கள், எனினும் ஒரு மனிதரின்
உள்ளும்-புறமும் அறிந்து கொள்ளும் வரையில் நீங்கள் காத்திருப்பது மிகவும் முக்கியம். அவசர,அவரசமாக திருமணம் செய்வதில் உங்களுக்கு விருப்பம் இருக்காது. திருமணத்திற்கு ஏற்ற சரியான நபரை நீங்கள் அறிந்து கொள்ள 30 வயது(Age) வரை காத்திருப்பது அவசியம்.


மிதுனம்


நீங்கள் ஒரு குழப்பவாதி. ஒரு நிலையான உறவு இருந்தால் நீங்கள் அதில் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என யோசித்து பாருங்கள். உங்கள்
வாழ்க்கையின் மிகப்பெரிய ஒரு முடிவை எடுக்கும்போது நீங்கள் அதிக முதிர்ச்சி உடையவராக இருக்க வேண்டும். உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.30-களின் ஆரம்பத்தில் திருமணம் செய்துகொள்வது உங்களுக்கு நல்லது.கடகம்


நீங்கள் குடும்பத்தின் மீதும் குடும்ப உறுப்பினர்கள் மீதும் மிகுந்த அன்பு வைத்திருப்பீர்கள். உங்களுக்கு நிலையான உறவின்மீது மிகுந்த நம்பிக்கை
இருக்கும். அதனால் நீங்கள் 20 வயதின்(Age) ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்.


சிம்மம்

ஒரு நபரைப்பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளும்வரை நீங்கள் எந்தவொரு முடிவையும் எடுக்க மாட்டீர்கள். ஒரு சீரான முடிவை எடுக்கும்வரை
நீங்கள் காத்திருக்க விரும்புகிறீர்கள். எனவே 30 வயதில் திருமணம் செய்துகொள்வது உங்களுக்கு நன்மையாக இருக்கும்.


கன்னி


நீங்கள் பரிபூரணத்தின் பிரதிபலிப்பாக இருப்பீர்கள். நீங்கள் ஒரு முதிர்ச்சியான நபராகவும், சூழ்நிலையை சரியாக கையாளத் தெரிந்தவராகவும் இருப்பீர்கள். இதனால் 27 வயதில்(Age) நீங்கள் தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். 30 வயதுக்குள் உங்கள் வாழ்க்கையை பணம், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் சமநிலையாக வைத்துக்கொள்வது நல்லது.துலாம்


திருமணம் என்னும் வார்த்தையே உங்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகளை அளிக்கக்கூடும். முடிவில் நீங்கள் வருத்தப்படக்கூடிய அவசரமான முடிவுகளை எடுப்பீர்கள். திருமணமான பிற தம்பதியர்களைப் பார்த்து திருமணம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது என எண்ணிக்கொள்ளாதீர்கள். 20-களின் ஆரம்பத்தில் ஒருவேளை நீங்கள் திருமணம் செய்வதாக இருந்தால் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். உங்கள் ராசிப்படி(Zodiac) 28-29 வயதில் திருமணம் செய்துகொள்வது உங்களுக்கு நல்லது.


விருச்சிகம்


ஒரு உறவில் உண்மையாக நம்பிக்கை வைப்பது உங்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கும். நீங்கள் ஒரு உறவில் இருந்தாலும் கூட அதை
திருமணமாக மாற்றுவதற்கு உங்களுக்கு நிறைய தயக்கங்கள் இருக்கும். திருமணத்தைப் பொறுத்தவரையில் உங்களுக்கு 30 வயது வரும்வரை
காத்திருப்பது நல்லது. அதுவரை திருமணத்தைப் பற்றி எந்தவொரு பயங்கர கனவையும் காணாதீர்கள்.


தனுசு


உங்கள் வழியில் செல்வது தான் உங்களுக்கு பிடிக்கும். அதற்காகவே மற்ற அனைவரையும் விட உங்களை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய
வாழ்க்கைத்துணை உங்களுக்குத் தேவை. 30 வயதிற்குப்பின் திருமணம் செய்துகொள்வது உங்களுக்கு நல்லது. நல்ல விஷயங்களுக்கு நேரம் எடுக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.மகரம்நீங்கள் உங்கள் சுதந்திரத்தை இழப்பதற்கோ அல்லது கமிட்மெண்டுகளுக்கோ பயப்பட மாட்டீர்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கென சில
இலக்குகளையும், குறிக்கோளையும் வைத்திருப்பீர்கள். அதில் குழப்பம் விளைவித்திட நீங்கள் யாரையும் அனுமதிக்க மாட்டீர்கள். உங்கள் ராசி (Zodiac) உங்களது திருமணம் குறித்து தெரிவிப்பது என்னவென்றால் 25 வயதில் நீங்கள் தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம்.


கும்பம்

எதிர்பாலினத்தவரை ஈர்ப்பது என்னும் கொள்கை உங்களுக்கு சுத்தமாக ஆகாது. உங்களைப்போன்ற குணங்கள் கொண்ட ஒருவரையே உங்கள் வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுக்க நினைப்பீர்கள். அதற்கு சிறிது காலம் எடுக்கக்கூடும் அதனால் கூலாக இருங்கள். உங்கள் ராசிப்படி(Zodiac) 30 வயதில் திருமணம் செய்து கொள்வது உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது.மீனம்


காதல் கதைகளில் அதிக நம்பிக்கை கொண்ட பாலிவுட் வகையினரை சேர்ந்தவர் நீங்கள். காதலில் விழுந்து பாலிவுட் படங்களில் வருவதுபோல திருமணம் செய்துகொள்ள விரும்புவீர்கள். ஆனால் சரியான நேரம் வரும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். படங்களைப் போல நிஜ வாழ்விலும் இருக்க வேண்டும் என எண்ணாதீர்கள்.POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.