நிஜத்திலும் நடிக்கும் பிரியங்கா சோப்ரா ? வைரலாகும் 'புகை' படம் !

நிஜத்திலும் நடிக்கும் பிரியங்கா சோப்ரா ? வைரலாகும் 'புகை' படம் !

பிரியங்கா சோப்ரா என்றாலே அதிரடிக்குப் பெயர் போனவர் என்றுதான் அர்த்தம் போல. இவர் அமெரிக்க பாடகரை திருமணம் செய்தது முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

அதைப்பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் தனது தனிப்பட்ட சுதந்திரங்களை அனுபவித்து வருகிறவர் பிரியங்கா சோப்ரா. (priyanka chopra)                    

ப்ரியங்கா சோப்ராவிற்கு ஆஸ்துமா இருப்பதால் புகைபிடிக்க வேண்டாம் என்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு எதிரான பிரச்சாரம் ஒன்றையும் அவர் செய்து வந்திருக்கிறார். இதைத் தவிர பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுக் கட்டுப்பாடு குறித்தும் பிரியங்கா சோப்ரா அறிவுரை செய்திருக்கிறார்.                       

காதல் மனைவியைப் பிரிந்து சீரியல் மனைவியுடன் வாழ விரும்பும் தொலைக்காட்சி பிரபலம் !

twitter

தீபாவளி என்பது தீபங்களின் வரிசைக்கான விழா என்றும் அன்பு மற்றும் இனிப்புகளை பரிமாறுங்கள் காற்றை மாசுபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டவர் பிரியங்கா சோப்ரா.

ஆனால் அவரது திருமணத்திலேயே வாண வேடிக்கை நடத்தி சொல்லும் செயலும் வெவ்வேறு என்று காட்டினார். அதைப்போலவே இப்போது வேறொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

சமீபத்தில் தனது 37வது பிறந்த நாளை கணவர் நிக் ஜோனஸ் குடும்பத்தாருடன் இணைந்து கொண்டாடினார். இதில் பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ரா மற்றும் அவரது தங்கை பரினீதி சோப்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் விலையில் காலேஜ் பெண்களுக்கான புடவை கலெக்ஷன்கள் !

twitter

இதில் கணவர் நிக் ஜோனஸ் மற்றும் ப்ரியங்காவின் அம்மா மது சோப்ரா ஆகிய இருவரும் சுருட்டு புகைத்தபடி இருக்க பிரியங்கா சோப்ரா சிகரெட் பிடித்தபடி இருக்கும் புகைப்படம் வைரலாகி இருக்கிறது.   

இதனைக் கண்டதும் நெட்டிசன்கள் கொதித்து எழுந்தனர். சொல்வது ஒன்று செய்வது வேறொன்றாக இருக்கும் பிரியங்காவை மானாவாரியாக கேள்வி கேட்டு விளாசி வருகின்றனர்.  

பிரியங்கா சோப்ரா நிஜத்திலும் நடிக்கிறார் என்று கூறும் நெட்டிசன்கள் மேலும் அவருக்கு ஆஸ்துமா சரியாகி இருக்கலாம். மீண்டும் ஆஸ்துமா வர வேண்டும் என்றுகூட அவர் புகைபிடிக்கலாம் என்று கிண்டல் செய்து வருகிறார்.     

அப்போதுதான் மீண்டும் தீபாவளி வரும்போது பட்டாசு வெடிக்காதீர்கள் என்று ஸ்டேட்டஸ் போட முடியும் என்று கூறி கலாய்த்து வருகின்றனர். 

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                 

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.