ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடும் NGK ட்ரைய்லர் !

ரசிகர்கள்  தாறுமாறாக கொண்டாடும்  NGK ட்ரைய்லர் !

சினிமா ரசிகர்களுக்கான அடுத்த விருந்தை இயக்குனர் செல்வராகவன் கொடுத்திருக்கிறார். நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த NGK ட்ரெய்லரை நேற்று படக்குழு வெளியிட்டது.


சூர்யா ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பினை இந்த ட்ரெய்லர் அற்புதமாகவே பூர்த்தி செய்திருக்கிறது. சாய்பல்லவி மற்றும் ராகுல் ப்ரீத்தி சிங் இதில் இணைந்து நடித்திருக்கின்றனர்.யுவனின் இசை திரும்பவும் மாஸ் காட்டுகிறது. செல்வா மற்றும் யுவனின் கூட்டணி எப்போதும் அற்புதமானது. மென்மையான பின்னணி அழுத்தமான காட்சிகள் என்று ட்ரைய்லர் அட்டகாசமாக வெளியாகியிருக்கிறது. தற்போதைய தமிழ்நாட்டின் தேவை பற்றி படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.


செல்வாவின் புதுப்பேட்டை திரைப்படம் அவரது அரசியலின் பார்வை பற்றி நமக்கு விளக்கும். இந்நிலையில் ஒரு சிலர் இது செல்வா படம் போல இல்லை என்று கூறுவது அவர்கள் செல்வாவை கவனித்தவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதைத்தான் பறைசாற்றுகிறது.இது முழுக்க முழுக்க செல்வராகவன் படம்தான் என்பது அவரது ரசிகர்களுக்கு புரிந்திருக்கிறது. காட்சிக்கு காட்சி செல்வா மட்டும்தான் கண்களுக்கு தெரிவதாக அவர்கள் கூறுகின்றனர். பின்னணி இசையில் யுவன் தனக்கும் செல்வாவுக்கும் இடையேயான புரிதலை மேலும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.


சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் அப்டேட் வெளியிட தாமதம் ஏற்பட்டதிற்கான காரணத்தை விளக்கியிருந்தார்.NGK ஒரு சாதாரண அரசியல் படம் இல்லை இதில் இயக்குனர் செல்வராகவனின்அரசியல் குறித்த கோணம் வித்யாசமாக இருக்கும். இளைஞர்களை எழுப்பும் படமாக இது இருக்கும். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம். யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் என்று தனது அரசியல் பார்வையையும் சூர்யா அங்கே வெளிப்படுத்தினார்.


சூர்யாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு மற்றும் இயக்குனர் செல்வாவிற்கு ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மற்ற நடிகர்களுக்கு கால்ஷீட் சிக்கல் வந்திருக்கிறது. ஆனாலும் இந்தப்படம் அதற்கான நேரத்தை தானே எடுத்துக்கொண்டதாக கூறிய சூர்யா திரைப்படத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்த தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவை பாராட்டினார். சூர்யாவின் படங்களில் NGK முக்கிய இடத்தை பெரும் என்றும் கூறியிருக்கிறார்,செல்வராகவன் தனது கதையை எதற்காகவும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத அற்புதமான இயக்குனர். அவரது ரசிகர்கள் அவருக்காக காத்திருக்கிறார்கள்.


மொத்தத்தில் ட்ரைய்லர் வெளியானதில் செல்வா சூர்யா ரசிகர்கள் சந்தோஷம் அடைந்திருக்கின்றனர். படம் வெளியாகும் நாளிற்காக காத்திருக்கின்றனர். இன்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பெற்று சாதனையும் புரிந்திருக்கிறது NGK 

Subscribe to POPxoTV

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்  , twitter                 


---                        


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                      


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.