ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கிறார் டிஜிபி தகவல்..1 அடி நீரில் மூழ்கி இறக்க வாய்ப்பில்லை

 ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கிறார் டிஜிபி தகவல்..1 அடி நீரில் மூழ்கி இறக்க வாய்ப்பில்லை

சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி. சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக நடிகர்கள் இயக்குனர்கள் என அனைவரையும் ஒரு சேர வியக்க வைத்தவர் நடிகை ஸ்ரீதேவி(sridevi)

தமிழில் முன்னணியில் இருந்த ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட் சென்றார். அங்கும் அவர் முன்னணி கதாநாயகி ஆகவே திகழ்ந்தார். அதன் பின்னர் தயாரிப்பாளர் போனிகபூருக்கு இரண்டாவது மனைவி ஆனார். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.               

அப்பாவுடன் தினம் ஒரு பெண்.. தவறாக நடந்த அப்பாவின் நண்பர்கள்.. வனிதாவின் மகள் பகிர்ந்த வலி          

youtube

இந்நிலையில் உறவினர் திருமணத்திற்காக கணவர் போனி கபூருடன் துபாய் சென்ற ஸ்ரீதேவி அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் குளியறையில் பாத்டப்பில் மூழ்கி இறந்தார். 2018 பிப்ரவரி 24ம் தேதி அவர் மரணம் அடைந்தார். இவரது இறப்பு (death) பலரையும் சந்தேகத்தை விதைத்தது.

ஆனாலும் அந்த சந்தேகத்தை ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் எதிர்பாரா விபத்து என்கிற அளவில் இந்த பேச்சிற்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைத்தது. அன்று அவர் மது அருந்தி இருந்தார் என்றும் அதனால் பாத்டப்பில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.             

வெளியானது லாஸ்லியாவின் திருமண ரகசியம்.. அதிர்ந்த ரசிகர்கள்.. வைரலான புகைப்படம்!Bigg boss  

youtube

அவர் இறந்து ஒரு வருடம் முடிந்த நிலையில் கேரளா டிஜிபி (DGP) ரிஷி ராஜ் சிங் தற்போது முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல கொலை என்பதுதான் அந்த தகவல். கேரளாவின் தடவியல் நிபுணரான உமாநாதன் டிஜிபியின் நண்பராவார். கேரளாவில் எத்தனையோ குற்ற வழக்குகளை கண்டுபிடித்து கொடுத்து காவல்துறைக்கு உதவியாக இருந்தார்.சமீபத்தில் அவர் காலமாகி விட்டார்.

இறப்பதற்கு பல நாட்களுக்கு முன்னர் உமாநாதன் (Umanathan) தன்னிடம் ஸ்ரீதேவி மரணம் குறித்து விவரித்ததாக கூறினார். ஒருவர் எவ்வளவு போதையில் இருந்தாலும் ஒரு அடி தண்ணீரில் தானே மூழ்கி இறக்க வாய்ப்பில்லை என்றும் யாரோ ஒருவர் அவரை அழுத்தி இருந்தால் மட்டுமே அவர் மூழ்க வாய்ப்பிருக்கிறது ஆகவே இது கொலைதான் (murder) என்று கூறி இருக்கிறார்.

தனிமைக்கு பிறகு 15 வருடம் கழித்து காதலரை சந்தித்த சோனியா அகர்வால் !

youtube

ஒரு வருடம் கழித்து டிஜிபி ரிஷிராஜ் இதனை இப்போது ஏன் கூறியிருக்கிறார் என்கிற கேள்வி எல்லோருக்கும் எழலாம். கேரள பத்திரிகையான கேரளகவ்முதி நாளிதழுக்கு தனது தடவியல் நண்பர் உமாநாதன் பற்றிய தகவல்களை பகிரும் இந்த தகவலையும் சேர்த்தே வெளியிட்டிருக்கிறார் டிஜிபி.

கேரளாவின் பல குற்றங்களை கண்டுபிடித்து கொடுத்த சிறந்த தடவியல் நிபுணர் என்கிற வகையில் ஸ்ரீதேவி மரணம் குறித்து காலமான உமாநாதன் எழுப்பிய சந்தேகம் இப்போது எல்லோர் மனதிலும் விதையாகவே விழுந்திருக்கிறது. இதற்கான தீர்வு வரும்வரை காத்திருப்போம்.

youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.