மலாய்காவின் மகன் மற்றும் ஜான்வி மற்றும் ஆறு வித்யாசங்கள் ! நெட்டிசன்ஸ் கிண்டல் !

மலாய்காவின் மகன் மற்றும் ஜான்வி மற்றும் ஆறு வித்யாசங்கள் ! நெட்டிசன்ஸ் கிண்டல் !

எப்போதும் மலாய்காவின் மீது பொதுமக்கள் பார்வை விழுவதும் பரபரப்பாவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது. அர்ஜுன் கபூரை அவர் மணக்க போகிறார் என்கிற செய்தி வெளியானதில் இருந்தே அவர் சர்ச்சைக்குரிய பிரபலமாகிவிட்டார்.


இதனிடையில் சமீபத்தில் மலாய்கா சம்பந்தப்பட்ட புகைப்படம் ஒன்று இணைய மக்களிடையே வைரல் ஆகி வருகிறது. இது மலாய்காவின் மகன் அர்ஹான்( Arhaan) பற்றியது. நீண்ட நாட்களுக்கு பின்னர் மலாய்கா தனது மகனுடன் வெளியே வந்திருக்கிறார். அது பொது இடம் கூட அல்ல.. மலாய்க்காவின் அம்மா வீட்டிற்கு லன்ச் சாப்பிட இருவரும் சென்றிருக்கிறார்கள்.


உன்னை எனக்கு புரிகிறது ப்ரியங்கா ..நிக் பற்றி மனம் திறந்த ப்ரியங்கா !அங்கிருந்து கிளம்பும்போது மீடியாவின் பார்வையில் அவர்கள் இருவரும் பட்டிருக்கின்றனர். இந்த படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்த உடனே மலாய்காவின் மகனை பற்றி ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர் நெட்டிசன்கள். ஒரு சிலரோ அர்ஹானின் ஹேர் ஸ்டைல் பற்றி பார்த்து கொள்ள சொல்ல சொல்லி மலாய்காவிடம் கூறி இருக்கின்றனர்.


ஒரு சிலரோ அதற்கு ஒருபடி மேலே போய் ஜான்வி மற்றும் அர்ஹான் இருவரின் முக ஜாடையை பற்றி கூறியிருக்கின்றனர். இருவரும் ஒரே முகம் போல தோன்றுவதாகவும் ஜான்வியின் ஆண் ஜாடைதான் அர்ஹான் என்றும் கூறி ட்ரோல் செய்துள்ளனர்.


சௌந்தர்யா ரஜினிகாந்த் - பெண்களில் அதிகம் ஆசிர்வதிக்கப்பட்டவர்செலிபிரிட்டிகள் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாம் என்று சிலர் நினைக்கின்றனர். இதில் அவர்களது பிள்ளைகளும் தப்புவதில்லை. ஜான்வி மற்றும் அர்ஹான் இருவருமே இப்போதுதான் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கின்றனர். அதற்குள் அவர்களை இப்படி விமர்சிப்பது நியாயமில்லை என்று ஒரு சாரார் கூறி வருகின்றனர்.


மலாய்கா தனது மகனுடன் எப்போதும் நேரம் செலவழித்து வருபவர். அர்ஜுன் கபூர் இருந்தாலும் மகனிற்கான நேரத்தை சமப்படுத்துபவர் என்பதை கரீனா கபூரின் ஒரு இன்டெர்வியுவில் அவர் கூறி இருந்தார். அர்பாஸ் உடனான விவாகரத்து பற்றி அர்ஹானிடம் பேசியபோது "உங்களை சந்தோஷமாக பார்ப்பதுதான் எனது சந்தோஷம்" என்று கூறியிருக்கிறார்.ஏற்கனவே நிறைய குறும்படங்களில் நடிக்கும் அர்ஹானை வெகு விரைவில் பாலிவுட்டில் பார்க்கலாம் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஆலியாவை அப்படி வளர்க்கவில்லை' - அம்மா சோனி; 'லவ் யூ ரன்பீர்' மகள் ஆலியா !

 


 


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் Instagram           


---                      


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.