22 வருடங்களுக்குப்பின் மீண்டு(ம்) வருகிறார் 'இந்தியன்' தாத்தா

22 வருடங்களுக்குப்பின் மீண்டு(ம்) வருகிறார்  'இந்தியன்' தாத்தா

சுமார் 22 வருடங்களுக்குப்பின் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் (Kamalhaasan) இந்தியன்(Indian) படத்தின் 2-வது பாகத்தில் நடிக்கவுள்ளார். 1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில்,சுஜாதா வசனத்தில் வெளியான இந்தியன்(Indian) திரைப்படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.லஞ்சத்துக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது.


சுகன்யா,கஸ்தூரி, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்ட்கர், கவுண்டமணி, செந்தில்,மனோரமா என ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். தந்தை கமல் லஞ்சத்துக்கு எதிரானவராகவும், மகன் கமல் லஞ்சம் பெற்று அரசாங்க வேலைக்கு செல்பவராகவும் காட்சிகள் இருக்கும். மேலும் தந்தை கமல்(Kamal) லஞ்சம் கொடுக்க மறுப்பதால் அவரது மகள் கஸ்தூரிக்கு சிகிச்சை மறுக்கப்பட்டு அதனால் அவர் இறந்து விடுவார். இதைத் தொடர்ந்து லஞ்ச,லாவண்யத்திற்கு எதிராக கமல்(Kamal) சாட்டையை சுழற்றுவதே இந்தியன்(Indian) படத்தின் கதை.


22 வருடங்களுக்கு முன்பாகவே கமல்(Kamal)-ஷங்கர்(Shankar) கூட்டணியில் வெளியான இப்படம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஷங்கர்-கமல் கூட்டணியில் இந்தியன் படத்தின் 2-வது பாகம் தற்போது உருவாகிறது. இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறார்.


ஷங்கர்(Shankar)இந்தியாவின் பிரமாண்டமான இயக்குநர் என பெயரெடுத்த ஷங்கர்(Shankar) ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன், அந்நியன், சிவாஜி என தொடர்ந்து தன்னுடைய படங்களில் சமூகத்தில் நடக்கும் அவலங்களை காட்சிப்படுத்தி வருகிறார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 2.O திரைப்படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்குப்பின் இந்தியன் படத்தின் 2-வது பாகத்தினை ஷங்கர் இயக்கவுள்ளதால் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


கமல்ஹாசன்(Kamalhaasan)அரசியலுக்கு வந்து விட்டதால் விரைவிலேயே சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிடுவேன் என கமல்(Kamal) அறிவித்து உள்ளார். இந்த தருணத்தில் கமலின் கேரியரில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான இந்தியன் படத்தின் 2-வது பாகத்தில் அவர் நடிப்பது இப்படத்துக்கு எக்கசக்க எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதவிர கமல் தற்போது அரசியல்வாதியாகவும் உள்ளதால் நடப்பு நிலவரங்கள் இப்படத்தில் காட்சிகளாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


நடப்பு நிலவரங்கள்:தமிழகத்தில் தற்போது நீட் தொடங்கி மீத்தேன் வரை எக்கசக்கமான பிரச்சினைகள் நிலவுகின்றன. சமூக வலைதளங்களின் பங்களிப்பால் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியிலும் அரசியல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் இந்தியன் 2 படம் வெளியாவதால் நடப்பு நிலைமைகள் குறித்த காட்சிகள் இப்படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியன் தாத்தாகாலம் காலமாக தமிழ் சினிமாவில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் ஹீரோக்கள் நடித்தால் அப்பாவுக்கு ஒரு துன்பம் ஏற்படும். அப்போது மகன் வந்து அநியாயத்தை தட்டிக் கேட்பது போல தான் காட்சிகள் இருக்கும். அப்படி இல்லாமல் மகன் லஞ்சம் கொடுத்து வேலைக்கு செல்வதைக் கண்டிக்கும் தந்தை, லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க லஞ்சம் வாங்குபவர்களை களையெடுப்பது என அப்பா கமல் இந்தியன் தாத்தாவாக இதில் வெரைட்டி காட்டி இருப்பார். அவருக்கு உறுதுனையாக சுகன்யா இருப்பது போல காட்சிகள் இருக்கும்.


22 வருடங்கள்22 வருடங்கள் கழித்து ஷங்கர் இயக்கப்போகும் இப்படத்திலும் அப்பா கமலே பிரதான கதாபாத்திரமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.எனினும் காஜல் அகர்வால் நாயகியாக இருப்பதால் இதில் தந்தை-மகன் என் இரட்டை வேடங்களில் கமல் நடிக்கிறாரா? இல்லை வெறும் தந்தை கதாபாத்திரமே பிரதான வேடமாக இருக்குமா? என்பது தெரியவில்லை.இதுதவிர ஷங்கரின் மேக்கிங் மற்றும் திரைக்கதை மேஜிக் இந்தியன்,முதல்வன் படங்களைப் போல இப்படத்திலும் இருக்கும் என ரசிகர்கள் எக்கக்சக்க எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர். எனினும் பாக்ஸ் ஆபீஸில் சொல்லி அடித்த படமென்பதாலும்,லஞ்ச லாவண்யத்திற்கு எதிரான படமென்பதாலும் இந்தியன் 2 படத்திற்கு ரசிகர்களுடன் இணைந்து நாமும் காத்திருக்கலாம்.POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,தமிழ்,தெலுங்கு,மராத்தி மற்றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.