பொள்ளாச்சி குற்றவாளி தாயார் கூறியது என்ன?: கொந்தளிக்கும் பிரபலங்கள்

பொள்ளாச்சி குற்றவாளி தாயார் கூறியது என்ன?: கொந்தளிக்கும் பிரபலங்கள்

தமிழ்நாட்டையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் தான் பொள்ளாச்சி(pollachi rape) பாலியல் வன்கொடுமை. பெண்களுக்கு ஆதாரவாக பல்வேறு சட்டங்கள், பாதுகாப்பு மையங்கள் வந்தாலும் பெண்களுக்கான கொடுமைகள் இன்றும் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. குறிப்பாக சமீபத்தில் அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்ட மிடூ அனைவராலும் விமர்சிக்கப்பட்டாலும் பெண்கள் தங்களது கொடுமைகளை தைரியமாக எடுத்து சொல்லவதற்கான ஒரு மிகச்சிறந்த வழியாக இருந்தது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


‘பொள்ளாச்சி(pollachi rape) சம்பவத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வன்புணர்வு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளி எந்த பின்னணியை சேர்ந்தவராய் இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என பல பெண்ணியம் சார்ந்த அமைப்புகள் ஆதரவாக பேசிவருகின்றன.


இந்த வேலையில் பொள்ளாச்சி(pollachi rape) வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்த குமார் இவர்களில் திருநாவுகரசின் தயார் நேற்றைய தினம் தனது மகனிற்காக ஜாமின் கேட்ட நீதிமன்றம் வந்திருந்தார். அவருக்கான ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் பொள்ளாச்சி(pollachi rape) நீதிமன்றம் வழாகம் முன்பே கதறி அழுது கொண்டிருந்தார்.

Subscribe to POPxoTV

தனது மகன் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்துவரும் நிலையில் எப்படி இது போன்ற பாலியல் குற்றங்கள் செய்யமுடியும் என வாதிட்டுள்ளார். குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு பைனான்ஸ் கம்பெணி நடத்திவந்ததாகவும், தொழில் போட்டி காரணமாக தனது மகனை கடத்தி அவனது மொபைலில் அனைத்து ஆபாச வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து அசிங்கப்படுத்தி, காயப்படுத்தியாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.


ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ள எந்த வீடியோவிலும் எனது மகன் இல்லை. அதில் வரும் கைகள் எனது மகனுடையது இல்லை என தெரிவித்துள்ளார்.


இதில் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு இரண்டு பெண்களை காதலித்து ஏமாற்றியுள்ளார். ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்யாமலும், மற்றும் ஒரு பெண்ணை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்தும் பிறகு பிரிந்துள்ளனர். இவையனைத்திற்கும் திருநாவுக்கரசின் தாயார் துணையாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் யார் கூறுவது உண்மை, புகார் அளித்த பெண் சொல்வது உண்மையா, குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசின் தயார் சொல்வது உண்மையா என நீதிமன்றம் விசாரணை அடிப்படையில் உறுதி செய்யும்.


குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லும் பெண்களை குறிவைத்து ஆசை வார்த்தைகள் காட்டி இந்த பொள்ளாச்சி(pollachi rape) பாலியல் கொடுமைகள் நடைபெற்றுள்ளது. இதில் உண்மையான குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என திரை துறையை சார்ந்த பிரபலங்கள் தங்களது கண்டன குரல்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.