சேருவார்களா செம்பாவும் கார்த்திக்கும் ! சிக்கலில் ராஜா ராணி!

சேருவார்களா செம்பாவும் கார்த்திக்கும் ! சிக்கலில் ராஜா ராணி!

விஜய் டிவியில் ராஜா ராணி (Raja Rani) சீரியல் தற்போது 500 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. சந்தர்ப்ப வசத்தால் தனது வீட்டில் பணிபுரியும் செம்பா எனும் செம்பருத்தியை கார்த்திக் மணக்கிறார். அதன்பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையேயான இடைவெளிகள் மெல்ல மெல்ல குறைந்து இருவரும் ஒன்றிணைகின்றனர்.


இதற்கு நடுவே கார்த்திக்கின் அண்ணிகள் இருவரும்  வில்லி வேலைகளை காமெடியாக செய்வது இந்த சீரியலை அனைவரும் ரசிக்கும் வகையில் மாற்றி இருக்கின்றது. செம்பா கணவர் கார்த்திக்கை  சின்னய்யா என்று அழைப்பது இந்த சீரியலின் ஸ்பெஷல் ஸ்டைல்.


ராஜா ராணி ஜோடி ஆல்யா மானஸா - சஞ்சீவ் நிச்சயதார்த்தம் - படங்கள் உள்ளே !


520879bd2c46a7f3a791edae0a5ba833


நன்றாக சென்று கொண்டிருந்த ராஜா ராணி சீரியலில் கொஞ்ச நாட்களாகவே அழுகையும் புலம்பல்களும் அதிகரித்துள்ளன. கார்த்திக்கின் தங்கை வினோதினி தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி விட குடும்பமே இதற்கு கூட இருந்து உதவி செய்தது செம்பாதான் என்று நம்புகிறது.


செம்பாவை நேசிக்கும் பெரியம்மாவே நீ இனிமேல் என்னை அப்படி அழைக்காதே என்று கூற வில்லி அண்ணிகளுக்கு வேலை சுலபமாகிறது. செம்பாவை விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் உண்மை தெரியும் என்று மற்றவர்களை தூண்டி விடும் வேலையை தொடங்குகின்றனர்.


சௌந்தர்யா ரஜினிகாந்த் - பெண்களில் அதிகம் ஆசிர்வதிக்கப்பட்டவர்


PCTV-1100008629-hcdl


கார்த்திக் இந்த விஷயத்தில் செம்பாவின் மீது கடும் ஆத்திரத்தில் இருப்பதும் அவர்களின் தனியறையில் இது பற்றி கோபமாக விசாரிப்பதும் தொடர்கிறது. கதறி அழும் செம்பா கார்த்திக்கின் காலில் விழுந்து தான் சொல்வது உண்மைதான் என்று கூறுகிறாள்.


ஆனாலும் அதனை கார்த்திக் நம்புவதாக இல்லை என்பதுதான் சோகத்தின் உச்சம். செம்பா நடிப்பதாக கார்த்திக் நம்புகிறான். கார்த்திக் மீது சத்தியம் செய்தும் அவனால் நம்ப முடியவில்லை. குடும்பம் சுக்கு நூறானதை தாங்க முடியாமல் செம்பாவை சுயநலவாதி என்கிறான்.


ஷாலினியின் முகம்.. அஜித்தின் நிறம்.. அழகாக வளர்கிறாள் அனோஷ்கா !


raja-rani2244-1556021949


இதற்கிடையில் கார்த்திக்கின் அப்பாவை செம்பாவிடம் விசாரிக்கும்படி மற்றவர்க்ள கூற அவர் மறுத்து விடுகிறார். பெரியம்மாவே விசாரிப்பதாக சொல்கிறார். கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்ய வற்புறுத்துகிறார் பெரியம்மா. செம்பா சத்தியம் செய்ய முற்படுகையில் பெரிய அண்ணி தடுக்கிறாள். சத்தியம் செய்தால் செம்பா மேல் கரிசனம் வந்து விடும் என்பதால் குடும்பத்திற்கு ஆகாது என்று கற்பூர சத்தியத்தை பெரிய அண்ணி தடுக்கிறாள்.


செம்பாவை விசாரிப்பதை கலங்கி போய் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கார்த்திக்கின் அப்பாவிற்கு நெஞ்சு வலி வருகிறது. இதனால் குடும்பம் மேலும் பதறுகிறது. செம்பாவால் இதனை தாங்க முடியாமல் அழுகிறாள். மீண்டும் அவளிடம் வந்து கெஞ்சி கேட்கிறார் பெரியம்மா வினோதினி எங்கே என்று சொல்லி விடு எனக்கு தாலி பிச்சை கொடு என்று அழுகிறார்.


சின்னத்திரைக்கு ஷிஃப்ட் ஆகும் நயன்தாரா! ஆதாரங்கள் உள்ளே !


maxresdefault %281%29


செம்பாவோ தனக்கு தெரியாது என்பதை தவிர வேறெதுவும் சொல்லவில்லை. இதனிடையில் வினோதினியும்  ஹரிஷும் தங்கள் திருமணத்திற்கு தேவையான புடவை தாலி வாங்குகின்றனர். இன்னும் என்னென்ன நடக்குமோ என தெரியவில்லை.


காலில் விழுந்து கதறியும் செம்பாவை நம்பாத கார்த்திக் இனி எப்போது நம்ப போகிறார் என்கிற கவலையில் பார்வையாளர்கள் இந்த சீரியலை தொடர்ந்து ரசிக்கின்றனர்.


raja-rani-1556021968


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


---                      


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.