ஆரம்பமே அபிராமியின் காதலில் .. முதல் நாளே திட்டு வாங்கிய தர்ஷன்.. பிக்பாஸ் 3 சுவாரஸ்யங்கள்

ஆரம்பமே அபிராமியின் காதலில் .. முதல் நாளே திட்டு வாங்கிய தர்ஷன்.. பிக்பாஸ் 3 சுவாரஸ்யங்கள்

எதிர்பார்த்தபடியே பிக்பாஸ் ஆரம்பித்து அதில் ஏற்கனவே ஊகித்த சில போட்டியாளர்களும் உள்ளே நுழைந்திருக்கிறார். 17 கார்டுகள் தன்னிடம் இருப்பதாக தொடக்க விழாவில் கமல்ஹாசன் கூறினாலும் 15 பேர்தான் உள்ளே சென்றிருக்கிறார்கள். அந்த இரண்டு போட்டியாளர்கள் யார் என ரசிகர்கள் யோசித்த வண்ணம் இருக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் என்றாலே இளையவர்கள் மத்திம வயதுடையவர்கள் இருவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்குள் நடக்கும் சகிப்புத்தன்மை பொறுப்பின்மை ஆகியவற்றை கோர்த்து உணர்வு கொந்தளிப்புகளை வெளிக்காட்டுவது தான். பிக்பாஸ் (biggboss) சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் மனக்கண்ணாடி என்பதில் சந்தேகமில்லை.

நேற்றைய ப்ரமோவிலேயே சேரன் பாத்திமா பாபு மோதல் இருந்தது போலவே அங்கே உண்மையிலும் நடந்தது. இறுதியில் அரைமனதாகவே பாத்திமா பாபு அதனை ஏற்று கொண்டார் என்பதை அவரது முகம் கூறியது. அதைப்போலவே நீச்சல் குளத்தில் நடனம் ஆடிய சாண்டிக்கு அடிபட்டது போல காட்டப்பட்டது. அது வெறும் நடிப்பு என்று நினைத்த நிலையில் அது உண்மையாகவே நடந்திருக்கிறது. சாண்டிக்கு தையல் போடப்பட்டுள்ளது.

கலக்கலான போட்டியாளர்களால் களை கட்டும் பிக்பாஸ் வீடு !

twitter

முதல் நாளிலேயே வாய் மேல் தையல் போடப்பட்ட முதல் ஆள் சாண்டி எனும் பெருமையோடு இனி பிக்பாஸை அவர் வலம் வருவார். ஆடிய ஆட்டம் என்ன என்கிற பாடலை இன்று காலை பிக் பாஸில் ஒளிபரப்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பிக் பாஸ் என்றாலே அங்கே இளம் ஜோடிகளுக்குள் காதல் மலர்வது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஆரவ் மீது காதல் வயப்பட்ட ஓவியா அதனால்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியே பிரபலம் ஆனது என்றால் மிகையில்லை. அதே சமயம் அனைவராலும் வெறுக்கப்பட்ட ஜூலிக்கும் ஆரவ் மீது க்ரஷ் வந்ததையும் நாம் பார்த்தோம். ஒரே இடத்தில் வாழ நேரும்போது இவை ஏற்படும் என்பது உண்மைதான்.

ஐரோப்பாவில் நைட் அவுட்ஸ் - ஆர்யா சாயீஷாவின் வைரல் புகைப்படம் !

twitter

இரண்டாவது சீசனில் காதல் என்கிற பெயரில் மஹத் யாஷிகாக்கள் செய்தவை நம்மால் ஜீரணிக்க முடியாதவை. அதே சமயம் ஷாரிக் ஐஸ்வர்யா மீது க்ரஷ் கொண்ட விதம் நம்மை சுவாரஸ்யப்படுத்தியது. பக்குவமின்மையால் இரண்டு பேருமே அதனை முழுமையாக தொடர முடியவில்லை என்பதுதான் உண்மை.

இப்போது மூன்றாவது சீசனில் எடுத்த உடனே காதலில் ஆரம்பித்திருக்கிறது. இது கொஞ்சம் யோசனையாக இருக்கிறது. காரணம் முந்தைய காதல்களில் கூட ஒரு குறிப்பிட்ட காலம் இருந்தது. அதன்பின்னரே அது காதலாக மாறியது. ஆனால் மூன்றாவது சீசன் அபிராமியோ கவினை பார்த்த மாத்திரத்தில் காதல் வயப்பட்டதாக ரேஷ்மாவிடம் கூறுகிறார்.

இது ஏதோ ஓட்டுக்களை வாங்க அல்லது வீட்டில் சில நாட்கள் நிலைக்க அபிராமி யோசித்த ஸ்ட்ராட்டஜி யாக இருக்கலாமோ என்கிற விதத்தில் தான் நாம் இதை அணுக வேண்டி இருக்கிறது. அபிராமியே சொல்வதை போல போக போக என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

தாலி இல்லை நகைகள் இல்லை.. பாட்டியின் புடவை கட்டி வைஷ்ணவி நடத்திய வாவ் திருமணம் !

twitter

ஒட்டு மொத்த தமிழ் பிக் பாஸ் பார்வையாளர்களையும் முதல் நாளிலேயே கவர்ந்தவர் நம் இயக்குனர் சேரன்தான். யதார்த்தமான அவரது ஆரம்ப அறிமுக பேச்சு.. போட்டியாளர்கள் அனைவரும் தனக்கு முதல் நாளிலேயே தரப்பட்ட வின்னர் மெடலை ஆரவாரத்தோடு அணிந்து மகிழ சேரன் மட்டுமே அதில் தனித்து நின்றவர்.

கமல்ஹாசன் இது உங்களுக்கு வின்னர் என பெயரிடப்பட்ட உங்கள் பெயர் போட்ட மெடல் என்று கூறி சேரன் கையில் கொடுக்க.. சேரன் மிக அழகாக "அது எப்படிங்க சரியா இருக்க முடியும் இன்னும் நான் உள்ளவே போகலையே " என்று உண்மைத்தன்மையோடு அந்த மெடலை வாங்க தயங்கினார்.

ஆனால் கமல் வற்புறுத்தவே அதனை வாங்கி கொண்டு பிக் பாஸ் வீடு நோக்கி புறப்பட்டார். இதன் மூலம் சேரன் நேர்மைத்தன்மையோடு நீண்ட நாள் பிக் பாஸ் வீட்டில் தாக்குபிடிப்பார் என்றுதான் தோன்றுகிறது. இவர்தான் வின்னர் என்றும் ஊகிக்க தோன்றுகிறது. பார்க்கலாம்.

twitter

முதல் நாளில் இருந்தே தனது டாஸ்குகளை ஆரம்பித்த பிக்பாஸ் ஒரு முன்னோட்டமாக அனைவரும் எப்படி டாஸ்க் செய்கிறார்கள் என்பதை கவனிப்பதற்காக சில விளையாட்டுக்களை கொடுக்க அனைவரும் சிறப்பாக செய்தனர். இயக்குனர் சேரனுக்கு காமெடி நடனம் தரப்பட எதைப்பற்றியும் யோசிக்காமல் தரப்பட்டதை செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இதில்.. புதுமுக மாடல் தர்ஷன் மட்டும் பார்வையாளர்களிடம் திட்டு வாங்கி இருக்கிறார். தர்ஷன் யாருக்காவது டாஸ்க் தர வேண்டும் என்று சொல்லப்பட.. யோசிக்காமல் ரேஷ்மாவை பார்த்து முதலிரவு காட்சியில் என்ன செய்வீர்கள் என்று நடியுங்கள் என்று கூறியது பார்வையாளர்களால் கண்டனத்துக்கு ஆளானது. நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர். தர்ஷனுக்கு நல்ல வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் நாளே திட்டு வாங்கியிருக்கிறார்.

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன