சிறந்த தமிழ் ஹீரோயின்கள்

சிறந்த தமிழ் ஹீரோயின்கள்

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகள் (heroins) என்று கூற வேண்டும் என்றால் நாம் நிச்சயம் தமிழ் சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்துதான் சொல்லியாக வேண்டும்,


குறிப்பாக 70கள் மற்றும் 80களில் தமிழ் சினிமாவில் நடிகைகள் மிக சிறப்பான திரைப்படங்களைத் தந்திருக்கின்றனர். இயக்குனர் ஸ்ரீதர், இயக்குனர் பாலசந்தர் இயக்குனர் பாரதிராஜா போன்ற பெரிய இயக்குனர்களின் பெரும்பாலான படங்கள் நாயகியை அடித்தளமாக கொண்ட அழுத்தம் திருத்தமான கதைகளை கொடுத்தது.


பானுமதி அம்மா முதல் சுஜாதா, ஸ்ரீப்ரியா , ஸ்ரீதேவி, சுஹாசினி, ரேவதி வரையிலான பல நடிகைகள் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை கையில் எடுத்து பெண் இனத்திற்கு பெருமை சேர்த்தனர். #POPxoWomenWantMore


அதன் பின்னர் நாயகனை காதலித்து கொண்டிருப்பதையே முழு வேலையாக செய்யும் பல கதைகள் வந்ததால் ஹீரோயின்கள் என்பவர்கள் வெறும் செல்லுலாய்டு பொம்மைகள் ஆகி போனார்கள்.


மீண்டும் சில காலங்களுக்கு பின்னர் ஹீரோயினை மையமாக கொண்ட பல கதைகள் வந்தன. அல்லது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தர கூடிய பல படங்கள் வந்தன.


அவற்றில் சிறந்த ஹீரோயின்கள் பற்றிய தொகுப்புதான் இந்த கட்டுரை.


நயன்தாரா


எல்லா வயதினரும் விரும்பும் நயன்தாரா ஆரம்பத்தில் மசாலா படங்களில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினாலும் விரைவிலேயே தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார். சொந்த வாழ்வின் சறுக்கல்களுக்கு பின் சறுக்கல்களுக்கு முன் என்று இரண்டு வகையாக இவரது சினிமா வாழ்க்கையை பிரித்தோமானால் சறுக்கலுக்கு பின்னர்தான் நயன்தாரா தனக்கான இடம் இதுதான் என்பதில் பிடிவாதமாக நின்றார்.


பிரபுதேவாவுடனான உறவிற்கு பின் சீதையாக இவர் நடித்த தெலுகு படம்தான் இவரது இறுதி படம் என்று முடிவாயிற்று. அந்த சமயத்தில் தனது கடைசி படத்தின் கடைசி காட்சி முடிந்தவுடன் நயன்தாரா கதறி அழுத போது சினிமா மீதான இவரது காதல் பலருக்கு புரிந்திருக்கலாம். அந்த உறவில் ஏற்பட்ட பிரிவிற்கு பின்னர் நயன்தாரா புது வடிவம் எடுத்தார். ஹீரோயின் மையப்படுத்திய பல கதைகளில் நடித்தார். இன்றளவும் நம்பர் ஒன் ஆக இருக்கிறார்.த்ரிஷா


மௌனம் பேசியதே படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். லேசா லேசா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராவிட்டாலும் த்ரிஷாவுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கியது. த்ரிஷாவிடம் சில கொள்கைகள் உண்டு. ஆகவே அதற்கேற்ற கதையாக இருந்தால் மட்டுமே இவர் நடித்து வந்தார்.


இவர் நடித்த மசாலா படங்கள் மிகக் குறைவான எண்ணிக்கை கொண்டவையே. மற்றபடி ஹீரோயினுக்கு படம் முழுவதும் காட்சிகள் வரும்படிதான் இவர் கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறார். மனசெல்லாம் போன்ற படங்கள் வியாபார வெற்றி பெறவில்லை என்றாலும் இவரது கதாபாத்திரம் அழுத்தமானவை. கில்லி படத்தின் தனலட்சுமி கதாபாத்திரத்தை யாரும் மறக்க முடியாது அதன் பின்னர் VTV ஜெஸ்ஸியானார். இப்போது 96 ஜானுவாக மிளிர்கிறார். எப்போதும் நேசிக்க கூடிய தேவதையாக த்ரிஷா இருந்து வருகிறார். சொந்த வாழ்க்கையில் இவருக்கு எழுந்த சிக்கல்களை தனது மௌனத்தால் கையாண்ட விதம் இவரது தைர்யம் மற்றும் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு.சினேகா


விரும்புகிறேன் எனும் படம் மூலம் அறிமுகமான இவர் அனைவர் விரும்பும் நாயகியாக திகழ்ந்தார். குடும்பப்பாங்கான கதாபாத்திரமா கூப்பிடு சினேகாவை என்ற அளவிற்கு இவரது கதாபாத்திர தேர்வுகள் இருந்தது.


பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் பலவித கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சிறிய வயதே ஆனாலும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பொறுப்பான அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி இருப்பார். ஹீரோயின்களில் காமெடி செய்வது இவருக்கு சிறப்பாக வரும். அமைதியான கதாபாத்திரமோ துறுதுறுப்பான பெண் போன்றோ எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடிப்பார்.சிம்ரன்


90களின் பாதியில் இளைஞர் உலகமே சிம்ரன் சிம்ரன் என்று புலம்பியபடியே இருந்ததை நான் கண்டிருக்கிறேன். ஒட்டு மொத்த தமிழகத்தையும் தனது நடனத்தால் வசீகரித்தவர் சிம்ரன். இந்தக் கதாபாத்திரம்தான் என்றல்லாமல் எல்லாவகையான வேஷங்களையும் சிறப்பாக செய்தவர். ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும்போதே பார்த்தேன் ரசித்தேன் படத்தில் வித்யாசமான வில்லியாக தோன்றி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தவர். இப்போதும் இளமை துள்ளும் பேரழகுடன் பேட்ட படத்தில் சில காட்சிகளே வந்தாலும் ரசிகர்களின் நெஞ்சத்தை தனது அழகால் நிறைந்தவர்.ஜோதிகா


வாலி படத்தின் மூலம் சில காட்சிகளில் தோன்றினாலும் அனைவர் மனதையும் கொள்ளை அடித்தவர். அவரது கண்களுக்காக மட்டுமே பல லட்சம் ரசிகர்கள் இருந்தார்கள். தனது துறுதுறுப்பான நடிப்பால் தமிழ் திரையுலகை நீண்ட நாள் வசப்படுத்தி வைத்திருந்தார். என்றாலும் கொஞ்சம் செயற்கைத்தனமாக இவரது நடிப்பு தனிப்பட்டு தெரிந்தது. ஆனாலும் இன்று வரை அதனை அப்படியே வைத்திருக்கிறார்.சந்திரமுகி மற்றும் மொழி படத்தில் இவரது நடிப்பு தனித்து தெரிந்தது.


சூர்யாவை திருமணம் செய்த பிறகு இவர் நடித்த 36 வயதினிலே ,மகளிர் மட்டும் மற்றும் இப்போது வெளியான காற்றின் மொழி போன்ற படங்கள் பெண்களுக்கு தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் தருபவை என்று கூறப்படுகிறது.லைலா


90களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லைலா. தனது குறும்புத்தனம் மற்றும் நகைச்சுவையால் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பெற்றவர். பெண்களுக்கும் இவரது படங்கள் என்றால் மிகவும் விருப்பம்.


மிக சில மசாலா படங்களில் நடித்திருந்தாலும் கண்ட நாள் முதலாய் போன்ற படங்கள் இவருக்கு மிக சிறந்த நடிகை எனும் பெயரை கொடுத்தது. நந்தா மற்றும் பிதா மகன் இவருக்கு பேரையும் புகழையும் தேடித் தந்தது. தனது காதலரை திருமணம் செய்த பிறகு லைலா நடிப்பதை நிறுத்திக் கொண்டது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.சமந்தா


தமிழ் ரசிகர்களின் செல்ல பெண்ணாக சமந்தா இன்று வரை நிலைத்திருக்கிறார். வித்யாசமான கதாபாத்திரங்களை தேடி இவர் நடிக்கப்பதால் இவரது ரசிகர்கள் எப்போதும் இவரை நேசிக்கிறார்கள். இவரும் ஆரம்பத்தில் ஒரு சில மசாலா படங்களில் நடித்திருந்தாலும் விண்ணைத் தாண்டி வருவாயா படம் இவருக்கு நல்ல திருப்பத்தை கொடுத்தது.


அதன் பின்னர் இவர் நடித்த நீதானே என் பொன் வசந்தம் படம் சூப்பர் ஹிட்டானது. சமந்தா பீவர் உருவாகியது. பெண்களும் கொண்டாடும் நடிகையாக சமந்தா இருக்கிறார் என்றால் அதற்கு அவரது அழகு நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் தெளிவு போன்றவைதான் காரணம்.கீர்த்தி சுரேஷ்


தமிழ் சினிமாவின் சமீபத்திய வரவு. பழைய நடிகை மேனகாவின் மகள். ஆரம்பத்தில் சில மசாலா படங்களில் ஹீரோ பின்னால் காதலிக்கும் வேடங்கள் செய்தாலும் குறுகிய காலத்தில் தன்னை தனிப்பட்ட நடிகையாக காட்டியவர். ரெமோ படத்தில் பிஸி ஸ்ரீராம் கண்களின் வழியாக கீர்த்தி சுரேஷின் அழகு அற்புதமாக வெளிப்பட்டது. அதன் பின் வேறு மொழிகளில் நடித்த கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து 7 படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணியில் இருக்கிறார். மஹாநடிகை எனும் சாவித்திரி அம்மாவின் சுயசரிதை படம் இவரது சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. இப்போது வரை முன்னணி ஹீரோக்களின் ஹீரோயினாக இவர்தான் இருக்கிறார்.வரலக்ஷ்மி


போடா போடி எனும் படத்தின் மூலம் அறிமுகமான வரலக்ஷ்மி செல்லமாக வரூ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவரது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை பல சிரமங்களை தந்தாலும் ஒரு இடைவெளிக்கு பின்னர் வரலக்ஷ்மி தனக்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் தெளிவாகி விட்டார்.


இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படம் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்தது. அதன்பின்னர் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் கவனம் செலுத்தினார். விக்ரம் வேதா போன்ற படங்கள் உதாரணமாக சொல்லலாம். இப்போது இவர் நடிப்பில் வெளியான சர்க்கார் படம் அதில் நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷை விட பெரும்பெயரை பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கதுபடங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.