இந்து மதம் பாரம்பர்ய வேர்களில் இருந்து உருவான ஆலம் விழுதுகள் போல தன்னுடைய காலத்தை நீட்டித்துக் கொண்டே போகிறது. இந்து மதம் தன்னை சார்ந்த மக்களுக்கு சில தார்மீக நெறிமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் அதனோடான ஆன்மிகத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
புராணங்கள் மூலமே அறநெறிகளை வளர்த்த இந்து மதம் காமம் (sex) மற்றும் காதலை (love) என்ன கண்ணோட்டத்தில் வரையறுத்திருக்கிறது என்பதை நாம் அறிந்து கொண்டால் பல ஆச்சர்யங்கள் எழும்! உலகமே காதல் மற்றும் காமம் மூலமாக இயங்குவது போலான ஒரு மாயையில் இந்து மதம் இவ்விரண்டு உணர்வுகளை பற்றியும் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்க்கலாம்.
பெண்கள் தாம்பத்யத்தில் ஈடுபட விரும்புவது இந்த நேரங்களில்தான் .. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Youtube
மனிதர்களுடைய வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த காதலையும் காமத்தையும் இந்து மதம் ஒருபோதும் தவறென்று ஒதுக்கியது இல்லை. அருவருப்பானது என்று முகம் மூடிக் கொண்டதும் இல்லை. அதே சமயம் காதல் மற்றும் காமம் இந்த இரண்டு உணர்வுகளையும் நிர்வகிக்க வேண்டிய சில விதிமுறைகளை வைத்திருக்கிறது.
தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் இவைதான் இந்து தர்மத்தை அனுஷ்டிக்கும் அனைவரும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைகள். தர்மம் என்றால் நீதி என்றும் அர்த்தம் என்றால் செல்வம் என்றும் காமம் என்றால் ஆசையை நிறைவேற்றுவது என்றும் மோட்சம் என்றால் இவற்றிலிருந்து விடுபடுவதற்காக போராடுவது என்றும் பொருள் தரும்.
ஆண்கள் பெண்களில் கவனிக்கும் முதல் விஷயம் இவைதானா?! தெரிந்து கொள்ளுங்கள் !
Youtube
ஒரு உடலின் விருப்பத்தை நிறைவேற்றும் காமம் (sex) தவறானது அல்ல எனும் இந்து மதம் தனக்கு உரிமையான பெண்ணுடன் கள்ளத்தனம் இல்லாமல் நேர்மையான முறையில் கலவி கொள்வதை தவறில்லை என்கிறது. நாட்டில் பிற மனிதர்கள் வெளியில் தன்னை நேர்மையாகவும் உள்ளே அழுக்காகவும் வைத்துக் கொள்வதை இந்து தர்மம் மற்றும் இந்திய கலாச்சாரம் இரண்டுமே எதிர்க்கிறது.
சரியான வழியில் அன்பையும் காமத்தையும் அனுபவித்துக் கொள்ளவே திருமணம் போன்ற நெறிமுறைகள் உருவாகின. ஒவ்வொரு நபரும் நான்கு நிலைகளை கடந்தாக வேண்டும். பிரம்மாச்சார்யா, க்ருஹஸ்தா, வானப்ரஸ்தா, மற்றும் சந்நியாசி ஆகிய நிலைகளே அது. கல்வி பயிலும் காலத்தில் பிரம்மச்சாரியாகவும் பின்னர் திருமணம் முடிந்து குடும்பத்தை நேசிக்கும் காலத்தில் க்ருஹஸ்தராகவும் ஓய்வு பெற்ற பிறகு சமூக சேவகராகவும் இருக்கும் நபர் ஒரு கட்டத்திற்கு பின்னர் தன்னுடைய பிறப்பிற்கான உண்மையை கண்டறிதல் சந்நியாசம் எனப்படும்.
Youtube
இதில் பிரம்மாச்சார்யா மற்றும் சந்நியாச காலங்களில் ஒருவருக்கு காதலோ காமமோ அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் கிருஹஸ்த காலத்தில் நெறிமுறைகளுக்கு உட்பட்டு காமமும் காதலும் (sex and love) அனுமதிக்கப்படுகிறது.
மனைவியைத் தவிர மற்றவர்களை தங்கையாக பாவிக்க வேண்டியது இந்து தர்மத்தின் ஒரு அம்சம். அதைப் போலவே பலதார மணமும் இந்து தர்மத்தில் விரும்பபடவில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பதே இதன் முக்கிய நோக்கம். நேசித்தவளுக்கு துரோகம் செய்து மற்றவர்களை காமக்கண்ணோடு அணுகும் போலி வேடதாரிகளை இந்த பிரபஞ்சம் மிகக் கடுமையாக தண்டிக்கும் என்பதில் ஐயமில்லை.
Youtube
உரிய வாழ்க்கைத்துணையிடம் உண்மையாக இருப்பதும் தன்னுடைய பாலியல் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதும் இந்து மதத்தில் புனிதமாகவே கருதப்படுகிறது. இதனை தடை செய்ய இந்து மதம் முயற்சித்ததும் இல்லை.
இந்திய கலாச்சாரமும் இந்து மதமும் காமத்தை மிகவும் புனிதமான ஒன்றாகவே பாவிக்கிறது. பூமியில் உயிர் இனங்கள் பெருக இயற்கை தந்த வழியான காமம் சமூக அமைப்பிற்கு தீமை செய்யாத வண்ணம் நடக்க சில நெறிமுறைகளை வகுத்திருக்கிறது. இதனை துஷ்ப்ரயோகம் செய்பவர்கள் பிரபஞ்சத்தின் கோடிக்கணக்கான கண்களில் இருந்து தப்பிக்க முடியாது.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!