அனிஷா திருமணத்திற்கு சம்மதித்து விட்டார்! விஷாலின் சந்தோஷ ட்வீட் !

அனிஷா திருமணத்திற்கு சம்மதித்து விட்டார்! விஷாலின் சந்தோஷ ட்வீட் !

நடிகர் விஷால் தற்போது டாக் ஆப் தி டவுன் ஆகியிருக்கிறார். இவரது திருமணத்தைப் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் சில நாட்களாகவே பேசப்பட்டு வந்தன.    


நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பில் இருக்கும் நடிகர் விஷால் (Vishal) நடிகர் சங்க கட்டிடம் முடிவடைந்த உடன் தனது திருமணம் அங்கு நடைபெறும் என்று கூறியிருந்தார்.                


விஷாலின் பெற்றோர் விருப்பப்படி தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை விஷால் மனக்கப் போவதாக செய்திகள் வந்தது. இதனை மறுத்து வந்த நிலையில் நேற்றிரவு விஷால் மணமகள் அனிஷாவுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.   


        


இவர்தான் விஷாலைத் திருமணம் செய்யப் போகிறார் என்று பேச்சு பரவிய நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமான அறிவிப்பை விஷால் தெரிவித்திருக்கிறார்.             


ஆமாம். சந்தோஷமாக இருக்கிறது. ரொம்ப மகிழ்வோடு இருக்கிறேன். அவர் பெயர் அனிஷா அல்லா. அவர் என்னைத் திருமணம் செய்ய சம்மதித்து விட்டார். இது உறுதியாகிவிட்டது. என் வாழ்வில் என்னை மாற்றவிருக்கும் அடுத்த கட்டத்திற்கு நான் தயார் ஆகிறேன். வெகு விரைவில் திருமண தேதியைக் கூறுகிறேன். கடவுள் எங்களை ஆசிர்வதிக்கட்டும்              


என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் குறிப்பிட்டுள்ளார்.          


விஷாலின் மனைவியாகப் போகும் அனிஷா ரெட்டி அர்ஜுன் ரெட்டி என்கிற வெற்றி படத்தில் நாயகியின் தோழியாக நடித்திருப்பார்.


இந்தத் திருமணம் இருவர் பெற்றோரும் பார்த்து ஏற்பாடு செய்கிற திருமணம் என்பதால் தனது வருங்கால மனைவியைத் தான் காதலிக்க ஆரம்பித்திருப்பதாக விஷால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.    விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆனது முதல் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இவருக்கும் இதே துறையை சேர்ந்த ஒருவருக்கும் காதல் இருந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது. பொது வாழ்வில் அதிரடியாக வேலை செய்யும் விஷால் தனது தனிப்பட்ட வாழ்வில் பெற்றோர் ப்ரியத்திற்கு ஏற்றாற்போல நடந்து கொள்வது ஆச்சர்யமாக இருக்கிறது.             விஷால் தனது திருமணத்தை உறுதி செய்து ட்வீட் செய்த சில நிமிடங்களில் அவரது நெருங்கிய நண்பரான நடிகர் விஷ்ணு விஷால் "ஒரு ஆடு சிக்கி விட்டது அடுத்த ஆடு ஆர்யாதான்" என்று இவர்கள் திருமணத்தை கேலி செய்திருந்தார்!           


ஆர்யாவுக்கும் விஷாலுக்கும் இடையிலான நட்பு பற்றி சினிமா உலகம் நன்கு அறிந்த ஒன்றுதான் என்பதால் இதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிய வருகிறது.                 


 --


 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.