உன்னை எனக்கு புரிகிறது ப்ரியங்கா .. நிக் பற்றி மனம் திறந்த ப்ரியங்கா !

உன்னை எனக்கு புரிகிறது ப்ரியங்கா .. நிக் பற்றி மனம் திறந்த ப்ரியங்கா !

ப்ரியங்கா நிக் (Priyanka nick jonas) இருவர் பற்றியும் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. சமீபத்தில் கூட இருவருக்கும் விவாகரத்து என்று போலி செய்திகள் உலகெங்கும் வலம் வந்தன.


அந்த செய்தியை மறுத்து இதனை ஆரம்பித்து வைத்த பத்திரிகை மீது வழக்கு போட இருக்கிறார் பிரியங்கா. இந்நிலையில் இவர்கள் வசிக்கும் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்வு ஒன்றில் இவர்களை பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் ப்ரியங்கா.இரண்டு வருடமாக நாங்கள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டிருக்கிறோம். எப்போதும் நிக் பக்குவப்பட்ட மனிதர் போலவே பேசுவார். அவர் ஒரு பழைய ஆன்மா கொண்ட அற்புதமான மனிதர். நான் அவரை விளையாட்டாக OMJ என்றுதான் அழைப்பேன். Old man Jonas என்றுதான் கூப்பிடுவேன் என்று கூறும் ப்ரியங்கா ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை நினைவு கூர்ந்தார் .


காதலின் ஆரம்பத்தில் இவரும் நிக்கும் சந்திக்கும் சமயத்தில் ஒருமுறை ப்ரியங்காவிற்கு பட விஷயமாக ஒரு சந்திப்பு இருந்ததாம். அப்போது ப்ரியங்கா மற்ற நண்பர்கள் இருந்ததால் பலமுறை இதை பற்றி நிக்கிடம் மறைமுகமாக கூறி பார்த்தாராம். ஆனால் நிக் ஜோனசிற்கு புரியவில்லையாம்.அதன்பின்னர் தனியாக ப்ரியங்காவை அழைத்து சென்ற நிக் நான் முட்டாள் இல்லை ப்ரியங்கா நீ சொல்ல வருவது எனக்கு புரிகிறது. இந்த இடத்திற்கு வர நீ எவ்வளவு சிரமப்பட்டிருப்பாய் என்று புரிகிறது.


வேலையை விட்டு விட்டு வா என்று சொல்பவன் இல்லை நான். உன்னால் முடியும் என்றால் நீ அந்த சந்திப்பை ரத்து செய்திருப்பாய் நீ ரத்து செய்யாத போதே அது உன் கையில் இல்லை என்று எனக்கு புரிகிறது.நீ அந்த சந்திப்பிற்கு போ. இங்குள்ள நண்பர்களை நான் வெளியே அழைத்து செல்கிறேன் என்று கூறினாராம் நிக். இப்படி தன்னை முழுமையாக புரிந்தவர் இதுவரை யாருமே இல்லை என்று நெகிழ்ந்திருக்கிறார் ப்ரியங்கா.


தனது கடின உழைப்பை மதிக்க தெரிந்தவர் நிக் எனும் ப்ரியங்கா தான் நினைத்ததை செய்யும் சுதந்திரம் தனக்கு இருப்பதாகவும் விரும்பியதை கேட்ட உடனே கிடைக்கும் வரம் வாய்ந்தவள் என்றும் நிக் தனது கணவரானது தனது அதிர்ஷ்டம் என்றும் கூறி இருக்கிறார். படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


ரன்வீரின் பெட்ரூம் ரகசியங்களை வெளிப்படுத்திய தீபிகா !


 


---                                                                


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.