முதலில் கர்ப்பம் பின்னர் நிச்சயதார்த்தம்.. அதற்கப்புறம்...?! எமி ஜாக்சனின் புதிய பார்முலா !

முதலில் கர்ப்பம் பின்னர் நிச்சயதார்த்தம்.. அதற்கப்புறம்...?! எமி ஜாக்சனின் புதிய பார்முலா !

நடிகை எமி ஜாக்சன் மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். இவரது பொம்மை உடல் அழகால் தமிழை தவிர தெலுங்கு ஹிந்தி கன்னடம் என எல்லா மொழிகளிலும் நடித்தார்.


தமிழில் இறுதியாக எந்திரன் 2.0வில் நடித்த எமி அதன் பின்னர் நடிப்பிற்கு இடைவெளி விட்டார். அதன் பின்னர் வெளிநாட்டில் இருந்தவர் திடீரென தான் கர்ப்பமாக இருப்பதாக தனது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.


நான் மாறியதால் நாங்கள் பிரிந்தோம்.. உண்மையை ஒப்பு கொண்ட விஷ்ணு விஷால்லண்டனை பூர்விகமாக கொண்ட எமிக்கு தமிழில் அமைந்த படங்கள் எல்லாமே குடும்பப்பாங்குடன் இருந்தன. அதே சமயம் எமி பாலிவுட்டிற்கு பரந்த போது தங்கள் கலாச்சார வழக்கத்தை மதித்து கவர்ச்சி பற்றிய கவலைகள் ஏதும் இல்லாமல் நடிக்க ஆரம்பித்தார்.


லண்டனில் கவர்ச்சி மாடலாக இருந்த எமிக்கு பிகினி உடை என்பது பெரிய பிரச்னை இல்லை என்பதை அவர் மீடியாவிடமே படு கூலாக தெரிவித்தார்.மற்ற இந்திய நடிகைகள் போல ரகசியமாக ஒளிந்து மறைந்து காதலிக்காமல் தனது காதலர் ஜார்ஜ் உடன் பொதுவெளிகளில் தனது இமேஜ் குறித்த கவலைகள் இல்லாமல் தைரியமாக வலம் வந்தார். தைரியமான பெண்ணான எமிக்கு சாகசங்கள் உயிராக இருந்ததை புரிந்து கொண்ட காதலர் ஜார்ஜ் அவரை ஆப்பிரிக்கா அருகில் உள்ள ஜாம்பியா விற்கு அழைத்து சென்றார்.


திருமணத்திற்கு சம்மதித்த நயன்தாரா.. இந்த வருட இறுதியில் கெட்டி மேளம் ?


ரன்பீரின் ரகசியத்தை அம்பலப்படுத்திய கத்ரீனா.. இது உங்களுக்கு தேவையா ரன்பீர் ?காட்டு விலங்குகளுடன் உற்சாகமாக சாகசங்களை புரிந்த எமி தான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் இந்த உலகிலேயே தன்னை மிக சந்தோஷமான பெண்ணாக மாற்றியதற்கு நன்றி என்றும் அவர் தனது காதலர் ஜார்ஜிற்கு நன்றி தெரிவித்து வெளியிட்டஇன்ஸ்ட்டா பதிவு லைக் செய்து முடிவதற்குள்ளாகவே இன்னொரு அதிர்ச்சிகரமான இன்ஸ்ட்டா பதிவு தட்டினார்.


அது திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமாக இருப்பது குறித்த இன்ஸ்ட்டா பதிவு . தனது தாய்மை குறித்த சந்தோஷங்களை அந்தஇன்ஸ்ட்டா பதிவு மூலம் உலகிற்கும் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தினார். அதன் பின்னர் தாய்மை புகைப்படங்களை வெளிப்படையாக இன்ஸ்டாகிராமில் பதிவும் செய்தார்.


பிரிவை கேட்டதும் நெஞ்சம் நொறுங்கியது.. கமல்ஹாசன் சரிகா பற்றி அக்ஷரா உருக்கம்

இந்த நிலையில்தான் இவரது நிச்சயதார்த்தம் (engagement) தற்போது லண்டனில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த புகைப்படத்தின் கீழ் இந்த நாளை நாங்கள் மறக்க முடியாது. எங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் நன்றி என்று கூறியிருக்கிறார்.


திருமணத்திற்கு முன்னர் தாய்மை அடைந்த எமிக்கு இப்போது நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இதன் பின்னர் முதலில் திருமணம் நடக்குமா அல்லது வளைகாப்பு நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


ஆராத்யாவை விட்டு விடுங்கள் ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலான விமர்சனம்

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ் instagram


கங்கணாவின் தொடர் மௌனம்.. எட்டு நாட்கள் என்ன செய்தார்..


---                                                       


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.