ராதிகா ஆப்தே என்றாலே நல்ல திறமையான நடிகை என்பதை விட சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படையாக கூறும் நடிகை என்பதுதான் அனைவருக்கும் நினைவு வரும்.
சிறு வயதிலேயே நடிக்க வந்த ராதிகா ஆப்தே (Radhika Apte) இன்னமும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஒரு திறமைசாலியான நடிகையாகவே இருப்பதற்கு காரணம் அவரது இந்த தைரியமும் துணிச்சலுமாகக் கூட இருக்கலாம்.
இன்ஸ்டாகிராமில் #MyFirstfantasy என்றொரு ஹாஷ்டேக் உருவாகி ட்ரெண்டாகி வருகிறது. இதில் வழக்கம் போல சர்ச்சைக்குரிய கருத்துக்களை துணிச்சலாக கூறுவதில் பெயர் வாங்கிய நடிகை ராதிகா ஆப்தே இதிலும் மற்றவர்கள் சொல்ல கூச்சப்படும் கனவு பற்றி வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
எல்லோரும் சிறு வயது கனவு பற்றி கேட்டால் நான் டாக்டர் ஆக விரும்பினேன் வக்கீல் ஆக விரும்பினேன் சினிமாவுக்கு நான் வந்தது ஒரு விபத்து என்றெல்லாம் கூறுவார்கள்.. ஆனால் ராதிகாவோ சிறு வயதில் தான் தனக்கு பிடித்த க்ரஷ் உடன் ரொமான்ஸ் செய்வது போல கனவொன்று இருந்தது என்று கூறியிருக்கிறார்.
இதில் என்ன சர்ச்சை இருக்கிறது என்று நீங்கள் கேட்பீர்கள். இந்த கனவு அவருக்கு ஏற்படும்போது அவரது வயது 7 அல்லது 8 தான் இருக்கும் என்று அவரே கூறியிருக்கிறார்.
அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போவதால் வீட்டில் டிவி அதிகம் பார்க்கும் வழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது. அதில் அவர் பார்க்கும் ஹிந்தி படங்களில் எல்லாம் ஒரு மழைக்காட்சி இருக்கும், அல்லது காற்று வேகமாக அடிக்கும் அதில் அவரது முந்தானை விலகும் அதன்பின் அருகே வரும் ஹீரோ அந்த ஹீரோயினை முத்தமிடுவார்..
இப்படிப்பட்ட படங்களை பார்த்த ராதிகா தனது க்ரஷ் தன்னை வந்து இப்படி பார்க்க வேண்டும் என்று கனவு கண்டாராம். மழையிலோ அல்லது காற்றிலோ தனது முந்தானை விலக அதன்பின்னர் தனது க்ரஷ் தன்னை முத்தமிடுவான் என்று கனவு கண்டிருக்கிறார்.
நல்லவேளையாக அது நடக்கவில்லை. (நடக்க வாய்ப்பில்லை !)
இப்படியாகத் தனது 7 வயதிலேயே செக்சியாக இருப்பதை கனவாக கொண்டிருக்கிறார் ராதிகா ஆப்தே.
மேலும் உங்கள் கனவுகள் எதுவாக இருந்தாலும் அது பற்றி வெளியே சொல்லத் தயங்காதீர்கள் என்று ரசிகர்களிடம் வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.
உங்கள் துணிச்சல் நல்லதுதான் ராதிகா ஆப்தே. ஆனாலும் வாழ்க்கையில் மற்றவருக்குத் தேவையானவை எதுவோ அதை சொல்வதுதான் சிறந்தது என்பது சிலர் கருத்து.
இதில் ராதிகா ஆப்தே தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் பிறந்தவர் ஆனாலும் புனேயில் வளர்ந்தவர் என்பது கூடுதல் தகவல் !
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , இன்ஸ்டாகிராம்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.