ஒரு பிரேக்கப்பைக் (breakup) கடந்து வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. மறக்க நினைக்கும் நபர்தான் நம் கண்முன் வருவார் அல்லது நினைவுகளில் நிற்பார். இந்த மாதிரி மனம் உடைந்த நேரங்களில் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் சோஃபாவில் சாய்ந்தபடி அங்குமிங்கும் புரண்டபடி ஒரு சில திரைப்படங்களைக் காணலாம்.
அது உங்கள் எண்ணங்களை மாற்றுவது மட்டுமல்ல ஒரு சில படங்கள் உங்களுக்கு நம்பிக்கையும் ஊட்டலாம். உங்கள் முடிவுகளில் இருந்து ஒரு ஆரம்பத்தை உங்கள் கைகளில் நீட்டலாம்.
ஆகவே உங்கள் கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள். பாப்கார்னை கையில் வைத்துக் கொண்டு நாங்கள் சொல்லும் சில படங்களைப் பாருங்கள். அனிமேஷன், காமெடி, மற்றும் ரொமான்ஸ் வகைகளை சார்ந்த இந்தப் படங்கள் நீங்கள் இந்த உலகில் தனியானவர் அல்ல என்பதைப் புரிய வைக்கும்.
நிகோலஸ் ஸ்டால்லர் இயக்கிய இந்தப் படம் பிரேக்கப்பிற்குப் பின் நீங்கள் பார்க்க வேண்டிய முதல் படம். தனது கேர்ள் பிரெண்ட் சாரா தன்னை ஏமாற்றிய பிறகு அவைக்கு பறக்கிறான் பீட்டர். தனது காதல் ஏமாற்றத்தை மறக்க அவன் சென்ற அதே ஹோட்டலுக்கு அவன் காதலி புது காதலனுடன் வருகிறாள். உங்கள் இதய வலிகளை மறக்க செய்யும் ஒரு நல்ல காமெடி படம் இதுதான். சிரித்து சிரித்து உங்கள் மனம் லேசாகி விடும்.
நிகோலஸ் ஸ்பார்க்கின் புத்தகத்தின் அடிப்படையில் அதே தலைப்பில் எடுக்கப்பட்ட இப்படம் உங்களுக்கு மன ஆறுதலைத் தரலாம். தனது பதின்ம வயதில் காதலில் விழும் நாயகிக்கு விதி வேறொரு முடிவை வைத்திருக்கிறது என்பதை இறுதியில் புரிந்து கொள்ளலாம். அமெரிக்க நட்சத்திரமான மாண்டி மூர் தனது சிறப்பான நடிப்பை இதில் வெளிப்படுத்தியிருப்பார். அழுது தீர்க்க விரும்பினால் இந்தப் படம் ஒரு நல்ல சாய்ஸ்.
இது ஒரு இம்தியாஸ் அலியின் அற்புத படைப்பு. தனது முதல் படத்திலேயே சோகத்தில் உள்ள ஒருவனையும், காதலில் நிரம்பி வழியும் ஒருவளையும் ஒன்றாக சந்திக்க வைத்து அதன் மூலம் அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை உணர்வுபூர்வமாகவும் நகைச்சுவையோடும் படம் எடுத்திருப்பார். பழையதைக் களைந்து புதிய வாழ்க்கையில் நுழைவது எத்தனை ஆரோக்கியமானது என்பதை இப்படம் நமக்கு சொல்லும்.
ரிச்சர்ட் கர்டிஸ் இயக்கிய இந்தப்படம் பலவிதமான முக்கிய நட்சத்திரங்களைக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் அன்று வெளியானது. எட்டு ஜோடிகளின் உணர்வுகளை படமாக்கியது இதன் சிறப்பு. இவர்களுக்குள் ஒரே ஒற்றுமை காதல். இது ஒரு நல்ல உணர்வுகளைத் தரக் கூடிய படம்.
பிக்ஸாரின் இந்தப்படம் மகன் மீது அதீதப்பாசம் கொண்ட ஒரு தகப்பனின் காதல் பற்றியது! இந்தப்படம் வெறும் அனிமேஷன் மட்டுமல்ல நமக்கு நல்ல செய்திகளைத் தரக் கூடிய ஒரு படம்.
நியூயார்க்கின் நவீன சிண்ட்ரெல்லா கதை. வேன் வாங் இயக்கிய இந்தப்படம் ரொமான்டிக் காமெடி வகையை சார்ந்தது. ஜெனிபர் லோபஸ் நடித்த இந்த படம் எல்லாவற்றையும் விட உங்கள் தன்னம்பிக்கை மிக உயர்ந்தது என்பதையும் அது இருந்தால் நீங்கள் எதையும் கடந்து செல்லலாம் என்பதையும் உங்களுக்கு கூறும் படம்.
இந்த பாலிவுட் படம் நட்பு, காதல் தோல்வி என பல்வேறு விஷயங்களைக் கொண்ட படம். அமீர்கான், சைப் அலிகான், அக்ஷய் கண்ணா மற்றும் ப்ரீத்தி ஜிந்தா நடித்த இந்தப்படம் உங்களை உங்கள் துயரங்கள் தாண்டிப் புன்னகைக்க வைக்கும். உங்கள் நண்பர்களோடு ஒரு ரோடு ட்ரிப் போக வைக்கும்.
வாழ்க்கை என்பது முழுமையாக வாழ்ந்து பார்க்க வேண்டிய ஒன்று என்பதை நமக்கு புரியவைக்கும் இந்தப்படம். ஜோயா அக்தரின் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், பார்ஹான் அக்தர் மற்றும் அபே டியோல் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இந்தப் படம் உங்களை பழைய நிலைக்கு கொண்டு வந்து விடும்.
எதிரெதிர் துருவங்கள் சந்திக்கும் போது என்ன நடக்கும் ? வேறு வழியே இல்லாமல் உங்கள் கடந்த காதலை விட்டு நீங்கள் விலக வேண்டி வந்தால் என்னாகும் ? இதற்கான பதிலையும் உங்கள் வாழ்விற்கான விடையையும் ஒரு சேர இந்தப்படத்தில் நீங்கள் கண்டுகளிக்கலாம். ப்ராட்லி கூப்பர் மற்றும் ஜெனிபர் லாரன்ஸ் உடன் முக்கிய வேடத்தில் ராபர்ட் டி நீரோ வும் இதில் நடித்துள்ளார்.
இந்தப்படத்தின் நாயகி தனது இதயத்தில் ஏற்பட்ட காதல் முறிவைக் கடக்க ஒரு சட்டக்கல்லூரியில் சென்று சேர்கிறார். அதன்பின் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் எல்லாம் நகைச்சுவை மட்டும் விளையாட்டானவை என்றாலும் எல்லியின் வார்த்தைகள் முக்கியமானது! " நான் உனக்காக நிறைய அழுதுவிட்டேன். அதுவே போதும் உன்னை மறந்து விட. "
ஒரு வித்யாசமான காதல் கதை. ஜூலியா ராபர்ட்ஸ் ரிச்சர்ட் ஜெரியின் இதயத்தை கவரும் காதல் கதை. இந்த உலகின் அத்தனை சந்தோஷங்களையும் அனுபவிக்க நீங்கள் தகுதியானவர்தான் பெண்ணே! ஆகவே இந்தப் படம் அதற்கான ஒன்று.
ஜூலியா ராபர்ட் தனது காதலுக்காக போராடுவார் , இறுதியில் அந்தக் காதல் அவரைக் கை விட்டு விடும். அதனால் என்ன அதற்காக அவர் தனது முயற்சிகளை நிறுத்த மாட்டார். இந்தப் படம் உங்களை அழ வைக்கும் அதே சமயத்தில் உங்களை ஊக்கப்படுத்தும். இதில் உள்ள Say a little prayer for you பாடல் உலகளவில் அனைவராலும் பாடப்பட்டது.
ஒரு உறவு முறிந்த உடன் உங்கள் மனம் நடுங்கிக் கொண்டிருக்கலாம். உடைந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதற்காக நீங்கள் உடைந்து விட்டதாக அர்த்தமில்லை இதைப் பற்றிய கதைதான் இந்தப்படம். ரியல் மரபி இயக்கிய இப்படத்திலும் ஜூலியா ராபர்ட்ஸ் தான் நாயகி. உங்களை நீங்களே எப்படி மீட்டெடுக்கலாம் என்பதை பற்றி நமக்கு சொல்லித் தரும் அழகிய படம்.
ரிச்சர்ட் கர்டிஸ் எழுதியதில் மிக சிறந்த படைப்பாக இந்தப் படம் பார்க்கப்படுகிறது. ஹ்யு க்ராண்ட் அண்ட் அவரது நகைச்சுவையான ரூம் மேட் இருவர் செய்யும் கூத்துக்கள் நம்மை நகைச்சுவையின் உச்சத்தை அனுபவிக்க வைக்கும். எல்லா முடிவிற்குப் பின்னும் ஓர் ஆரம்பம் இருப்பதை இந்தப் படம் உறுதி செய்யும்.
ஜூலியா ராபர்ட்ஸிடம் இன்னும் பார்க்காத பக்கங்கள் ஏதேனும் இருக்கிறதா? நம் அத்தனை உணர்வுகளையும் வெளிக்கொண்டு வந்து இன்னும் நம்மை சிறப்பாக உணரவைக்க இந்தப்படம் உதவி செய்கிறது. உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படம், உண்மையில் ஒரு வக்கீல், சமூக சேவகியாக வாழ்ந்த ஒரு பெண்ணைப் பற்றியது.
கொஞ்சம் பழைய படம்தான் என்றாலும் மிகத் தேவையான படம். மூன்று பெண்கள் அவர்களின் கணவர்கள் அவர்களை ஏமாற்றிய பின் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை. முன்பை விட சிறப்பாக, வலிமையானவர்களாக, அற்புதமானவர்களாக அவர்கள் மாறும் தருணம் நமக்கெல்லாம் நம்பிக்கையூட்டுகிற விஷயம்.
மாய உலகின் விசித்திரமான கதை, மனிதர்கள், நம்பிக்கைகள் கொஞ்ச காலத்திற்கு நம்மை பழைய வலிகளில் இருந்து மறக்க வைக்கும். இதன் எட்டு பாகங்கள் உங்களை மொத்தமாக பழைய நினைவுகளில் இருந்து விளக்கி வைக்கும்.
சில அடல்ட் படங்களை பார்க்க விரும்பினால் இந்தப் படம் அதற்குப் பொருத்தமாக இருக்கும். நிமிஷத்துக்கு நிமிஷம் நம்மை நகைக்க வைக்கும் இந்தப் படம் என்பது உறுதி.
காதல் என்பது ஒருமுறை பூப்பது மட்டும் அல்ல திரும்ப திரும்ப தொடர்வது என்பதை ஷாருக் கான் நிரூபிக்கும் அடுத்த ஒரு படம். கரண் ஜோகரின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.
இந்த க்ளாஸிக் காதல் படம் உங்கள் இதயம் விரும்புவதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி சொல்லும் படம். மிக சரியான நபரை நீங்கள் காதலித்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதையும் சொல்லும் படம். ஷாருக்கான், மாதுரி மற்றும் கரிஷ்மா கபூர் நடித்திருக்கும் இப்படத்தை யாஷ்ராஜ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
நீங்கள் மார்க் ரபால்லோ விசிறியாக இருந்தால் இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். கெய்ரா நைட்லியின் கதாபாத்திரத்தை மிக அழகாக செதுக்கி இருப்பார்கள். தனது பாய்பிரெண்ட் உடனான பிரேக்கப் (breakup) பை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை வலிமையாக சொல்லியிருப்பார்கள்.
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும் னு என்று மனம் வெதும்பி போஸ்ட் போடும் நிலைக்கு நீங்கள் சென்று விட்டீர்களா அதற்குப் பின் நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்தான் குயின். கடவுளின் முடிவுகள் என்னவாக இருக்கலாம் என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்தப் படம் உறுதுணையாக இருக்கும்.
திருமணமான சில நாட்களில் தனது கணவன் ஒரு இளம்பெண்ணிற்காகத் தன்னை விட்டு விலகிப் போய்விட வாழ்வின் 360 டிகிரி கோணங்களையும் சந்திக்கும் ஒரு பெண்ணாக இதன் நாயகி நடித்திருப்பார். அதில் இருந்து அவர் வென்று வருவது நம் அனைவருக்கும் ஊக்கமருந்தாக இருக்கும் என்பது உறுதி.
அந்தப் பழைய சோகமான நாட்களை விட்டு வெளியே வர விரும்புகிறீர்களா. நீங்கள் பார்க்க வேண்டிய படம் இதுதான். இரண்டு சிறு வயது நண்பர்கள் ஒரே தேதியில் திருமணம் செய்ய நினைக்கும்போது நடக்கும் கலாட்டாக்கள் தான் கதை.
இரண்டு ஜோடிகள் தாங்கள் யதார்தமானவர்கள் என்று நம்புகிறார்கள். காதலில் கூட தாங்கள் பிராக்டிகல் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். வேலையும் வாய்ப்புகளும் தேடி வரும்போது அதற்காகப் பிரிய முயற்சி செய்வார்கள். இது நடக்குமா? அவர்களால் பிரிந்து விட முடியுமா ? தங்களது விதியின் மீது சைப் அலிகானும் தீபிகா படுகோனும் சவால் விடுவது நடக்குமா நடக்காதா ? இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் சோகங்களை ஒதுக்கி வைத்து விட்டு சில ஹாட்டான பையன்களை ரசிக்க நீங்கள் தயார் எனில் இந்தப் படம் அதற்கானது. சானிங் டாட்டம் மின் அற்புதமான கட்டுமஸ்தான தேகத்தில் உங்களை கொஞ்ச நேரம் இளைப்பாற விடுங்கள். உங்களை விட்டுப் போன உங்கள் பாய் பிரென்ட்டிடம் அது நிச்சயம் இருக்கதுதானே!
உங்களுக்கு இப்போதைய தேவை என்ன தெரியுமா? இன்னும் கொஞ்சம் மெக் ரியான். தன்னை ஏமாற்றிய மணமகனைத் தேடி பிரான்சிற்குப் பயணம் செய்யும் ஒரு பெண் அங்கு எதிர்பாராமல் வேறொருவருடன் காதலில் விழும் கதை. உங்கள் எக்ஸ் சை நீங்கள் பின் தொடரவும் வேண்டாம் அதே சமயம் வேறொரு கிரிமினல் இடம் நீங்கள் மாட்டிக் கொள்ளவும் வேண்டாம்!
உங்கள் பிரேக் அப்பை நீங்கள் சிறந்த முறையில் கையாள நினைத்தால் அதற்கான பதில் இந்தப் படம்தான். திரும்ப திரும்ப தான் காதலில் தோற்ற பெண்ணை சந்திக்கும்போதெல்லாம் மன அழுத்தத்தில் விழும் ஒரு பையன் அவளோடு நெருங்கிப் பழகிய பின்பு ஒரு வெற்றிகரமான கலைஞன் ஆகிறான் என்பதுதான் கதை.
வாட் ஹேப்பண்ட் இன் வேகாஸ் எனும் படத்தை இந்தப் படம் காப்பியடிக்கவில்லை என்று கரண் சொல்கிறார். லாஸ் வெகாஸில் குடிபோதைக்கு நடுவே இருவர் திருமணம் செய்து கொள்கின்றனர். இது ஏதாவது கருத்து சொல்லுமா ? இருக்கலாம். பார்த்து விடுங்கள்.
பிரேக் அப் என்பது கடினமான விஷயம்தான் அதை விடவும் கடினமானது எது தெரியுமா? லிவ் இன் உறவில் இருக்கும் இருவர் அதிலி இருந்து வெளியே வராமல் இருப்பது! ஒருவர் ஆரம்பிக்கும் பொது மற்றவர் முடிக்கும் இந்த ஒரே அறைக் காதல் மிக சுவாரஸ்யமாக இருக்கும். ஒருவரையொருவர் பழிவாங்கத் துடிக்கும்போது அவர்களின் பழைய காதல் அதனை என்ன செய்யும் என்பதை பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் பள்ளிப் பருவத்திற்கு உங்களைத் திரும்பி போக செய்யும் இந்தப் படத்தை டினா பெய் இயக்கியிருக்கிறார். சாதாரணமாக போய்க்கொண்டிருக்கும் நம் வாழ்க்கையை சில பள்ளிப்பருவ நண்பர்கள் எப்படி மாற்றுகிறார்கள் என்பதை சுவாரசியமாக சொல்லியிருப்பார்கள்.
அவர் உங்களை ஏமாற்றி விட்டாரா? உங்களிடம் பொய் சொல்கிறாரா? உங்கள் மீது சரியான அக்கறை காட்டவில்லையா? இந்தப் படம் உங்களை இதில் இருந்தெல்லாம் மீட்டெடுக்கும். அர்த்தங்கள் கொடுக்கும். மூன்று பெண்களை காதலித்து ஏமாற்றும் ஒரு பையனை அவனது கர்மா எப்படியெல்லாம் வதைக்கும் என்பதை இப்படம் பார்த்து தெரிந்து கொண்டு நிம்மதியாக இருங்கள்
ஒரு கஷ்டமான நேரத்தில் உங்கள் தோழிகளுடன் நேரம் செலவிடுவது உங்களுக்கு ஆசுவாசத்தைத் தரும். கரீனா கபூர், சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர் மற்றும் ஷிகா டேஸ்லானியா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப்படம் நட்பிற்கு ஒரு உதாரணமாக இருக்கும்.
ஆரா எனும் பெண் திரைப்படக் கல்லூரியில் பெற்ற சான்றிதழை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று அர்த்தமேயில்லாத வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பாள் காரணம் கல்லூரியில் தன்னை ஏமாற்றிய காதலன். எதிர்பாராவிதமாக அவள் ஒரு ரெஸ்டாரண்டில் வேலைக்கு சேர, அங்கே செஃப் உடன் அவளுக்கு காதல் மலர்கிறது. இந்தக் கதை ஒரு பெண்ணின் மறுபக்கத்தை அவளே கண்டடையும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
மறுபடியும் இம்தியாஸ் அலியின் கைவண்ணத்தில் மலர்ந்த மற்றொரு காதல் கதை. ரன்பிர் மற்றும் தீபிகாவின் பிரேக்கப்பில் படம் ஆரம்பிக்கிறது. கோர்சிகாவில் சந்திக்கும் ரன்பீரும் தீபிகாவும் ஒருவருக்கொருவர் உண்மை சொல்லிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்களின் இதயம் அவர்களுக்காக வேறொரு உண்மையுடன் காத்திருக்கும். இம்தியாஸ் அலியின் நெஞ்சைத் துளைக்கும் காட்சிகளும் வசனங்களும் நம்மை வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்லும். வேறொரு ஆளாக நம்மை மாற்றும் மாயம் நிறைந்ததுதான் இம்தியாஸ் அலியின் படங்கள்.
பேட்ட மற்றும் விஸ்வாசம் - ப்ளஸ் அண்ட் மைனஸ்
இசைப் ப்ரியர்களுக்கான படம். பல்வேறு ஆஸ்கர்களை வென்றிருக்கிறது. ஒரு பெண்ணிற்கும் ஆணிற்கும் நடுவேயான காதலை அவர்கள் இருவரின் இலட்சியங்கள் பிரிக்கும் கதை. ரியல் கோஸ்லின் மற்றும் எம்மா தங்களின் தனிப்பட்ட நடிப்பால் பின்னியிருக்கும் இந்தப்படம் நீங்கள் பார்த்தாக வேண்டிய ஒன்று.
சோனம் கபூர் நடித்துள்ள இந்தப்படம் பிரேக்கப் (breakup) நேரங்களுக்கு ஆறுதலானது. தங்கள் நண்பர்களை ஜோடி சேர்த்து வைக்கும் சோனம் கபூர் சில சமயங்களில் எல்லை மீறி அவர்களுக்காக சில முடிவுகளை எடுக்கவும் செய்வார். இப்படி ஒரு கதையோடு சிறப்பான இசையும் சேர ஆயிஷா படம் வெற்றி பெற்றது.
அது உங்களுக்கானது என்றால் நிச்சயம் உங்களை அது வந்தடைந்தே தீரும் என்பதுதான் கதையின் கரு. இதனை நகைச்சுவையோடு சொல்லியிருப்பார் இயக்குனர். ரன்பிர், தீபிகா, கல்கி மற்றும் ஆதித்யா ராய் எப்படி வளரும்போது வெவ்வேறு இடங்களுக்கு சென்று விடுகிறார்கள் அவர்கள் எதனால் சந்திக்கிறார்கள் என்பதையும் அவர்களுக்குள்ளான நட்பின் ஆழத்தையும் புரிந்து கொள்ள இந்தப் படம் உதவி செய்யும்.
வாழ்க்கை உங்களை நோக்கி எறியும் கடினங்களை எப்படித் தாங்கி கொண்டு கடப்பது என்பது பற்றி இந்தப்படம் உங்களுக்குப் புரிய வைக்கும். தீபிகா, சைப் அலிகான் மற்றும் டயானா பென்னி மூவரும் தங்களின் இதயவலிகளை எப்படிக் கடக்கிறார்கள் என்பதுதான் கதை.
தனக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்திற்காக தெரப்பிஸ்டை நாடும் அலியா , தெரபிஸ்ட்டாக ஷாருக் வேறு என்ன வேண்டும் இந்தப் படத்தை சிறப்பாக்க. இந்தப் படம் அற்புதமாக எழுதப்பட்டது மட்டுமல்ல சிறந்த முறையில் படமாக்கப்பட்டதும் பாராட்டுக்குரியது. உங்களுக்கும் அப்படி ஒருவரின் உதவி தேவை இருப்பின் தயக்கம் இல்லாமல் அணுகுங்கள்.
காதல் முறிவுகளை ஏற்றுக் கொள்வது சரிதான் என்றாலும் , நம் வாழ்வின் ஒளியைக் கண்டுபிடிப்பதும் மிக முக்கியமான ஒன்றாகும். உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாகக் கொண்டாடுவது எப்படி என்பது பற்றி இந்தப் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
நிறைய மனிதர்களுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியை இந்தப் படம் நம்மை நோக்கி வீசுகிறது. ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக இருக்க முடியுமா என்பது பற்றிய இந்த கேள்விக்கு ஒரு பதிலாக இந்தப்படம் இருக்கிறது. தங்களுக்குள் ஏற்படும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஹாரியும் சாலியும் காதலால் தங்கள் நட்பைக் கொச்சைப்படுத்தாமல் இருவரும் அதனை தவிர்க்க என்னெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் கதை. மெக் ரயானின் அடுத்த வெற்றி படைப்பு.
காதல், உறவுகள், பிரேக்கப், மற்றும் இதய வலி போன்றவற்றை மையமாகக் கொண்ட மற்றொரு படம்.
காதலில் ப்ரேக்கப்பால் தவிக்கும் ஒரு பெண் பார்க்க வேண்டிய இன்னொரு முக்கியமான படம். ப்ராட்லி கூபர் வேறு ஹாட்டாக இருப்பார்!
உங்களை உண்மையாக நேசிப்பவரின் இதயத்தோடு நீங்கள் விளையாட மாட்டீர்கள்தானே ? அவர்கள் பேயாக மாறி நம்மை பயமுறுத்தும் வரை. காதலைப் பற்றிய தவறான அபிப்ராயதோடு இருக்கும் ஒரு பையனின் எக்ஸ் கேர்ள் பிரென்ட்டின் ஆவி அவனை பயமுறுத்தி காதல் என்றால் என்னவென்று அவனுக்கு எடுத்துரைப்பதுதான் கதை.
தலைப்பில் சொல்லப்பட்டிருப்பதைப் போலவே ஒரு இசைக்கலைஞனுக்கும் பாடலாசிரியருக்கும் இடையே ஏற்படும் காதல் பற்றிய கதை. ஹ்யு க்ராண்ட்டின் விசிறியாக யார்தான் இல்லாமல் இருப்பார்கள்? நீங்களும் பார்த்து விடுங்கள்.
--
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.