logo
ADVERTISEMENT
home / Bath & Body
வீட்டில் தயாரிக்கப்படும் சோப்புகள் மற்றும் குளியல் பொருட்களின் முக்கியத்துவன்கள்!

வீட்டில் தயாரிக்கப்படும் சோப்புகள் மற்றும் குளியல் பொருட்களின் முக்கியத்துவன்கள்!

இன்று  பல வகையான குளியல் சோப்புகள் (soap) மற்றும் பிற குளியல் பொருட்கள் கடைகளில் கிடைகின்றன. வெவ்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது படைப்புக்களை மிகை படுத்தி விளம்பரங்கள் செய்து மக்களை கவர்ந்து, அதனை விற்க முயற்சி செய்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலான சோப்புகள் மற்றும் குளியல் பொருட்கள் எவ்வளவு பாதுகாப்பானது என்று கூற முடியாது. ஏனென்றால், அவற்றில் அதிக அளவு ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும். இது நிச்சயம் பல வகை சரும பிரச்சனைகளை காலப்போக்கில் பயன் படுத்துபவர்களுக்கு ஏற்படுத்தும். குறிப்பாக சரும எரிச்சல், சருமம் வறண்டு போவது, அரிப்பு என்று பல பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.

2௦ – 3௦ ஆண்டுகளுக்கு முன் மக்கள் வீட்டில் தயாரித்த குளியல் பொடிகளை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அக்கறையுடனும், கவனத்துடனும் குளியல் பொடி போன்ற பொருட்களை தயார் செய்து பயன்படுத்தினர். ஆனால், காலபோக்கில் வநீகமயதாலும், லாபநோக்கத்திலும் பல ரசாயனங்கள் கலந்த குளியல் பொருட்கள் போட்டி போட்டுக் கொண்டு விற்பனைக்கு வந்தது.

மக்கள் தங்களது அறியாமையை போக்கி, விழிப்புணர்ச்சியை வளர்துக் கொண்டு வீட்டில் தயாரிக்கப்படும் குளியல் சோப் மற்றும் பிற பொருட்களின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் குளியல் சோப்புகளை வீட்டில் தயாரித்து பயன்படுத்த வேண்டும்?

ADVERTISEMENT

Pexels

உங்களுக்காக இங்கே சில விடயங்கள்:

  1. வீட்டில் தயாரிக்கப்படும் (home made) சோப்புகளில் தரமான மற்றும் உண்மையான மூலப்பொருட்கள் சேர்க்கப்படும்
  2. கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான சோப்புகளில் தரமான மூலபொருட்கள் எப்டிஏ பரிந்துரையின் படி இருப்பதில்லை
  3. இப்படி தரமற்ற மற்றும் ரசாயனம் கலந்த பொருட்கள் சருமத்திற்கு அதிக தீங்கை விளைவிக்கின்றது
  4. வீட்டில் தயாரிக்கப்படும் சோப்புகளில் கிளிசரின் சேர்க்கப்படுகின்றது. இது சருமத்தில் ஈரத்தன்மையை தக்க வைத்துக் கொள்ள உதவுகின்றது. ஆனால் கடைகளில் கிடைக்கும் சோப்புகளில் அதிகம் ரசாயனம் மற்றும் டிடர்ஜென்ட் இருப்பதால் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணையை இது அகற்றி விடுகின்றது
  5. நுரை அதிகம் வர வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கப்படும் சோப்புகளில் சிந்தடிக் மூலப்பொருள்கள் சேர்க்கப்படுவதால், அது மேலும் சருமத்தை பாதித்து பல உபாதைகளை உண்டாக்கின்றது

வீட்டில் தயாரிக்கும் சோப்புகளின் பலன்கள் மற்றும் முக்கியத்துவங்கள்

Pexels

ADVERTISEMENT
  1. வீட்டில் தயாரிக்கப்படும் சோப்புகளின் மூலப்பொருளாக தேங்காய் எண்ணை இருந்கின்றது. இந்த எண்ணையில் சருமத்திற்கு தேவையான அனைத்து ஆக்சிஜனேற்றம், விட்டமின்கள் மற்றும் பிற தாது சத்துக்கள் உள்ளன
  2. இந்த தேங்காய் எண்ணையை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் சோப்புகளில் போதுமான நுரை வருவதால், தேய்த்து குளிக்க எளிதாக உள்ளது
  3. மேலும் நுரைத்தன்மை கடைகளில் வாங்கும் சோப்பின் அளவிற்கு அதிகமாக இல்லை என்றாலும், இது சருமத்தை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை
  4. எந்த ஒரு ரசாயனமும் இதில் சேர்க்கப்படுவதில்லை, அதனால் இது மிகவும் பாதுகாப்பான ஒன்றாக உள்ளது
  5. தேங்காய் எண்ணையுடன் இதில் இயற்கையான பிற மூலிகையும், மூளிகை சாறையும் சேர்க்கலாம். அதனால் மேலும் சருமதிற்குத் தேவையான மேலும் பல சத்துக்கள் கிடைத்து, சருமம் மேலும் ஆரோகியமாகின்றது
  6. இதில் எந்த செயற்கையான நிறமூட்டியும் சேர்க்கப்படுவதில்லை, அப்படியேத் தேவைப் பட்டாலும், இயற்கையான சாறுகளைக் கொண்டு நிறத்தை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பலன்கள் மட்டுமே கூடும்
  7. இன்று பலர் வீட்டில் இயற்க்கை பொருட்களை கொண்டு சோப்பை தயாரிப்பதால், இன்று இது மிக குறைந்த விலையில் கிடைகின்றது. மேலும் இதை நீங்கள் எளிதாக வீட்டிலேயே செய்து விடலாம்
  8. இந்த இயற்க்கை சொப்பில் PH அளவு அதிகமாக உள்ளது. இதனால் சருமம் மேலும் ஆரோக்கியமாக இருக்கும்
  9. இந்த இயற்க்கை சோப்புகள் அனைத்து விதமான சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும். அதனால் உங்கள் சருமம் வரண்டதோ, அதிக உணர்ச்சி கொண்டதோ அல்லது அதிக எண்ணை பிசிக்கு கொண்டதோ, அனைத்திற்கும் ஒரே தீர்வாக இந்த சோப்புகள் இருக்கும்
  10. இந்த சோப்புகள் எளிதாக சருமத்தில் இருக்கும் ஒவ்வாமை, அரிப்பு, தடிப்பு, சிவந்தல் போன்ற பிரச்சனைகளை போக்கி விடும்
  11. நாம் அன்றாடம் பயன் படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்தி இந்த சோப்புகள் தயார்க்கப்படுவதால், இதை நம்பி பயன்படுத்தலாம்
  12. இந்த சொப்புகளின் தயாரிப்பு சிறுதொழில் புரிவோர்கள் மற்றும் குடிசைத்தொழில் புரிவோர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பையும் உண்டாக்கிக் கொடுத்துள்ளது என்று கூறலாம்.
  13. மேலும் இது தற்சார்பு வாழ்க்கைக்கு ஒரு பெரிய தூணாக உள்ளது
  14. ஒரு வகை சோப்புகள் மட்டுமல்லாது, சந்தானம், மல்லிகை, கற்றாளை, ரோஜா, கடலைமாவு என்று பல வகை சோப்புகளை வீட்டில் தயாரிக்கலாம். இவை அனைத்திலும் நேரடியாக இயற்கையாக கிடைக்கும் பொருட்களை சேர்க்கலாம். எந்த விதமான ஈசென்சுகள் அல்லது ரசாயனம் அல்லது செயற்கை மணமூட்டி சேர்க்க வேண்டாம்.

வீட்டில் தயாரிக்கப்படும் சோப்புகளில் ரசாயனம் என்று எதுவும் பெரும்பாலும் சேர்க்கப்படுவதில்லை. இதை முறையாக செய்து பயன்படுத்தினால் பல நன்மைகளைப் பெறலாம்.

நீங்கள் வீட்டில் குளியல் சோப் மற்றும் பிற குளியல் பொருட்கள் தலைமுடி மற்றும் சருமத்திற்கு செய்ய வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால், அது குறித்த பல செய்முறை விளக்கங்கள் இன்று இணையதளங்களில் எளிதாக கிடைகின்றது. அதனால் நீங்கள் அதனை பார்த்து எளிதாக உங்கள் வீட்டிலேயே நீங்கள் செய்து விடலாம். இதை செய்வதற்கு அதிக நேரமும் ஆவதில்லை. எனினும், விதிமுறைகளை சரியாக பின்பற்றினால், முற்றிலுமாக பாதுகாப்பான சோப்பை நீங்கள் வீட்டில் தயார் செய்து விடலாம்.

இப்படி வீட்டில் தயார் செய்யும் சோப் உங்களுக்கு பொருளாதார நீதியாகவும் லாபகரமானதாக உள்ளது. அதனால், கடைகளில் நீங்கள் ஒரு மாதத்திற்கு உங்கள் குடும்பத்தினர்களுக்கு வாங்கும் சோப்பிற்கு செய்யும் செலவை விட பல மடங்கு இங்கே உங்களுக்கு சேமிப்பு உண்டாகின்றது. மேலும் இதன் பலன்கள் மற்றும் நற்குணங்கள் கடைகளில் வாங்கும் சோப்புகளில் கிடைப்பதில்லை.

உங்களுக்கான சோப் மற்றும் குளியல் பொருட்களை நீங்களே யாருடைய உதவியும் இன்றி தயாரித்து பயன்படுத்தி பாருங்கள்! பின்னர் கடைகளுக்கு செல்லவே மாட்டீர்கள்! 

ADVERTISEMENT

 

மேலும் பிடிக்க – முகப்பொலிவு கிரீம்கள் பயன்படுத்துவோர் கவனத்திற்கு : கிரீம்களால் இவ்வளவு தீமைகளா?

பட ஆதாரம் – Pexels

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT






10 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT