"நம்ம கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டிலா! அவரோடு ஜோடி சேர்வது யார் தெரியுமா!"

"நம்ம கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டிலா! அவரோடு ஜோடி சேர்வது யார் தெரியுமா!"

இது என்ன மாயம் படத்தில் மாயாவாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் (keerthy suresh) யார் இந்த தேவதை என்று என்று முதல் படத்திலேயே அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தவர் ! 


சுண்டியிழுக்கும் நிறமோ, மெல்லிய இடை காட்டும் ஆபாசங்களோ இல்லாமல் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் வெற்றி பெற்ற நடிகை என்றால் அது தற்போது கீர்த்தி சுரேஷ்தான் எனலாம்.


அவரது முகபாவனைகள் மற்றும் அவரது குரல் அவரது ப்ளஸ் பாயிண்ட்கள். ஏற்கனவே அம்மா மேனகா தமிழ் நடிகையாக இருந்ததும் தனது பள்ளி இறுதி வரை சென்னையில் படித்ததும் கீர்த்திக்கு ப்ளஸ் ஆகின.ஆரம்ப கால படங்களில் வழக்கமான ஹீரோயின் கடமைகளை செய்தவர் வெகு சீக்கிரமே தனது தனித்துவத்தை நிரூபிக்கும் வாய்ப்பும் வந்தது.


கடந்த மே மாதம் வெளிவந்த நடிகையர் திலகம் எனும் சாவித்ரி அம்மாவின் சுயசரிதை இவரது சினிமா வாழ்க்கையை மாற்றியமைத்தது. இளம் பெண்ணான கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவே மாறி அந்தப் படத்தின் கனத்தை தாங்கினார்.


அதன் பின்னர் முன்னணி இயக்குனர்களும் முன்னணி ஹீரோக்களும் கீர்த்தி சுரேஷை தங்கள் படத்தில் இணைத்தனர்.தமிழ் சினிமாவிற்கு வந்த சில மாதங்களில் வருடத்திற்கு 7 படம் என்பது கீர்த்தி சுரேஷின் திறமைக்கு கிடைத்த மரியாதை எனலாம்.


முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் தனது சம்பளத்தை அதிகரிக்காமல் அதிக ஆசைப்படாமல் தனது நடிப்பில் கவனம் செலுத்திய கீர்த்தி சுரேஷிற்கு தற்போது பாலிவுட் தனது கதவுகளை திறந்து விட்டிருக்கிறது.


அதன் தொடர்ச்சியாக தற்போது பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த வருடம் கீர்த்திக்கு ஜாக்பாட் என்றுதான் சொல்ல வேண்டும்.


தனது முதல் பாலிவுட் படத்தை கீர்த்தி சுரேஷ் உறுதிப்படுத்தி இருக்கிறார்.பாதை ஹோ இயக்குனர் அமீர் ஷர்மா இவரை பாலிவுட்டிற்கு அறிமுகப்படுத்துகிறார்.இவரோடு திரையில் ஜோடியாக இணைபவர் வேறு யாருமல்ல அஜய் தேவ்கன் தான்.


இவரது முதல் பாலிவுட் படத்திலேயே ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரும் இணைந்து தயாரிப்பது இவரது அதிர்ஷ்டம்தான் எனலாம். மேலும் ஆகாஷ் சாவ்லா மற்றும் அருணாவா ஜாய் சென்குப்தா ஆகியோரும் உடன் தயாரிக்கின்றனர்.


சையத் அப்துல் ரஹீம் எனும் ஒரு கால்பந்து வீரரின் சுயசரிதை என்றாலும் கீர்த்திக்கும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் அமைத்திருக்கறதாம்.தனது முதல் பாலிவுட் படத்திலேயே தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக அமைந்திருப்பது மேலும் சிறப்பான செய்திதான் இல்லையா. இந்தப் படத்தில் ரொமான்ஸ் ஒரு முக்கிய பங்கு வகிக்க போகிறது என்கிறார்கள்.


ஓகே கீர்த்தி மா ! உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் !


#POPxoWomenWantMore


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்                                                                                                                


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.