என் குழந்தையே.. நீ சுமக்கும் இந்த குழந்தைக்கு நன்றி ! திருமணமின்றி தாய்மை அடைந்த காதலி பற்றி நடிகர் அர்ஜுனின் நெகிழ்வான பதிவு !

என் குழந்தையே.. நீ சுமக்கும் இந்த குழந்தைக்கு நன்றி ! திருமணமின்றி தாய்மை அடைந்த காதலி பற்றி  நடிகர் அர்ஜுனின் நெகிழ்வான பதிவு !

பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் ( Arjun Rampal ) தனது காதலி கேபிரில்லா கர்ப்பமாக இருப்பதை அழகாக வெளியுலகுக்கு தெரிவித்திருக்கிறார்.      


ஓம் ஷாந்தி ஓம் திரைப்படத்தில் ஷாருக்கான் தீபிகாவை தவிர்த்து அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு நடிகர் அர்ஜுன் ராம்பால்.        


கடந்த வருடம் தனது மனைவி ஜெசியாவை பிரிந்தார் ராம்பால். திருமணம் ஆகி 20 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து பிரிந்ததை பாலிவுட் அதிர்ச்சியடைந்து பார்த்தது.


முதல் சந்திப்பும்.. அதன்பின்பான பதட்டமும்.. மாதுரி பற்றி மனம் திறந்த சஞ்சய் தத் !


                    


மஹிரா மற்றும் மஹிகா ஆகிய இரு மகள்கள் இவர்களுக்கு இருக்கிறார்கள். ஜெசியாவை பிரிந்த பின்னர் கேபிரில்லா டிமிட்ரியாடிஸ் எனும் தென்னாபிரிக்க நடிகை மற்றும் மாடலை காதலித்தார் அர்ஜுன் ராம்பால். இருவரும் ஒன்றாக வலம் வந்தனர்.                       


இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள்  என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது காதலியின் கர்ப்பம் குறித்து அர்ஜுன் ராம்பால் இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கிறார்.         


உன்னை அடைந்ததும் மீண்டும் எல்லாவற்றையும் ஆரம்பித்ததும் எனக்கு மிகுந்த சந்தோஷம். என் குழந்தையே நீ சுமக்கும் இந்த குழந்தைக்காக நன்றி என்று அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.


சௌந்தர்யா ரஜினிகாந்த் - பெண்களில் அதிகம் ஆசிர்வதிக்கப்பட்டவர்  
 

 

 


View this post on Instagram


 

 

Blessed to have you and start all over again....thank you baby for this baby 👶🏽


A post shared by Arjun (@rampal72) on
திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இருவர் இப்படி பெற்றோர் ஆக தயார் ஆனது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் அர்ஜுன் ராம்கோபாலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.                


திருமணத்திற்கு முன் கர்ப்பம் ஆனதை தைரியமாகவும் அழகாகவும் அர்ஜுன் ராம்பால் வெளிப்படுத்தியிருப்பது குறித்து விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.


அர்ஜுன் ராம்பாலின் காதலி கேபிரில்லா கார்த்தி உடன் தோழா படத்தில் நடித்த ஜென்னி என்பது குறிப்பிடத்தக்கது.   


மலாய்காவின் மகன் மற்றும் ஜான்வி மற்றும் ஆறு வித்யாசங்கள் ! நெட்டிசன்ஸ் கிண்டல் !படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


படப்பிடிப்பில் விபத்து : விக்கி கௌஷலிற்கு கன்னத்தில் 13 தையல்கள்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.