ஒரு காதல்.. சில மோதல்.. கொஞ்சம் கண்ணீர்.. ஸ்க்ரிப்ட்டட் வெர்ஸஷனுக்கு மாறுகிறதா பிக் பாஸ் ?

ஒரு காதல்.. சில மோதல்.. கொஞ்சம் கண்ணீர்.. ஸ்க்ரிப்ட்டட் வெர்ஸஷனுக்கு மாறுகிறதா பிக் பாஸ் ?

பிக் பாஸ் சீசன் 3 (bigg boss 3)ஆரம்பித்து மூன்று நாள்தான் ஆகிறது. அதற்குள் கடந்த சீசன்களில் நடந்த மொத்த கலவையையும் இந்த மூன்று நாட்களில் மாண்டேஜ்களாக நமக்கு காட்டியிருக்கின்றனர் பிக் பாஸ் வீட்டு போட்டியாளர்கள்.

முதல் நாளே முதல் பார்வை முதல் கைகுலுக்கலிலேயே அபிராமிக்கு கவின் மீது காதல் வருகிறது.. இரண்டாம் நாள் காலையிலேயே பொங்கல் குறித்த சண்டை வனிதாவால் பற்றி எரிகிறது.

அன்றைய மதியமே மோகன் வைத்யா தனது முதல் மனைவி இறந்த கதை பற்றி பேச ஆரம்பித்து பாலச்சந்தரின் அன்பை நினைந்து கதறி அழுகிறார்                                                

அதே நாளிலேயே ரேஷ்மா தனது கருவறையே குழந்தையின் கல்லறை ஆகிப் போனதன் சோகத்தை பகிர்கிறார். இதனை அவர் மோகன் வைத்யா போன்று யதார்த்தமான தருணத்தில் ஆரம்பிக்கவில்லை என்பது மட்டுமே ஆறுதல்.             

ஆரம்பமே அபிராமியின் காதலில் .. முதல் நாளே திட்டு வாங்கிய தர்ஷன்.. பிக்பாஸ் 3 சுவாரஸ்யங்கள்                               

twitter

உங்கள் வாழ்வில் மறக்க முடியாத சோகம் என்ன என்பது ஒரு டாஸ்க் கேள்வி என்பதாலேயே ரேஷ்மா இதனை பகிர்கிறார். ஆகவே மற்றவர்கள் கண்ணீர் மூலம் டி ஆர் பி யை அதிகரிப்பதில் விஜய் டிவி எப்போதும் பெயர் போன ஒன்றுதான் என்பதால் இவை அனைத்துமே ஸ்க்ரிப்ட்டா எனும் மனநிலைக்கு வெகு ஸ்ட்ராங்காகவே மக்களை தள்ளியிருக்கிறது.

அதை போலவே பிக் பாஸ் (bigg boss) எனும் நிகழ்வில் சாராம்சமே அவரவர்கள் அவரவர் இயல்பில் இருந்த படி 100 நாள்கள் வாழ்வதுதான். அதாவது நம்மை சுற்றிலும் இருக்கும் கேமராக்களை மறந்து ஒரு வாழ்வை வாழ வேண்டும்.

ஆனால் அபிராமி ஆரம்பம் முதலே வெறுப்பேற்றி கொண்டே இருக்கிறார். அவர் போதாதென்று சாக்ஷி மற்றும் ஷெரீனை துணைக்கு வைத்துக் கொண்டு பொழுதன்னிக்கும் கேமரா கான்ஷியஸ் ஆகவே இருக்கிறார்கள்.

சாண்டி தனது funny காமெடிகளால் ரசிக்க வைத்தாலும் அவரும் அடிக்கடி கேமராவை பார்த்து அங்கே காட்டு இங்கே காட்டு என்று இயக்குனர் போல பிக் பாஸ் (bigg boss) வீட்டை படமெடுத்து விளக்கம் கூறிக் கொண்டிருக்கிறார்.

பச்சப்புள்ள மீரா மிதுனை வச்சு செய்யும் சாக்ஷி, கவின் : ரணகளமாகும் பிக் பாஸ் வீடு!

twitter

இவையெல்லாம் செய்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கலாம். இவர்களின் இயல்பில் நாம் இருக்கிறோமா என்கிற தேடலில் இருக்கும் பார்வையாளர்களுக்கு அது கடும் அதிருப்தியையே தருகிறது.

உள்ளே இருப்பவர்களில் லாஸ்லியா (losliya) ரியலி க்யூட் அண்ட் கிரேட் என்று பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

மிக அமைதியாக புன்னகைகளால் அருகில் உள்ளவர்களின் நாளை அற்புதமாக்குகிறார் லாஸ்லியா. தன்னை நடுவில் வைத்துக் கொண்டு தனக்கு சம்பந்தம் இல்லாதவைகளை பற்றி கவின் சாக்ஷி மற்றும் அபிராமி கூறினாலும் கோபம் இல்லாமலும் அது என்ன என்று தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமலும் அழகாகவே அதனை கையாள்கிறார்.

அநேகமாக நீண்ட நாள்கள் தாக்குபிடிப்பவர்களில் லாஸ்லியா ஒருவராகவும் உடனடியாக வெளியேற வேண்டியவர்களின் முதல் ஆளாக அபிராமியும் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையெல்லாம் என் கணவரிடம் இருந்து மறைத்திருக்கிறேன்.. மனைவிகளின் அதிர வைக்கும் வாக்குமூலங்கள் !

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.