இந்த டிஜிட்டல் டேட்டிங் யுகத்திலும் இந்தியாவில் மாதம் தோறும் 8000 பேருக்கு மேல் தங்களுடைய முதலிரவன்று எப்படி நடப்பது என்று தேடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெற்றோர் பார்த்து செய்யும் திருமணமோ காதல் கடிமணமோ எதுவாக இருந்தாலும் அதற்கென ஒரு முதல் இரவு இருந்தே ஆக வேண்டும் அல்லவா.
Table of Contents
அந்த முதல் இரவை புதிதாக மணமாகப் போகும் தம்பதிகள் எப்படி அணுக வேண்டும் என்பதை சில குறிப்புகள் தந்து உதவுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
சிறந்த முதலிரவுக் குறிப்புகள் (Excellent First Notes)
உங்கள் முதல் இரவு (first night) வெகு சிறப்பாக அமைய சில குறிப்புகள் தருகிறோம். நிச்சயம் திருமணம் ஆகப் போகும் பெண்களுக்கு இது மிகப்பெரிய உதவிதான் இல்லையா. தன்னுடைய கணவரை சந்தோஷப்படுத்த அவர்கள் தயாராகத்தான் வேண்டும் அல்லவா !
முதல் இரவுக்கு முன்னர் புரிதல் வேண்டும் (Understanding Before The First Night)
நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகும் நபரைப் பற்றி நிச்சயம் நல்லதொரு புரிதல் வேண்டும். அதிகம் பரிச்சயப்படாத நபரை உங்களால் அவ்வளவு எளிதில் அணுக முடியாது. இதில் முக்கால் சதவிகித வேலையை உங்கள் தொலைபேசி பேச்சுக்கள் முடித்து விடும். மீதத்தை உங்கள் மேல் போதை கொண்டிருக்கும் உங்கள் வருங்காலக் கணவர் முழுமை செய்வார்.
கண்கள் பொய் சொல்லாது (Eyes Do Not Lie)
கண்கள் எனும் வாசல் வழியாகத்தான் உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் இதயத்தில் நுழைந்ததாக வேண்டும். நீங்கள் இருவரும் வரும்போது அவர் கண்களை ஊடுருவி அவர் இதயத்துக்குள் சென்று விடுங்கள். கண்ணோடு கண் நோக்குவதன் மூலம் உங்கள் இருவருக்கும் இடையே உள்ள இடைவெளிகள் குறைய ஆரம்பிக்கும். உங்கள் முதல் இரவு (first night) உறவுகள் வளர ஆரம்பிக்கும்.
கூச்சங்கள் வேண்டாம் (Don’t Scream)
பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணங்களில் மணமகள் மணமகன் இடையே ஒருவித கூச்சம் நிலவியபடியே இருக்கும். அருகருகே அமரவோ அல்லது ஒருவரை ஒருவர் மற்றோர் முன்னிலையில் பற்றிக் கொள்ளவோ கூச்சப்படுவார்கள்.
இதனைத் தவிர்க்க திருமணத்திற்கு முன்னர் உங்கள் மணப்பெண் உடன் டின்னர் செல்லும் சமயங்களில் அவருக்கு நெருக்கமாக அமருங்கள். அடுத்தவர் பார்த்து வியக்கும் வண்ணம் இல்லா விட்டாலும் உங்கள் தோள்கள் ஒன்றோடு ஒன்றாக உரசும் படி அமர்ந்து அவர்கள் கூச்சத்தை போக்கலாம். திரையரங்குகளின் இருள் உங்கள் திருமண நெருக்கத்தை அதிகரிக்கலாம்.
அனுபவம் பேசட்டும் (Let The Experience Speak)
உங்களுக்கு மிகவும் பதட்டமாக இருந்தால் உங்கள் திருமணமான நண்பர்களிடம் இருந்து உதவி பெற தயங்காதீர்கள். முதலிரவு அறைக்கு செல்லும் முன்னர் உங்கள் காதோரமாக சொல்லப்படும் ஆயிரம் அறிவுரைகள் உங்கள் பதட்டம் காரணமாக உங்களுக்குள் இறங்காமல் போகலாம். ஆகவே திருமணம் நடக்க சில நாட்கள் இருக்கும்போது இது பற்றி உங்கள் அனுபவம் வாய்ந்த நண்பரிடம் கேளுங்கள்.
இதமான ஹக் இன்னும் கொஞ்சம் நீளட்டும் (Let The Pleasant Hugh Go A Little Further)
திருமணத்திற்கு முன்னர் நீங்கள் இருவரும் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் பல்வேறு விதமாக தொடரும். அப்போதெல்லாம் பிரியும் சமயங்களில் வெறுமனே டாடா காட்டாமல் உங்கள் கணவன்/மனைவி ஆக மாறப்போகும் வாழ்க்கைத் துணையை நீண்ட நேரம் அணைத்து கொள்ளுங்கள். இது இருவருக்கும் வசதியாக இருக்கும்போது மட்டுமே இப்படி செய்ய வேண்டும். ஒருவருக்கு விருப்பம் இல்லாவிட்டால் தொடர வேண்டாம்.
திருமண நாளில் ஃப்ளிர்ட் செய்யுங்கள் (Flirt On The Wedding Day)
திருமணத்தன்று மாப்பிள்ளை அழைப்பு, மணமகள் நலங்கு என பல நிகழ்ச்சிகள் நடைபெறலாம். அது எல்லாம் நடந்தாலும் ஒருவரை ஒருவர் ரசிக்கத் தயங்காதீர்கள். அது உங்களுக்கான நாள்தான் என்பதை மறந்து விட வேண்டாம். அருகில் இருக்கும் சமயமெல்லாம் உங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணையோடு ஃப்ளிர்ட் செய்யுங்கள்
வலிகளை பற்றிய பயம் வேண்டாம் (Don’t Be Afraid Of Pains)
உங்கள் சின்ன சின்ன ஸ்பரிசங்கள் முத்தங்கள் எல்லாம் எங்கே முடிய வேண்டுமோ அங்கே வந்து விட்டாயிற்று. அந்த முதல் இரவை நீங்கள் சந்திக்கத்தான் போகிறீர்கள். அந்த சமயத்தில் என்னாகுமோ ஏதாகுமோ என்கிற பயம் பெண்களுக்கு அதிகம் இருக்கும். ஆகவே ஆண்களே உங்கள் தீண்டலை மென்மையாக்குங்கள்.
முதல் முதல் வரவிருக்கும் அந்த இரவுக்கான ஏற்பாடுகள் (Preparation For First Night)
இந்த உலகில் ஒருவரைக் கரம் பிடித்து அல்லது ஒருவர் மீதான ஆழமான காதல் மூலம் அவரோடு கை சேர்ந்து வாழ விரும்பும் அனைவருக்குமே அவர்களது காதல் அல்லது ப்ரியம் எவ்வளவு தூய்மையானதோ அதே அளவுக்கு இந்த முதல் இரவு சேர்க்கையும் பரிசுத்தமானதாகும்.
முதலிரவுக்கான அலங்காரங்கள் (Decorations For Fountain)
அவர்களை உயிரோடு உயிர் ஒன்றாக இணைக்கப்போகும் அந்த இரவை மிக அழகாக அலங்கரித்தலும் அதனை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மிக முக்கியமானவை. அதனைப்பற்றி பார்க்கலாம்.
வழக்கமான அலங்காரம்
இது மிகவும் எளிமையான அலங்கார முறை. சுத்தமான அறையில் மோகம் தூண்டும் வாசனை மலர்களை கொண்டு அலங்கரிக்க வேண்டும். படுக்கையில் மலர்களை தூவி அறையெங்கும் வீசுவது மலரின் வாசனையா அல்லது உங்கள் தாபத்தின் வாசனையா என்பதை அறிய முடியா வண்ணம் இந்த அலங்காரம் இருக்கும். கூடவே கொஞ்சம் உணவு மற்றும் நீர் அல்லது பழரசம் இருக்க வேண்டியது அவசியம்.
பாரம்பர்ய அலங்காரம்
மேலே சொன்னதை போலவே தான் அலங்கரிக்கப்பட வேண்டும். கூடவே சந்தன கிண்ணம் போன்றவை இருப்பது மணமகள் மணமகன் இருவருக்கும் தங்கள் ஸ்பரிசத்தை ஆரம்பிக்க இயல்பான உதவியாக இருக்கும்
ஹோட்டல் வகை அலங்காரம்
தற்போதெல்லாம் முதலிரவு என்பதை பெண் வீட்டிலோ அல்லது மாப்பிள்ளை வீட்டிலோ வைப்பதற்கு பதிலாக எந்த மண்டபத்தில் அல்லது ஹோட்டலில் திருமணம் நடந்ததோ அங்கேயே முதல் இரவையும் வைக்கிறார்கள்.
ஒரு சிலர் நட்சத்திர ஹோட்டல்களில் டீலக்ஸ் அறைகளை இதற்காகவே வாடகைக்கு எடுத்து தங்களுடைய நண்பன் அல்லது நண்பியின் முக்கிய நாளை அற்புதமாக மாற்றி விடுகிறார்கள்.
அவர்கள் அலங்காரம் என்பது அறை முழுதும் இதய வடிவிலான அலங்காரங்கள், அதனை வடிவமைக்க வாசனையுள்ள புத்தம் புதிய ரோஜாபூக்கள் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். ரகசியமாக ஒரு வாழ்த்து அட்டை ஒன்றை படுக்கையின் தலைமாட்டில் வைத்து விடுகிறார்கள். வாசனை மெழுகுவர்த்திகள் உங்கள் காதல் எண்ணங்களை அதிகரிக்கும்.
கவர்ந்திழுக்கும் அலங்காரங்கள்
மிகப்பெரிய செலவுக்கு தயாராக இருப்பவர்கள் இதற்காக தீம் ரிசார்ட் அல்லது தீம் முறையில் தங்கள் முதல் இரவு அறையை அலங்காரம் செய்து கொள்ளலாம். சினிமாவிற்கு செட் போடுவார்கள் இல்லையா அது போல.
கிழக்கு ஆசிய தம்பதிகளின் முதல் இரவை போன்றே உங்கள் இரவையும் மாற்ற அதே போன்றதொரு செட் போடப்பட்டு அது சம்பந்தமான விஷயங்கள் அந்த அறையில் இருக்குமாறு அலங்கரிப்பார்கள். ஒரு சில ஹோட்டல்களில் தாம்பத்தியம் ஆரம்பிக்கும் முன்னர் திருமணமான ஜோடிகளுக்கு ஒன்றாக மசாஜ் செய்து விடுவார்கள். ஸ்பா தெரபியும் உண்டு
Youtube
முதலிரவு பரிசுகள் (Nightclub Gifts)
இப்போதைய நவீன தலைமுறை தம்பதிகள் தங்கள் வாழ்க்கைத் துணையை முதன் முதலில் சந்திக்கப் போகும் அந்த இரவு அன்று வித்யாசமான பரிசுகளைக் கொடுத்து அசத்துகிறார்கள்.
இதனை ஒரு பேக்கேஜ் பரிசாகவே கொடுக்கும் வசதிகள் வந்திருக்கின்றன. முதல் இரவன்று மணமகளுக்கு என்னவெல்லாம் தேவைப்படும் என்பதை யோசித்து தலைவலி மாத்திரை முதல் கருத்தடை மாத்திரை வரை எல்லாமும் இதில் அடக்கம். அதில் இருப்பவை
1.தலைவலி மாத்திரைகள்
2.மேக்கப் ரிமூவர் & சீப்பு
3.ஒவ்வாமை மாத்திரைகள்
4. ஹேர் பேண்ட் மற்றும் கிளிப்கள்
5.மாய்ச்சுரைசிங் க்ரீம் மற்றும் லோஷன்கள்
6.கருத்தடை மாத்திரைகள் (மருத்துவர் அறிவுரையோடு தரப்பட வேண்டும்)
7.ஷாம்பு, சோப் , பேஸ்ட் பிரஷ் போன்றவை
8.மாற்று உடைகள்
9.அவசரத்திற்கு தேவையான மாதவிலக்கு நாப்கின்கள்.
10.ஆணுறைகள்.
11.ஷேவிங் செட்கள்.
12.டியோடரண்ட்.
மணமகளுக்கு பரிசுகள் (Gifts For The Bride)
மணமகளுக்கு பிடித்தமான பொருள்களை முதலிரவன்று கொடுத்து அசத்தலாம். அவருக்கு பிடித்தமான சாக்லேட் முதல் அவருக்கு விருப்பமான பொம்மைகள் வரைக்கும் அவருக்கு எதைக் கொடுத்தால் மிக சந்தோஷமாக இருப்பாரோ அதை நீங்கள் கொடுக்கலாம். ஒரு சில குறும்புக்கார கணவர்கள் மனைவி அணிவதற்கான கவர்ச்சியான உள்ளாடைகளை பரிசாகக் கொடுத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிப்பதும் உண்டு
மணமகனுக்கு பரிசுகள் (Bridal Gifts)
மணமகனுக்கு அந்த இரவே மிகப்பெரும் பரிசுதான். ஆனாலும் அவருக்கு விருப்பமான வண்ண ஆடைகள் அல்லது வாசனை மெழுகுவர்த்திகள் அவருக்குப் பிடித்தமான பூக்கள் தருதல் போன்றவை அவருக்கு பரிசாக கொடுக்கலாம். படுக்கையை வாசனையாக்கும் வாசனை எண்ணெய்கள் வாங்கி கொடுக்கலாம். அல்லது சிறந்த ரொமான்ஸ் பாடல்களை அவருக்கு பென்ட்ரைவில் வழங்கி அந்த இரவை அற்புதமான இரவாக மாற்றலாம்.
முதல் இரவிற்கான மனநிலை ஏற்பாடுகள் (Mood For First Night)
முதல் முதலில் உங்கள் காதல் துணையுடன் கழிக்கப்போகும் இரவை நீங்கள் மறக்க முடியாத இரவாக மாற்ற வேண்டியது அவசியம். ஆகவே பயந்து போய் பொம்மை போல இருக்காமல் சொந்த கற்பனைகளை பயன்படுத்தி அந்த இரவை மேலும் அழகாக்கி விடுங்கள்.
இந்த இரவை மறக்கவே கூடாது (Night Should Be Unforgettable)
நிச்சயமாக இந்த இரவை மறக்கவே கூடாது என்பதற்காகவே ஏடாகூடமாக எதையும் செய்து விடாதீர்கள். ஒருவேளை இருவருக்குமே அசதியாக இருக்கலாம். உனக்காக நான் இருக்கிறேன் என்கிற ஒற்றை நெற்றி முத்தத்துடன் கூடிய அணைப்பில் அன்றைய இரவு கழிந்தாலும் அதனையும் மறக்க முடியாதுதான். அன்றைய இரவு அன்புதான் தெரிய வேண்டும் ஆசை அல்ல.
காமசூத்திரா புத்தகத்தை உதவிக்கு அழைக்கலாம் (Use Kamasutra For Help)
எதுவுமே தெரியாமல் போய் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருப்பது உங்கள் துணையைக் கலவரப்படுத்தும். இவங்களுக்கு சொல்லிக் கொடுத்தே எனக்கு வயசாயிடும் போலருக்கே என அவர்களின் மைண்ட் வாய்ஸ் கதறுவது உங்களுக்கு கேட்காது.
அப்படி சமர்த்து பிள்ளையாக இல்லாமல் கொஞ்சம் காமத்தைப் பற்றி வாஸ்த்யாயனர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதையும் கொஞ்சம் எட்டி பார்த்து விட்டு முதலிரவு அறைக்குள் செல்வது இருவருக்குமே நல்லது.
தொடர்பு கொள்ளுங்கள் (Get In Touch)
எதையும் ஆரம்பிக்கும் முன்னர் இருவரும் சற்று நேரம் பேசிக்கொண்டிருங்கள். நடந்து முடிந்த திருமணம் பற்றியோ அவரவர் குடும்பம் பற்றியோ சில நிமிடங்கள் பேசுங்கள், அப்போது முதலிரவு பதட்டம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும் போது நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.
நேர்த்தியை எதிர்பார்க்காதீர்கள் (Don’t Expect Elegance)
இது உங்கள் இருவருக்குமே முதல் தாம்பத்யம் என்பதால் நீங்கள் கண்ட, கேட்ட அனுபவங்கள் போலவே இதிலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காமல் இருப்பதே சிறந்த முடிவு. இது ஒரு முதல் முயற்சி என்றே இந்த விஷயத்தை நீங்கள் அணுகினால் ஏமாற்றங்கள் இருக்காது.
கன்னித்தன்மை இழப்பதற்கும் ரத்தக்கசிவுக்கும்.. (To Loose Virginity And Bleeding)
நிறைய திரைப்படங்கள் மற்றும் வதந்திகள் காரணமாக ஒரு பெண் முதல் முதலில் தனது கன்னித்தன்மை இழக்கும்போது ரத்தம் வரும் என்கிற கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம். கன்னித்தன்மைக்கும் ரத்தக்கசிவிற்கும் சம்பந்தம் இல்லை. சமயத்தில் அப்படி எதுவுமே ஆகாமல் போகலாம். உடல்வாகின் அடிப்படையிலேயே இது நிகழும். ஆகவே பயப்பட வேண்டாம்.
ஆர்கஸம் வரலாம் வராமலும் போகலாம் (You May Or May Not Have Orgasm)
இது முதல் முறை என்பதால் இந்த முறையிலேயே ஆர்கஸம் பற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். ஒரு சிலருக்கு அது நடக்க சில நாட்கள் பிடிக்கலாம். ஆகவே அதனை ஒரு குறையாகக் கருத வேண்டாம். பொதுவாகவே பெண்களுக்கு ஆர்கஸம் கொஞ்சம் தாமதமாகும். இது இயற்கைதான்.
உங்களவருக்காக ஸ்பெஷல் ஆடைகள் (Special Dresses For You)
அன்றைய இரவை உங்கள் கணவர் மறக்காமல் இருக்க வேண்டும். அன்றைக்கு உங்கள் தோற்றம் எப்படி அவரை கிளர்ச்சியுற வைக்கிறதோ அந்த நாளையும் அந்த வடிவத்தையும் அவர் பல காலங்கள் மறக்கவே மாட்டார். ஆகவே அதற்கு ஏற்ற உள்ளாடைகளை அணியுங்கள். அவரின் கண்களுக்கு விருந்தாக்குங்கள்.
முதலிரவை நடத்துங்கள் (Conduct The First)
எல்லாம் முடிந்த பின்னர் உங்கள் முதல் முதல் இரவு வெறும் கனவாக மாறிவிடாமல் இருக்க தாம்பத்யத்தை முயற்சியுங்கள். அதற்கான மூடைத் தயார் செய்ய சென்டட் கேண்டில்கள் பொருத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் திருமண இரவு. உங்கள் இருவருக்கு மட்டுமேயான இரவு.
ஆகவே உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை விரட்டி விடுவதற்கு தயங்கவே தயங்காதீர்கள். அவர்கள் கிண்டல் செய்தாலும் புரிந்து கொள்வார்கள். அதன் பின்னர் நிம்மதியாக உங்கள் தாம்பத்யத்தை தொடங்குங்கள். வாழ்நாள் முழுமைக்கும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள். அதுதான் திருமண பந்தத்திற்கான சிறந்த பரிசு.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!