இதை என் கணவரிடம் இருந்து மறைத்திருக்கிறேன்.. மனைவிகளின் ரகசிய வாக்குமூலங்கள்!

இதை என் கணவரிடம் இருந்து மறைத்திருக்கிறேன்.. மனைவிகளின் ரகசிய வாக்குமூலங்கள்!

இந்த உலகில் எந்த உறவுக்கும் இல்லாத பெருமை கணவன்(husband) மனைவி எனும் பந்தத்திற்கு உண்டு. அம்மா மகன் அப்பா மகள் அண்ணன் தங்கை உறவுகள் எல்லாமே ரத்த வழி சொந்தங்கள். ரத்த பந்தங்கள் எனும்போது அவர்களுக்கிடையேயான பாசம் என்பது நியாயமான யதார்த்தமான ஒன்றுதான்.

ஆனால் எங்கேயோ இருந்து எந்தவித முன் கூடிய பந்தமும் இல்லாமலே தேடி வந்த உறவை நேசித்து பாதுகாக்கும் உறவு என்பதால்தான் கணவன்(husband) மனைவி (wife) உறவு என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தாம்பத்யத்தில் முக்கியமான அடிப்படை அல்லது அடித்தளம் நம்பிக்கைதான். எங்கே ஒரு உறவு உண்மையை மறைக்க ஆரம்பிக்கிறதோ அங்கேயே விரிசல் தொடங்குகிறது. இன்றைய நவீன யுகத்தில் உறவை தக்க வைத்துக் கொள்வது என்பதே மிகப்பெரிய கலையாகிப் போக்கியிருக்கும் நிலையில் உறவை இழக்க விரும்பாமல் சில பொய்கள் இருப்பது தவறில்லை.

பின் விளைவுகள் தெரியாமல் சொல்லபடும் பொய்கள் தொடர்ந்து தொடரும் துரோகங்கள் உறவை கேள்விக் குறியாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இங்கே ஒரு ஆய்வில் சில மனைவிகள் தங்கள் கணவருக்குத் தெரியாமல் தாங்கள் மறைத்து வைத்திருக்கும் பரம ரகசியங்களை கூறியிருப்பதைக் கேட்டால் நமக்கு மயக்கமே வரலாம். அந்த கணவர்களின்(husband) கதியை நினைக்கவே முடியவில்லை.

மழை விழும் போதெல்லாம் என்னை வந்து சேர்வாயா.. .. மழைக்கால ரொமான்ஸ் குறிப்புகள் !

youtube

01. சிறையில் இருக்கும் என் முன்னாள் காதலனுக்கு நான் இன்னமும் கடிதங்கள் அனுப்பி வருகிறேன். இது பற்றி என் கணவரிடம்(husband) நான் மறைத்திருக்கிறேன்.

02. ஒரு விபத்தில் கரு கலைந்து போனதாக என் கணவரை நம்ப வைத்திருக்கிறேன். உண்மையில் நான் கருக்கலைப்பு செய்து கொண்டேன். மீண்டும் குழந்தை பெற என் உடல் மன அளவில் எனக்கு வலிமை இல்லை. என் கணவர் இதனை புரிந்து கொள்ளவில்லை. அதனால் இப்படி செய்தேன்.

03. என் கணவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தில் ஒரு பாகத்தை சேமித்து வைத்திருக்கிறேன். அதை போலவே அப்பா சொத்தில் இருந்து கிடைத்த பணமும் சேர்ந்தது. இதனை கொண்டு ஒரு வீடு வாங்கினேன். ஆரம்பத்தில் கணவருக்கு(husband) சர்ப்ரைஸாக வைத்திருந்தேன். ஆனால் வெளிநாட்டில் அவருக்கு ஒரு உறவு இருப்பதாக தெரிந்ததில் இருந்து இதனை அவரிடம் கூற மனம் மறுக்கிறது. பழைய நம்பிக்கை இல்லாததால் இன்னும் சொல்லவே இல்லை.

ஏன் உங்கள் முன்னாள் காதலரை திருமணத்திற்கு அழைக்கக் கூடாது?
5 குறிப்பிடத்தக்க காரணங்கள்!

youtube

04. என் கணவருக்கு தெரியாமல் வேறொரு பேக் ஐடி வைத்திருக்கிறேன். இது வரைக்கும் எனது கணவருக்கு இது பற்றி தெரியாது, கண்டுபிடிக்கவில்லை. அதில் அவருக்கு தெரியாமல் ரகசியமாக நான் பல நண்பர்களை வைத்திருக்கிறேன்.

05. என் கணவர்(husband) வேறொரு பெண்ணோடு உறவில் இருப்பது எனக்கு தெரியாது என்று அவர் நினைத்திருக்கிறார். உண்மையில் வேண்டியமட்டும் அவருக்குத் தண்டனை கொடுத்துவிட்டு உறவில் இருந்து விலகிக் கொள்ள திட்டமிட்டிருக்கிறேன்.

06. நானும் என் தோழியும் உண்மையில் காதலித்தோம். இதனை என் கணவருக்கு தெரியாமல் பார்த்து கொண்டோம். ஒரு வருடம் முன்பு அவள் இறந்து விட்டாள். இன்று வரை கணவரிடம்(husband) இதனைக் கூறாமல் இருக்கிறேன்.

ஒரு முறைக்கு 40 ருபாய்.. என் உடம்பின் மொத்த விலை 400 ருபாய்.. ஒரு பாலியல் தொழிலாளியின் கண்ணீர் கதை.

youtube

07. திருமணத்திற்கு முன்னால் நான் ஒருவரை காதலித்தேன். அவருடன் பலமுறை எல்லை தாண்டிய பழக்கம் இருந்திருக்கிறது. பெற்றோர் எனக்கு வேறு திருமணம் செய்து வைத்து விட என் கணவருக்கு(husband) இப்போது வரைக்கும் நான் முன்பொருவரோடு உடல் உறவில் இருந்திருக்கிறேன் என்பதன் ரகசியம் (secret)  தெரியாது.

08. என் கணவருக்குத்(husband) தெரியாமல் ரகசியமாக (secret)நான் ஐந்து லட்ச ருபாய் சேமித்து வைத்திருக்கிறேன். எல்லாம் குடும்ப நன்மைக்காக என்பதால் என்றாவது ஒருநாள் இந்தப் பணம் உதவி செய்யும் என்கிற நம்பிக்கையில் அவரிடம் இதுபற்றி கூறவில்லை.

09.என் கணவரின்(husband) நண்பர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். நான் தடுத்தபின்னர் என் கணவரிடம் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சினார். அவர்கள் நட்பை மதித்து இப்போது வரை நான் என் கணவரிடம் இந்த விஷயத்தைக் கூறவில்லை.

10. என் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் என்னுடையது. ஆரம்பத்தில் எனக்கு என் கணவர்(husband) மேல் எந்த விருப்பமோ ஈடுபாடோ இல்லை. வேண்டாவெறுப்பாக அவரைத் திருமணம் செய்து கொண்டேன். இந்த ரகசியம் (secret) அவருக்கு தெரியாது. ஆனால் இப்போது அவர் இல்லாத என் வாழ்வை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.