ஜோஜோபா எண்ணை – சருமம் மற்றும் தலை முடிக்கு கிடைக்கும் பலன்கள் | POPxo
Home
ஜோஜோபா எண்ணை – சருமம் மற்றும் தலை முடிக்கு கிடைக்கும் பலன்கள்

ஜோஜோபா எண்ணை – சருமம் மற்றும் தலை முடிக்கு கிடைக்கும் பலன்கள்

ஜோஜோபா எண்ணையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ஜோஜோபா எண்ணையின் பயன்கள்
சரும ஆரோக்கியத்திற்கு ஜோஜோபா எண்ணை
முக பருக்களை போக்க ஜோஜோபா எண்ணை
தலை முடி நன்றாக வளர ஜோஜோபா எண்ணை
ஜோஜோபா எண்ணையின் பயன்கள்
ஜோஜோபா எண்ணையை பயன் படுத்த 8 வழிகள்
இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஜோஜோபா எண்ணைகள்


ஜோஜோபா(jojoba) எண்ணை என்றால் என்ன?
அரிஜோன மற்றும் மேசிகோவில் வளரும் ஜோஜோபா செடியில் இருந்து தயாரிக்கப் படுவது இந்த ஜோஜோபா எண்ணை. சற்று வறுத்த மனத்தோடும் தங்க நிற சாயலோடும் இது இருக்கும். இதன் அறிவியல் பெயர், சைமண்ட்சியா சினென்சிஸ். இதை சரியாக உச்சரிப்பது எப்படி என்றால், ‘ஜ’ பதிலாக ‘ஹ’ போட்டு, ‘ஹோ-ஹோ-ப’ என்று அழைக்க வேண்டும். எனினும் ஜோஜோபா என்றே அனேகமானவர்கள் அழைப்பார்கள். இதை எண்ணை என்று அனைவரும் அழைத்தாலும், இது ஒரு திரவ நிலையில் இருக்கும் தாவிர மெழுகு.இது எடை குறைவாக இருக்கும். இதன் மூலக்கூறு கட்டமைப்பு நம் சருமங்களில் இயற்கையாக இருக்கும் எண்ணையில் கட்டமைப்பை போன்றது. இந்த குறிப்பிட்ட தரம் இந்த எண்ணையை உங்கள் சருமத்திற்கு மேலும் பலன் தரக்கூடியதாக ஆக்கும். இதன் நோய் எதிர்ப்பு சக்தி, உங்கள் சருமத்திற்கும் தலை முடிக்கும் அதிக பாதுகாப்பையும் பலன்களையும் தரும். மேலும் இதற்கு நீண்டு பலன் தரக்கூடிய தன்மை உள்ளது. இது ஒரு இயற்க்கை சரும பாதுகாப்பு பொருளாகும்.


இதில் வைட்டமின் பி, சி மற்றும் இ மற்றும் செம்பு மற்றும் ஜின்க் போன்ற கனிமங்களும் இதில் உள்ளது. மேலும் வைட்டமின் மற்றும் கனிமங்கள் இதில் இருப்பதால் பல ஆரோக்கிய நலன்களை இந்த எண்ணை உங்களுக்குத் தரும். உங்கள் சருமத்தில் இதை தடவும் போது சரும உற்பத்தியை சீர் படுத்தும். மேலும் உங்கள் சருமத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து மென்மையாக்கும். உங்கள் தலையில் இதை தடவும் போது வறண்ட தலைக்கு ஈரத்தன்மையை தருவதோடு வேறு எந்த பிரச்சனைகள் இருந்தாலும் அதை சரி செய்யும். மேலும் இது உங்கள் தலை முடிக்கு நலல் பலத்தை தங்கு, அடர்த்தியாகவும் நன்றாகவும் வளர உதவும்.ஜோஜோபா(jojoba) எண்ணையின் பலன்கள்
ஜோஜோபா என்னை அனைத்து வகையான சருமங்கள் மற்றும் தலை முடிகளுக்கு ஏற்றதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். பல வழிகளில் நீங்கள் இந்த எண்ணையை பயன் படுத்தலாம். இதை நீங்கள் மற்ற தேவையான எண்ணைகளோடு கலந்தும் பயன் படுத்தலாம். இதனுடன் நீங்கள் தரமான தலைக்கு தேய்க்கும் எண்ணை மற்றும் மாய்ஸ்ச்சரைசர்கள், மேலும் தலை அலச உதவும் ஷாம்ப்பூ போன்றவற்றுடனும் பயன் படுத்தலாம். அல்லது அப்படியேவும் பயன் படுத்தலாம்.


உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு ஜோஜோபா எண்ணை
உங்கள் முகம் மற்றும் உடம்பில் உள்ள சருமம் எளிதாக நீங்கள் பயன் படுத்தும் சோப்பு, சுத்திகரிக்கும் பொருள் மற்றும் சுடுநீர் குளியலால் பாதிக்கப் படும். இவை அனைத்தும் இயற்கையாக உங்கள் சருமத்தில் தோன்றும் எண்ணையையும் பாதித்து உங்கள் சருமம் ஆரோக்கியம் இன்றி உலர்ந்து போக செய்யும். மேலும் நீங்கள் குளிர்சாதன பெட்டி இருக்கும் அறையில் அதிக நேரம் இருந்தால் மேலும் உங்கள் சருமம் வறண்டு போக வாய்ப்பு உள்ளது.


அதனால் உங்கள் சருமம் அதிக இயற்கை என்னை உற்பத்தி செய்யும் தன்மையை இழக்கின்றது. மேலும் சருமம் சீரற்ற தோற்றத்தை பெறுகிறது. உங்கள் சருமம் சீராக இல்லை என்றால் என்னவாகும்? இந்த சீரற்ற நிலை அனேக பிரச்சனைகளை உருவாக்கக் கூடும். அது பருக்கள் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும்.


ஜோஜோபா(jojoba) எண்ணையின் நற்குணங்கள் உங்கள் சருமத்தை ஈரத்தன்மையோடு வைத்துக் கொள்வதோடு பல நன்மைகளையும் உங்களுக்குத் தரும். அது ஒரு பாதுகாப்பான் போல செயல் படுகிறது. இதனால் உங்கள் சருமத்தில் இயற்கையாக உற்பத்தியாகும் எண்ணைகளை அது சீர் செய்து தேவைப்படும் அளவிற்கு உற்பத்தி செய்ய வைக்கின்றது. அது சருமத்தில் இயற்கையாக உருவாகும் எண்ணையைப் போல செயல் படுவதால் உங்கள் சருமன் தன்னைத்தானே சீர் செய்து கொள்ள முயற்சி செய்கிறது. இதனால் உங்கள் உடலுக்கும் முகத்திற்கும் நல்ல ஆரோக்கியமும் பொலிவும் கிடைக்கிறது.மேலும், இந்த ஜோஜோபா எண்ணை சருமத்தில் தோன்றும் எந்த விதமான வீக்கம், எரிச்சல் மற்றும் உபாதைகளையும் விரைவாக சரி செய்து விடும் தன்மை கொண்டது. அதனால் உங்கள் சருமத்தில் இருக்கும் பக்டீரியாவை தவிர்க்க முடியும். மேலும் விரைவாக நீங்கள் நல ஆரோக்கியமான சருமத்தை பெறவும் உதவும்/ பருக்கள், தழும்புகள், மற்றும் காயங்கள் போன்றவற்றை அது குணப்படுத்த உதவும். வெட்டு, காயம், வடுகு போன்றவற்றையும் சிறப்பாக குணப்படுத்தும். நீங்கள் உங்கள் சருமம் விரைவாக குணமடைந்து சீர்பெருவதை கண்டு ஆச்சரியப் படுவீர்கள்.


பருக்கள் குணமடைய ஜோஜோபா(jojoba) எண்ணை
எண்ணை அதிகம் இருக்கும் சருமத்தின் மீது மேலும் எண்ணையை தடவுவது சற்று அசௌர்கரியம் தரக்கூடிய செயலாக தோணலாம். மேலும் இது உங்களுக்கு பருக்களை அதிகமாக்ககூடுமோ என்ற ஐயத்தையும் தரலாம். எனினும், இந்த ஜோஜோபா எண்ணை நீங்கள் எண்ணுவது போல இல்லை. அது உங்களுக்கு முக பருக்களில் இருந்து முற்றிலுமாக விடுபட உதவும். மேலும் இது இலகுவாகவும் ஒட்டாமலும் இருக்கும். உங்கள் சருமத்திர்க்குள் நன்கு உரியப்படும். எந்த ஒரு எரிச்சலையும் இது ஏற்படுத்தாது. மேலும் சருமத்தில் இருக்கும் துகள்களை அடிக்காது. இதில் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்திருக்கின்றது. உங்கள் சருமத்தில் இருக்கும் காயங்கள், போன்றவற்றை குணப்படுத்தி சீர் செய்ய உதவும். இந்த நற்குணங்கள் இருப்பதால், இது முகப்பருக்களை குணப்படுத்த பெரிதும் உதவியாக உள்ளது.


தொடர்ந்து இந்த ஜோஜோபா எண்ணையை பயன் படுத்தி வருவதால், உங்கள் சருமத்திற்கு ஈரத்தன்மை கிடைப்பதோடு சீரான தோற்றமும் கிடைக்கிறது. மேலும் சருமத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்கிறது. பக்டீரியா வளர்ச்சியை தடுக்கிறது. இதனால் எந்த தோற்றும் சருமத்தில் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. இதன் நோய் எதிர்ப்பு சக்தி தன்மை அதிகமாக இருப்பதால், அதனால் எந்த நோய் தொற்றையும் எதிர்த்து போராட முடியும். இதனால் பருக்களில் இருக்கும் பக்டீரியாக்களை போக்கி விரைவாக குணமடைய செய்யும்.தலை முடிக்கு ஜோஜோபா எண்ணை
உங்கள் தலை முடியையும் வேர்களையும் பலப்படுத்த இந்த ஜோஜோபா எண்ணை பெரிதும் உதவியாக இருக்கிறது. இதன் இலேபனம் தன்மை இதை ஒரு சிறந்த தலைக்கு தேய்க்கும் என்னையாகவும் வேர்களை பலப்படுத்தும் தீர்வாகவும் ஆக்குகிறது. இதன் ஒட்டா தன்மை, இலகுவான தன்மை மற்றும் மிதமான மனம் இதை உங்கள் தலை முடிக்கும் வேர்களுக்கும் ஏற்றதாக ஆக்குகிறது. இதை சுலபமாகவும் அலசி விடலாம். இதனால் தலையில் எந்த பிசுபிசுப்பும் இருக்காது. இதன் சரும கட்டுப்பாட்டு பண்புகள், உங்கள் தலையில் இந்த எண்ணையை தேய்க்கும் போது அடர்ந்த முடிகளின் உற்பத்தியை அதிகப்படுத்தும். இது, உங்களுக்கு வறண்ட தலை முடி, பொடுகு மற்றும் பல பிரச்சனைகள் இருந்தால் அதை சரி செய்ய அதிகம் பயன் படும். இந்த என்னை மேலும் தலை முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும். முடி உதிர்வை குறைக்கும். மேலும் தலை முடி வெடிப்பை குறைக்கும். இது உங்கள் தலை முடியை ஈரத்தன்மையோடு வைத்திருக்க உதவும். மேலும் சேதங்களை குறைத்து நீங்கள் விரும்பும் சிகை அலங்காரத்தை செய்ய உதவும். மேலும் சுருளை முடியை குறைக்கவும் இது உதவும்.


இப்போது உங்களுக்கு இந்த ஜோஜோபா எண்ணையின் பல பயன்கள் தெரிந்திருக்கும். இனி, இந்த எண்ணையை தொடர்ந்து பயன் படுத்துவதால் ஏற்படும் பலன்களை பற்றி பார்க்கலாம்.


ஜோஜோபா எண்ணையின் நற்பலன்கள் என்னென்ன?
ஜோஜோபா எண்ணை சிறந்த ஈரத்தன்மை ஏற்படுத்தக்கூடிய நற்குணம் கொண்டது. இது உங்கள் சருமம் மற்றும் தலை முடி பாதுகாப்பிற்கு சிறந்த தீர்வாக இருக்கும். இதன் பல நற்குணங்கள் மற்றும் பலன்கள், நீங்கள் இதனை முகத்தில், தலை முடி மற்றும் உங்கள் தேக ஆரோக்கியத்திற்காகவும் பயன் படுத்த ஏதுவாகிறது. இதனால் எந்த உபாதைகளும் ஏற்படாது. மேலும் இது ஒரு சிறந்த இயற்கை ஹைட்ரேடராகவும் செயல் படுகிறது. இந்த மந்திர எண்ணை பல
நன்மைகள் தருவதோடு உங்களுக்கு மேலும் பல பலன்களையும் தருகிறது.


பின் வருபவை, உங்கள் சருமம் மற்றும் தலை முடிக்கு எப்படி இந்த ஜோஜோபா எண்ணை பலன் தருகிறது என்பதை பற்றிய விவரம்:
ஜோஜோபா எண்ணையால் சருமத்திற்கு கிடைக்கும் பலன்கள்


சருமத்திற்கு ஈரத்தன்மையை தருகிறது
நீங்கள் இந்த ஜோஜோபா எண்ணையை முகம் மற்றும் தேக சருமத்திற்கு ஈரத்தன்மை தரக்கூடியதாக பயன் படுத்தலாம். ஒரு சில சொட்டு இந்த எண்ணையை எடுத்து உங்கள் முகம் மற்றும் தேகத்தில் தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து குளித்து விடவும். நீங்கள் சிறு துளிகள் எண்ணையை உங்கள் முகத்திற்கும் பூசும் கிரீமோடும் சேர்த்து தேய்க்கலாம். மேலும் உங்கள் தேகத்திற்கு தடவும் மாயச்சுரைசரோடும் சேர்த்து தடவலாம். இது உங்கள் சருமத்தை மிருதுவாக்கும். மேலும் எந்த நோயும் ஏற்படாமல் காக்கும்.


முக ஒப்பனைகளை அகற்ற உதவும்
இந்த எண்ணையை நீங்கள் முக ஒப்பனையை அகற்ற பயன் படுத்தலாம். மற்ற எண்ணைகளை விட இந்த எண்ணை விரைவாக செயல் படும். மேலும் இது ஒரு இயற்க்கை தீர்வு என்பதால் உங்கள் சருமத்திற்கும் எந்த தீங்கும் ஏற்படாது. இது உங்கள் சருமத்தை முற்றிலுமாக சுத்தப்படுத்தும். சருமத்தில் இருக்கும் அசுத்தத்தை அகற்ற உதவும். சில துளிகள் ஜோஜோபா எண்ணையை கையில் எடுத்துக்கொண்டு ஒப்பனை செய்திருக்கும் இடத்தில் நன்கு தேய்த்து பின் சுத்தமாக கழுவி விட்டால் உங்கள் முகம் புது பொலிவு பெரும்.


ஜோஜோபா எண்ணை உங்கள் உதடுகளை மிருதுவாக்கும்
ஒரு சில துளிகள் ஜோஜோபா எண்ணையை எடுத்துக் கொண்டு உங்கள் உதடுகளில் இரவு தூங்க செல்லும் மும் இதமாக தேய்த்து மசாஜ் செய்து விட்டு தூங்க செல்லவும். அல்லது உதட்டு சாயம் பூசும் முன் இந்த எண்ணையை தடவினால் நல்ல பலன்களைத் தரும். இது உங்கள் உதடுகளுக்கு மிருதுவான உணர்வைத் தரும். மேலும் இதை நீங்கள் எந்த பெட்ரோலிய ஜெல்லி அல்லது உதட்டு தையலத்தோடும் பாதுகாப்பாக பயன் படுத்தலாம். இது உங்கள் உதடுகளை மிருதுவாகவும் மேலும் ஈரத்தன்மையோடும் வைத்துக் கொள்ள உதவும். இது உங்கள் உதட்டில் இருக்கும் வெடிப்பு, புண் மேலும் மற்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவும். ஒரு சில துளிகள் இந்த எண்ணையை வருடம் முழுவதும் பயன் படுத்தி வருவதால் நீங்கள் உங்கள் உதடுகளை பாதுகாப்பதோடு நல்ல பொலிவையும் அழகையும் பெறுவீர்கள். மேலும் அனைத்து சீர்தோஷ நிலையிலும் உங்கள் உதடுகளை பாதுகாக்க உதவும்.


ஜோஜோபா எண்ணை முகத்தில் இருக்கும் சுருக்கம் மற்றும் மெல்லிய கோடுகளை அகற்ற உதவும்
ஜோஜோபா எண்ணை வைட்டமின் பி, சி மற்றும் இ நிறைந்தது. இது ஒரு சிறந்த இளமை தரக்கூடிய எண்ணை. உங்கள் சருமம் முதிர்ந்த தோற்றத்தை பெறுவதில் இருந்து தடுக்கும். இதில் அனைத்து வைட்டமின்களும் கனிமங்களும் உள்ளது. இதனால் உங்கள் சருமம் ஈரத்தன்மை பெறுவதோடு, போலுவையும் நல்ல நிறத்தையும் பெறுகிறது. இந்த எண்ணையை பயன் படுத்தி நீங்கள் உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள், குறிப்பாக வயதாவதால் ஏற்படும் கோடுகளை அகற்ற பயன் படுத்தலாம். இந்த எண்ணையை பயன் படுத்த ஒரு எளிய முறை எதுவென்றால், சிறிதளவு எடுத்துக் கொண்டு உங்கள் சருமத்தில் இரவு தூங்க செலும் முன் முகத்தில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து விடுவது. இவ்வாறு செய்வதால் நீங்கள் விரைவாக எண்ணிய பலனைப் பெறலாம். மேலும் நான்கு முதல் ஐந்து சொட்டு எண்ணை போதுமானது.


ஜோஜோபா எண்ணை சூரிய கதிர்களால் ஏற்படும் வெங்குரு (சன் பர்ன்) போக்க உதவுகிறது.


ஜோஜோபா எண்ணை வைட்டமின் பி மற்றும் இ சத்துகள் நிறைந்தது. இது உங்கள் சருமத்தில் ஏற்பட்டுள்ள காயங்களையும் மற்ற பிரச்சனைகளையும் போக்க உதவும். நீண்ட நேரம் சூரிய ஒளியில் நீங்கள் இருந்து விட்டு வரும் போது உங்கள் சருமத்தில் வெங்குரு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்யவும் உங்கள் சருமத்திற்கு சத்தூட்டவும் மேலும் சருமத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை போக்கவும் இந்த எண்ணையை வாரத்திற்கு சில முறையாவது பயன் படுத்தி மசாஜ் செய்து வருவது நல்லது.


ஜோஜோபா எண்ணை முகப்பருவை போக்க உதவும்
முகப்பருக்களை போக்க பயன் படுத்தப்படும் பல பொருட்களில் இந்த ஜோஜோபா எண்ணை இருக்கிறது. இதற்க்கு சரும பிரச்சனைகளை போக்கும் குணங்கள் உள்ளது. மேலும் இது சருமத்தில் உள்ள பிரச்சனைகளை உண்டாக்கக்கூடிய பக்டீரியாக்களை போக்க உதவும் . இதனால் முகத்தில் பரு, தழும்பு மாறும் கறைகள் இருந்தால் அதை போக்க உதவும். இது முக்கியமாக முகப்பருக்களை போக்க உதவும்.


தலை முடி நன்கு வளர ஜோஜோபா எண்ணை


ஜோஜோபா எண்ணை தலை முடிக்கு ஊட்டச்சத்து தந்து சுத்தப்படுத்தும்
ஜோஜோபா எண்ணை குறைந்த காணமுடியாது. இது எளிதாக உங்கள் தலைமுடி வேரில் உறிஞ்சிவிடும் தன்மை கொண்டது. இதன் மூலக்கூறு கட்டமைப்பு இயற்கையாக உங்கள் சருமத்தில் உற்பத்தியாகும் எண்ணையோடு ஒத்துப்போகிறது. இது உங்கள் தலை முடி வேர்களுக்கு நல்ல ஊட்டசத்தாகவும் உள்ளது. இது வேர்களில் படிந்து இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் பொடுகு ஆகியவற்றை அகற்றி தலை முடி நன்கு ஆரோக்கியத்தோடு வளர உதவும். இதை தலை முடி முழுவதும் அதன் நீளம் வரை பயன் படுத்துவதால் மேலும் நல்ல பலன்களைப் பெறலாம். இது உங்கள் தலை முடிக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் இருக்கும். இதனால் வெளி புறத்தில் இருந்து ஏற்படும் சேதங்களை தடுக்கும்.


முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்
ஜோஜோபா எண்ணை வைட்டமின் பி மற்றும் இ சத்து நிறைந்தது. இதில் ஜின்க் போன்ற கனிம சக்திகள் அதிகம் உள்ளது. இவை அனைத்தும் உங்கள் தலை முடி அடர்த்தியாகவும் பலமாகவும் வளர உதவும். இந்த எண்ணையை உங்கள் தலை முடியில் மற்றும் வேர்களில் தினமும் தேய்த்து வருவதால் முடி அதிகம் பலம் பெற்று நீண்டு வளரும்.


பொடுகு மற்றும் பிற தொற்றுகளை குணப்படுத்த உதவும்
இந்த ஜோஜோபா எண்ணை உங்கள் தலை முடி வேர்களை உறுதியாகக பெரிதும் உதவும். இதனால் இந்த எண்ணையை தினமும் சில நிமிடங்கள் பயன் படுத்தி நன்கு மசாஜ் செய்து வருவதால் நீங்கள் இயற்கையான தோற்றத்தை உங்கள் தலை முடிக்கு பெறுவீர்கள். இதன் நோய் எதிர்ப்பு தன்மையாலும் பக்டீரியாக்களை தடுக்கும் தன்மையாலும், தலையில் இருக்கும் பொடுகை எளிதாகவும் நிரந்தரமாகவும் போக்க உதவும். மேலும் வறண்ட சருமம், சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளையும் இது போக்க உடஹ்வும். இதனால் உங்கள் தலை முடி நன்கு வளருவதோடு முடி உதிரவும் குறையும்.


ஜோஜோபா எண்ணையை பயன் படுத்த 8 வழிகள்
உங்களுக்கு இப்போது ஜோஜோபா எண்ணையை பயன் படுத்துவதால் உங்கள் சருமத்திற்கும் தலை முடிக்கும் கிடைக்கும் நன்மைகள் புரிந்திருக்கும். இப்போது இந்த எண்ணையை எப்படி தொடர்ந்து உங்கள் தினசரி பயன் பாட்டிருக்கு பயன் படுத்துவது என்று பார்க்கலாம்.


முகம் மற்றும் தேக எண்ணை
இந்த எண்ணையை சிறிது எடுத்துக் கொண்டு உங்கள் உடம்பிலும் முகத்திலும் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும். இதை நீங்கள் குளித்த உடன் செய்வது நல்ல பலனைத் தரும். இது உங்கள் சருமத்திற்கு ஒரு பாதுகாப்பாகவும் இருக்கும். மேலும் உங்கள் சருமத்திற்கு ஊட்டசத்தை கொடுக்கும். ஈரத்தன்மையை தக்க வைக்க உதவும்.


முகத்திற்கான எண்ணை
உங்கள் முகத்திற்கு தினசரி போடும் மாயச்சரைசர் போட்டபின் இந்த எண்ணையை சிறிது எடுத்துக்கொண்டு முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செவதால் நல்ல பலன்களை எதிர் பார்க்கலாம். இது உங்கள் சருமத்திற்கு ஈரத்தன்மையை அதிகப்படுத்த உதவும். மேலும் உங்கள் சருமம் மிருதுவாகவும் இருக்க உதவும்.


இந்த எண்ணையை நீர்மம் (ஷாம்ப்பூ) மற்றும் கண்டிஷனருடன் சேர்த்து பயன் படுத்தலாம் சிறிதளவு ஜோஜோபா எண்ணையை எடுத்துக் கொண்டு நீங்கள் பயன் படுத்தும் ஷாம்பூ மற்றும் கண்டிஷனருடன் கலந்து பயன் படுத்துவது அதன் பலனை அதிகப்படுத்தும். எனினும் தேய்க்கும் முன் நன்கு குலுக்கி பின் பயன் படுத்துவது நல்லது. இந்த ஜோஜோபா என்னை உங்கள் தலை முடியை ஈரத்தன்மை பெற செய்வதோடு வேர்களை சுத்தப்படுத்தவும் உதவும். மேலும் இது நல்ல பிரகாசிக்கும் தோற்றத்தையும் தரும்.


முகம் மற்றும் தேகத்திற்கு தடவும் கலவியில் கலக்கலாம்
நீங்கள் உங்கள் முகம் மற்றும் தேகத்திற்கு தடவும் கலவையோடு (பேக்) இந்த எண்ணையை கலந்து பயன் படுத்தலாம். இவ்வாறு செய்வதால் மேலும் பல நல்ல நன்மைகளை நீங்கள் பெறலாம். இந்த கலவை உங்கள் சருமத்தை சுத்தம் செய்வதோடு நல்ல பொலிவையும் தரும் . உங்கள் சருமம் வறண்டுவிடாமல் காக்கவும் இது உதவும்.


(பேஸ் வாஷ்) முகம் கழுவும் பொருளோடு சேர்க்கவும்
இந்த எண்ணையை உங்கள் பேஸ் வாஷோடு சேர்த்து பயன் படுத்துவதால் மேலும் நன்மைகளை பெறலாம். இது உங்கள் சருமத்தை நன்கு சுத்தம் செய்ய உதவும். சிறிது ஜோஜோபா எண்ணையை எடுத்து இந்த பேஸ் வாஷுடன் கலந்து முகத்தில் தடவி முகம் கழுவுவதால் உங்கள் முகம் மேலும் நல்ல பொலிவை பெரும்.


ஒப்பனை அகற்ற உதவும்
சிறிது ஜோஜோபா எண்ணையை உங்கள் உள்ளங்கையில் எடுத்துக் கொண்டு முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இது ரசாயனம் கலந்த ஒப்பனை அகற்ற உதவும் பொருளை விட இயற்க்கை முறையில் உங்கள் முகத்தில் இருக்கும் ஒப்பனையை அகற்ற பெரிதும் உதவும். இதனால் எந்த பாதிப்புகளும் ஏற்படாது. மேலும் சருமத்தில் இருக்கும் துகள்களில் எந்த அழுக்கும் சேராமல் தடுக்கும். இதை நீங்கள் முகம் கழுவ தொடர்ந்து பயன் படுத்தலாம். பல நல்ல நன்மைகள் கிடைக்கும்.


தலை முடி மற்றும் வேர்களுக்கு நல்ல சிகிச்சை
ஒரு சிறிய கிண்ணத்தில் இந்த எண்ணையை கொஞ்சம் எடுத்துக் கொண்டு மிதமாக சூடு படுத்தி பின் உங்கள் தலை முடியிலும் வேர்களிலும் நன்கு தடவினால் உங்கள் முடி நீண்டும் அடர்த்தியாகவும் வளரும். இப்படித் தடவி ஒரு நாள் இரவு முழுவதும் விட்டு விடுங்கள் அல்லது குறைந்தது ஒரு மணி நேரத்திற்காவது விட்டு விடுங்கள். பின் தரமான ஷாம்பூ அல்லது கண்டிஷனர் போட்டு தலையை அலசி விடுங்கள்.


முடி சீரம் / வெப்ப பாதுகாப்பு சிகிச்சை
இந்த ஜோஜோபா எண்ணையை நீங்கள் உங்கள் தலை முடியை அலசிய பின் ஒஉர் நல்ல சீரமாக பயன் படுத்தலாம். இது உங்கள் தலை முடியை சூரிய கதிரால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். மேலும் தலை முடி சுருளையாவதையும் தடுக்க உதவும். மேலும் பிடித்த அழகாரத்தை செய்துகொள்ள எதுவாகவும் இருக்கும்.


இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஜோஜோபா எண்ணை
நீங்கள் ஜோஜோபா எண்ணை வாங்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், தரமான பொருளை வாங்குவது முக்கியம். இந்த வகையில் பல பொருட்களில் ரசாயனங்களும் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய கலவைகளும் சேர்க்கப்பட்டிருக்கலாம். எனினும், நீங்கள் சற்று கவனம் செலுத்தி சிறந்த பொருளை வாங்குவது முக்கியம். இயற்க்கை பொருட்களை உள்ளடக்கம் கொண்டுள்ள ஜோஜோபா எண்ணை வாங்குவது சிறந்தது.


இங்கே உங்களுக்காக சில இந்தியாவில் கிடைக்ககூடிய சிறந்த ஜோஜோபா எண்ணைகள்:1. சோல்ஃப்ளவர் ஜோஜோபா எண்ணெய் (ரூ 650)
2. நியாஸா ஜோகாபியா கோல்ட் பிரஸ்ஸெட் ஆயில் (ரூ 900)
3.  அரோமா மேஜிக் ஜோஜோபா எண்ணெய் (ரூ 985)
4.  தேவ் ஹெர்பஸ் 100% இயற்கை தூய ஜோஜோபா எண்ணெய் (ரூ 299)
5. செயின்ட் போடானிக்கா கோல்டன் கன்னி பியூஜோ ஜோஜோபா குளிர் அழுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் (ரூ. 899)


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

வெளியிடப்பட்டது ஜனவரி 23, 2019
Like button
விருப்பம்
Save Button சேமித்து வை
Share Button
பகிர்
மேலும் படிக்க
Trending Products

உங்கள் செய்திகள்