பச்சப்புள்ள மீரா மிதுனை வச்சு செய்யும் சாக்ஷி, கவின் : ரணகளமாகும் பிக் பாஸ் வீடு!

பச்சப்புள்ள மீரா மிதுனை வச்சு செய்யும் சாக்ஷி, கவின் : ரணகளமாகும் பிக் பாஸ் வீடு!

சமீபத்தில் வெளியான பிக் பாஸ் 3 (biggboss3) புரோமோவில் மீராவிற்கும், வனிதாவிற்கும் வாக்குவாதம் ஏற்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக் பாஸ் (biggboss3) ஷோ தமிழில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை இரண்டு சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஜூன் 23ம் தேதி மூன்றாவது சீசன் தொடங்கியது. கவின், அபிராமி, மதுமிதா, சாண்டி, சாக்ஷி, சரண், தர்ஷன், முகின், ரேஷ்மா உள்ளிட்ட 15 போட்டியாளர்களுடன் இந்த ஷோ தொடங்கியது. பிக் தொடங்கிய போதே அபிராமி, கவின் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், 16வது போட்டியாளராக மீரா மிதுன் நேற்று பிக் பாஸ் (biggboss3) வீட்டில் நுழைந்துள்ளார். 

youtube

அவர் உள்ளே நுழைந்த உடனே, சாண்டி மாஸ்டரை சந்தித்து நீங்கள் என் குரு என்று மீரா கூறுகிறார். மீரா மிதுன் வந்தது முதலே அபிராமியும், சாக்ஷியும் வேண்டா வெறுப்பாக நடந்து கொள்கின்றனர். மீரா பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது அபிராமிக்கும், சாக்ஷிக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை என்பது நேற்றே உறுதியாகிவிட்டது. இதனால் விரைவில் பிக்பாஸ் வீட்டில் அடிதடி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே சண்டை தொடங்கிவிட்டது. 

வினய் விஜயனை கரம் பிடித்தார் மலையாள நடிகை விஷ்ணு பிரியா : குவியும் வாழ்த்துக்கள்!

மிராவை தனக்கு பிடிக்கவில்லை என்பதை அனைவருக்கும் தெரியும் விதமாகவே நடந்து கொள்கிறார் அபிராமி. அபிராமி உடன் ஷெரின், சாக்‌ஷி ஆகியோர் கூட்டாளிகளாக இருக்கின்றனர். இவர்களின் பட்டியலில் கவினும் இடம் பெற்றுள்ளார். இதில் அப்பப்போ ரேஷ்மா வந்து செல்வார். இந்நிலையில் மீரா மிதுன், பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததை ஏற்றுக்கொள்ள அவருக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. மற்ற போட்டியாளர்கள் சொல்வதை செய்ய வேண்டும் என்பது தான் அந்த டாஸ்க். 

youtube

அதன்படி சாண்டியிடம் ஆரம்பித்த மீரா மிதுன், வரிசையாக மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு, தர்ஷன் ஆகியோர் பலர் சொன்னதை செய்தார். இதனை தொடர்ந்து மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததை அபிராமி விரும்பாத நிலையில், அவரிடம் சரிவர கேள்வி கேட்கவில்லை. மீரா மிதுனுக்கு டாஸ்க் கொடுக்கவில்லை. அப்படியே சாக்‌ஷியிடம் மீரா சென்றார். அவருக்கும் பிடிக்கவில்லை. மேலும் கவின் கூறுகையில் எங்கள் கூட்டாளிகளுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே என்றார். இதில் ஷெரின், சரவணன், சேரன், மதுமிதா ஆகியோர் வரிசையாக விருப்பம் தெரிவிக்கவே புன்னகையில் திழைத்தார் மீரா மிதுன். 

ஆரம்பமே அபிராமியின் காதலில் .. முதல் நாளே திட்டு வாங்கிய தர்ஷன்.. பிக்பாஸ் 3 சுவாரஸ்யங்கள்

இந்நிலையில் இன்றைய 3ம் நாளில் என்ன நடக்கும் என்பதை விஜய் தொலைக்காட்சி ப்ரோமோ வீடியோவாக வெளியிட்டுள்ளது. அதில் கிச்சனிலிருந்து இருக்கும் மீரா மிதுன் மற்றும் அபிராமி ஆகியோருக்கு இடையில் சண்டை வருவது போன்றும், அபிராமி நீ எங்கிட்ட பேசாத என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்வது போன்றும் வீடியோ அமைந்துள்ளது. அதற்கு உங்களுக்கு என்னுடன் பேச வேண்டாம் எனில் என்னிடம் அட்டிட்யூடை காட்டாதீர்கள் என மீரா கூறுகிறார். 

youtube

இதனை நக்கலாக பார்த்தப்படியே கேட்கும் அபிராமி, என்னிடம் பேசாதே என்று கூறி விட்டு செல்கிறார். பின்னர் வீட்டின் கேப்டனான வனிதாவை அழைத்து வருகிறார் அபிராமி.  இது குறித்த பஞ்சாயத்தை தொடங்கிய வனிதா, நடந்து முடிந்ததை இங்கு பேசக்கூடாது என மீராவுக்கு தனது குரலை உயர்த்தி அட்வைஸ் செய்கிறார். அதற்கு காம் டவுன் என மீரா கூற, நீ என்னை காம் டவுன் என சொல்ல வேண்டாம் எனக்கூறி கத்துகிறார் வனிதா.

 

நீங்கள் கத்தி பேசினால் உங்களுக்குதான் பிபி ஏறும் என மீரா கிண்டலாக கூறுகிறார். இதனை கேட்டு கோபமடைந்த வனிதா, எனக்கு அதெல்லாம் வராது, இத்தனை வருஷத்தில் வந்ததில்லை என்கிறார். அப்போது இதற்கு தான் காத்திருந்தேன் என்பதைப்போல கையை காட்டிவிட்டு செல்கிறார் அபிராமி. இந்த சம்பவங்கள் அனைத்தும் சமீபத்தில் வெளியான ப்ரமோவில் காட்டியுள்ளனர். இந்த ப்ரமோவின் மூலம் பிக்பாஸ் வீடு ரணகளமாகியிருப்பது உறுதியாகியுள்ளது.

ஒரு நாள் சென்னை மக்களுடன் தலைமறைவாக வாழ விரும்பும் தீபிகா!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.