யெஸ்! நான் கொஞ்சம் கொடுமைக்கார மனைவிதான்! உண்மையை ஒப்புக்கொண்ட ப்ரியங்கா சோப்ரா !

யெஸ்! நான் கொஞ்சம் கொடுமைக்கார மனைவிதான்! உண்மையை ஒப்புக்கொண்ட ப்ரியங்கா சோப்ரா !

ப்ரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் இருவரும் காதலித்து சமீபத்தில்தான் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் பிரபல வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த ப்ரியங்கா தன்னை ஒரு கொடுமைக்கார மனைவி என்று கூறியிருக்கிறார்.


அது ஏன் என்று தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்


நிக் ஜோனஸ் ப்ரொபோஸ் செய்யும் போதே தன்னைப் பற்றிய உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார் ப்ரியங்கா. "நான் சமைக்கலாம் மாட்டேன்" எனும் உண்மைதான் அது.நிக் தனது காதலை ப்ரியங்காவிடம் கூறியபோது "இத பாரு நிக், நீ ஒரு நல்ல வீட்டிலிருந்து வந்திருக்கும் பையன். உன்னோட அம்மா உனக்கு நல்ல சாப்பாட்டை சமைச்சு கொடுக்கறதுக்கு நீ பழகி போயிருப்ப. ஆனால் நீ கல்யாணம் பண்ணிக்க விரும்ப பொண்ணு அப்படி இல்லைனு புரிஞ்சுக்க " என்று தான் நிக்கிடம் கூறியதாக ப்ரியங்கா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.


36 வயதாகும் ப்ரியங்கா சோப்ராவுக்கு சமையலில் தெரிந்ததெல்லாம் முட்டைகளை வேக வைப்பது மட்டும்தானாம்.அப்படிப் பார்த்தால் கணவனுக்கு சமைச்சு போடாத ஒரு கொடுமைக்கார மனைவிதான் நான் எனும் ப்ரியங்கா ஆனால் இதில் அற்புதமான விஷயம் என்னவென்றால் அவர் "babe என்னால சமைக்க முடியாது" என்று கூறும்போது நிக்கும் "So do I " என்று கூறியதுதானாம்!


அதாவது "அதனாலென்ன babe எனக்கும்தான் சமைக்கத் தெரியாது என்று கூறியிருக்கிறார் நிக். (nick) ஒரு வருட டேட்டிங்கிற்கு பிறகு நிக்கும் ப்ரியங்காவும் திருமணம் செய்து கொண்டனர்.


தனது திருமணத்தை பற்றி ப்ரியங்கா பேசிய போது திருமணம் என்பதற்கு நிறைய யோசித்து தான் முடிவு செய்ய வேண்டும், ஏனென்றால் அது ஒரு குடும்பத்தை தேடும் தேடல் என்று பக்குவம் நிறைந்த பெண்ணாக பதில் கூறியிருக்கிறார்.


திருமணத்திற்கு பின்னர் நிக் ஜோனஸ் இயற்றிய ஆல்பம் அமெரிக்காவில் முதலிடத்தில் இருக்கிறது.சக்கர் எனும் அந்த ஆல்பத்தில் ப்ரியங்காவும் இணைந்துள்ளார். இதைப் பற்றி கேட்ட போது அது சாதாரணமாக நாங்கள் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தோம். அப்போது அடுத்த ஆல்பம் பற்றிய பேச்சு எழுந்தது.


யாருடன் இணைந்து பண்ணப் போகிறீர்கள் என்கிற சாதாரண கேள்விக்கு சகோதரர்கள் இருவரும் (கெவின் மற்றும் நிக்) அங்குமிங்கும் சுற்றி தேடிப் பார்த்து விட்டு பின்னர் எங்களையே (சோஃபி டர்னர் மற்றும் ப்ரியங்கா) பார்த்தார்கள். அவ்வளவுதான் ஆல்பம் தயாராகியது என்று எளிமையாக பதில் அளிக்கிறார் ப்ரியங்கா சோப்ரா.

Subscribe to POPxoTV

எது எப்படியோ பணக்கார காதலர்களுக்கு சமையல் தெரியாததெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்கின்றனர் இணையதள வாசிகள்.


படங்கள் ஆதாரங்கள் பிக்ஸா பே . பேக்செல்ஸ் மற்றும் யூட்யூப்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.