தனிமைக்கு பிறகு 15 வருடம் கழித்து காதலரை சந்தித்த சோனியா அகர்வால் !

தனிமைக்கு பிறகு 15 வருடம் கழித்து காதலரை சந்தித்த சோனியா அகர்வால் !

நடிகை சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவனை காதலித்து கரம் பிடித்தவர். அதன் பின்னர் கருத்து வேறுபாட்டால் இந்த ஜோடி பிரிந்தது. அதன்பின்னர் இயக்குனர் செல்வராகவன் கீதாஞ்சலியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.                   

ஆனால் இன்னமும் யாரையும் திருமணம் செய்யாமல் சோனியா அகர்வால் தனியாகவே இருந்து வருகிறார். இதனிடையில் கிடைத்த திரைப்படங்களில் நடிக்கவும் செய்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த தனிமை திரைப்படம் வெளியானது.                                          

Youtube

இந்த சமயத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த சோனியா அகர்வால் தான் இயக்குனர் செல்வராகவனை மிஸ் செய்வதாக கூறியிருந்தார். இயக்குனர் செல்வராகவனுக்கும் சோனியா அகர்வாலுக்கு உண்டான புரிதல்கள் நாகரீகமானவை. செல்வராகவன் இல்லை என்றால் சோனியா அகர்வால் எனும் நடிகை வெளிவந்திருக்கும் வாய்ப்பில்லை என்பதால் சோனியாவிற்கு செல்வாவின் மீது மதிப்பு அதிகம்.                                

இயக்குனர் செல்வராகவன் இயக்கிய திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி (7g rainbow colony) . ஒரு சாதாரண காதல் ஒரு இளைஞனின் உந்து சக்தியாக எப்படி மாறுகிறது என்பதையும் அதில் ஏற்படும் பிரிவு அந்த இளைஞனின் ஆழமான காதலை என்னவாக மாற்றுகிறது என்பதையும் அந்த திரைப்படம் அழுத்தமாக கூறியதால் மிகப்பெரிய வெற்றி அடைந்த படமாக மாறியது.                                     

Youtube

இரு தினங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வொன்றில் நடிகை சோனியா அகர்வாலும் அவருடன் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் நடித்த ரவிகிருஷ்ணாவும் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது தாங்கள் காதலர்களாக நடித்த நிகழ்வுகளை நினைத்து பார்த்து மகிழ்ந்ததாக சோனியா அகர்வால் கூறியிருக்கிறார்.                       

ரவிகிருஷ்ணா இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா திரைப்படத்தில் இறுதியாக நடித்தார். அதன் பின்னர் அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. அனிதா கதிர் எனும் இரண்டு கதாபாத்திரங்கள் ஒரு தசாப்தத்திற்கு பின்னர் இன்னமும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்க முக்கியமான 7ஜி ரெயின்போ காலனி (7g Rainbow colony) திரைப்படத்திற்கும் அதன் இயக்குனருக்கும் நிச்சயம் முக்கிய பங்கு உண்டு. இந்த சந்தோஷத்தின் ஒரு பகுதி இயக்குநருக்கானது என அர்த்தப்படுத்திக் கொள்வதில் மகிழ்கிறது மனது.                     

இப்போது இந்த செய்தி #7grainbowcolony என்கிற ஹாஷ்டாக் மூலம் ட்ரெண்டிங் ஆகிறது என்பதையும் தெரிவிக்கிறோம்.                        

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன