அப்பாவுடன் தினம் ஒரு பெண்.. தவறாக நடந்த அப்பாவின் நண்பர்கள்.. வனிதாவின் மகள் பகிர்ந்த வலி

அப்பாவுடன் தினம் ஒரு பெண்.. தவறாக நடந்த அப்பாவின் நண்பர்கள்.. வனிதாவின் மகள் பகிர்ந்த வலி

கடந்த வாரம் முதலே தமிழ் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம்.. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வனிதா குழந்தை கடத்தலால் கைது செய்யப்படுவாரா என்பதுதான். அதற்கு அடுத்த பேச்சாக மீரா மிதுனின் கைது இருந்தது.

பிக் பாஸ் (bigg boss) என்பது தமிழக மக்களின் பெரும்பான்மை பொழுது போக்குகளில் ஒன்று. வருடத்தில் 100 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்விற்காக பார்வையாளர்கள் காத்திருந்தனர். கடந்த சீசன் போன்று ஏமாற்ற வேண்டாம் என்பதால் பொறுப்புணர்ந்து செயல்பட்டது விஜய் டிவி நிறுவனம்.

கொஞ்சம் கூட போலித்தனங்களின் தடயம் இல்லாமல் இந்த பிக் பாஸ் சீசன் 3 அழகாக ஆரம்பித்து முதல் வாரத்தில் இருந்தே விறுவிறுப்பாக போகிறது. கருத்து வேறுபாடுகள் நிறைந்த வீட்டில் அமைதியை தேடி ஆண்கள் அலைவதையும் காண முடிந்தது.

ஆரம்பம் முதலே அனைவரையும் சிரிக்க வைத்து சூழ்நிலையை கலகலப்பாக்கிய சாண்டி மாஸ்டர் இந்த வார இறுதியில் பாசத்தின் அடிப்படையில் பொங்கி அழுதது அனைவர் கண்களிலும் நீரை வரவழைத்தது. உண்மையான பாசமான தந்தையாக சாண்டியின் இந்த முகம் எல்லோர் மனதிலும் அழுத்தமாகவே பதிந்திருக்கிறது.

Youtube

இதற்கிடையில் பிக் பாஸ் (bigg boss) போட்டியாளர் வனிதா கைது செய்யப்படலாம் என்கிற தகவல் தீயாக பரவியது. அதனை நிரூபிக்கும் வகையில் வனிதாவை பார்க்க போலீசார் வந்து போனதையும் வனிதாவின் முடிவையும் பிக் பாஸ் நிகழ்வில் இணைத்தே காட்டியிருந்தது நிகழ்வின் வெளிப்படைத்தன்மையை பறைசாற்றியது.

வனிதா அவரது மகளான ஜெனிதாவை கடத்திக் கொண்டு வந்து விட்டார் என்று அவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜ் ஆந்திரா போலீசாரை அழைத்துக் கொண்டு பிக் பாஸ் வீடு இருக்கும் நஸரத் பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து விட்டார்.

நிலைமையை ஆராய போலீஸ் டீம் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றது. அப்போது வனிதா அவரது மகள் எங்கிருக்கிறார் என்கிற தகவலை கூற மறுத்து விட்டதாகவும் அதனால் போலீசார் குழந்தையை போட்டோ அல்லது வீடியோ மூலம் காட்டினாலும் போதுமானது என்று கூறியிருக்கின்றனர்.

இதனால் வனிதா மகளின் கருத்தை கேட்க தெலுங்கானா போலீசுக்கு வனிதாவின் வழக்கறிஞர் நிர்பந்தித்தார். அதனை அடுத்து பிக் பாஸ் (bigg boss) வழக்கறிஞர் உதவியுடன் வனிதாவின் மகள் ஜெனிதா பிக் பாஸ் செட்டிற்குள் வந்து தெலுங்கானா போலீசாரிடம் தனது கருத்தை பதிவு செய்தார்.

Youtube

10 வயதே ஆன ஜெனிதா தனது தந்தையுடன் தான் பாதுகாப்பாக இல்லை எனும் அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கிறார். அவரது அப்பா ஆனந்தராஜ் தினமும் ஒரு பெண்ணை அழைத்து வருவார் என்றும் அப்பாவின் நண்பர்கள் குடித்து விட்டு ஜெனிதாவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததையும் 10 வயதான ஜெனிதா கூறியது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஜெனிதா உறங்கி கொண்டிருக்கும் வேளையில் அப்பாவும் ஏதாவது ஒரு பெண்ணும் வந்து வலுக்கட்டாயமாக ஜெனிதாவை எழுப்பி வெளியே அனுப்புவதாகவும் ஜெனிதாவை ஒரு வேலைக்கார பெண் போல நடத்துவதாகவும் சிறுமி ஜெனிதா கண்ணீருடன் கூறியிருக்கிறார்.

மேலும் அம்மா வனிதா தன்னை கடத்தவில்லை என்றும் தானே போன் செய்து அம்மாவை வரவழைத்ததாகவும் அப்பாவிடம் சொல்லி விட்டுத்தான் அம்மாவுடன் கிளம்பி வந்ததாகவும் அம்மாவின் மீது எந்த தவறும் இல்லை என்றும் ஜெனிதா தெரிவித்திருக்கிறார்.

 

Youtube

இதனால் குழந்தையின் மனநிலை மற்றும் பாதுகாப்பை முன்னிட்டு தெலுங்கானா போலீசார் குழந்தையின் விருப்பப்படியே சென்னையில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் வனிதா இனி எப்போதும் போல பிக் பாஸ் நிகழ்வில் தொடருவார் என தெரியவருகிறது.

வனிதா கைதாவார் எனும் செய்தி தந்த அதிர்ச்சியை விடவும் பெற்றோர் பிரிதலால் தவறான தகப்பனால் ஒரு பெண் குழந்தையின் மன நிம்மதி கேள்விக்குறி ஆகிறது என்பது ஜெனிதா மூலம் மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கும் அதிர்வுகள் அதிகமாகவே இருக்கிறது.

தனது மகளை பிரிந்த துயரத்தால் கதறிய சாண்டி போன்ற தகப்பன்கள் இருந்த இதே பூமியில்தான் மகளை தூக்கத்தில் இருந்து எழுப்பி வெளியேற வைத்து இன்னொரு பெண்ணுடன் உல்லாசம் கொள்ளும் தகப்பன்களும் இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனையான விஷயம்தான்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.