பிக் பாஸ் சீசன் 3 இன்னும் இரு வாரங்களில் முடிவடைய இருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் முகென், சாண்டி, கவின், லாஸ்லியா, ஷெரின், தர்ஷன் ஆகிய ஆறு போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் முகென் ஏற்கனவே நேரடியாக பைனலுக்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டை பெற்று விட்டார்.
எனவே மீதமுள்ள ஐந்து போட்டியாளர்களிடையே தான் யார் பைனலுக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. இந்த வாரம் நாமினேஷன் புராசஸ் சற்று வித்தியாசமாக நடைபெற்றது.
அதாவது காப்பாற்ற விரும்பும் நபர்களுக்காக ஹவுஸ்மேட்ஸ்கள் பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும். அதில் எந்த போட்டியாளர்கள் காப்பாற்றப்பவில்லையோ அவர்கள் தான் நாமினேட் செய்யப்பவர்கள் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி அனைவரும் தங்களுக்கு விருப்பப்பட்டவர்க்ளை காப்பாற்றினர். பின்னர் அனைவரும் லிவிங் ஏரியாவில் அமர்ந்திருக்க, நாமினேஷன் ப்ராசஸ் முடிந்ததாக கூறினார் பிக்பாஸ். மேலும் நாமினேஷன் ப்ராசஸின் போது நான் ஜாலியாக இருந்தது போல் நீங்களும ஜாலியாக இருந்தீர்களா என்று கேட்டு வெறுப்பேற்றினார்.
பிக் பாஸ் மோசடி – நடிகை பளார், ஷெரினுக்காக தர்ஷன்! கவினை காப்பாற்ற தயங்கும் லாஷ்லியா!
இதனை தொடர்ந்து யாரையும் காப்பாற்ற சாப்பிட்டிருக்க வேண்டாம், ஏனெனில் இது 14வது வாரம் என்பதால் எல்லோரும் டைரக்ட் நாமினேஷனில் இருக்கிறீர்கள் என்று கூறினார். இதனை சற்றும் எதிர்பாராத ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சியடைந்தனர். அதன்படி முகெனை தவிர அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ளதால் இந்த வாரம் யார் வெளியேறப்போவது என்று எழுந்துள்ளது.
கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களிடம் நன்றாக விளையாடி வருகிறார். அடிக்கடி ஹவுஸ்மேட்ஸ்களை கலாய்ப்பது மொக்கை செய்வது என என்டெர்டெய்ன் செய்து வருகிறார் பிக்பாஸ். அவை அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினர்களாக கடந்த சீசனைச் சேர்ந்த இரண்டு போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த சீசன் டைட்டில் வின்னரான ரித்விகாவும், கோல்டன் டிக்கெட் வென்ற ஜனனியும் செல்ல உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மகத் (mahat), மற்றும் யாஷிகா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
#Day93 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/AjJZEf6BuE
— Vijay Television (@vijaytelevision) September 24, 2019
மூன்றாவது புரோமோவில், நீங்கள் யாரவது ஒருத்தருக்கு கடிதம் எழுத வேண்டும் ஆனால் இது டிவியில் டெலிகாஸ்ட் ஆகாது என்று யாஷிகாவும், மஹத்தும் ஷெரினிடம் சொல்கின்றனர். பின்னர் ஷெரின் கடிதம் எழுதி முடித்ததும் பிக் பாஸ், மகத் மற்றும் யாஷிகா இருவரையும் அந்த கடிதத்தை எடுத்து ஷெரின் யாருக்கு எழுதினாரோ அவருக்கு அளிக்கும் படி கூறுகிறார்.
இதனால் கடுப்பான ஷெரின் ஓடி வந்து தான் எழுதியு கடிதத்தை கிழித்து போட்டு விடுகிறார். கடிதத்தில் உற்றுநோக்கியபோது “மேகமூட்டத்துடன் காணப்படும் என்னுடைய வாழ்க்கையில் ஒரு சூரியன் மாதிரி நீ வந்திருக்கிறாய். என்னுடைய வாழ்க்கையில் நீ ஒரு முக்கியமான நபர் என்று முழுக்க முழுக்க தர்ஷனை பற்றி எழுந்திருந்தது தெரிகிறது. இந்நிலையில் பிக் பாஸ் உத்தரவை மீறி ஷெரின் நடந்துகொண்டதால் அவருக்கு தண்டனை வழங்க வாய்ப்புள்ளது.
#Day93 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/Hfc7N2kYTF
— Vijay Television (@vijaytelevision) September 24, 2019
இரண்டாவது புரோமோவில் மகத், மற்றும் யாஷிகா போட்டியாளர்களுக்கு உத்தரவுகள் வழங்குகின்றனர். அதன்படி தர்ஷன் மன்னராகவும், லாஸ்லியா மற்றும் முகென் மன்னரான தர்ஷன் சொல்லும் அனைத்தையும் செய்ய வேண்டும் என கூறுகின்றனர். மேலும் சாண்டி மன்னர் வரும் அறிவிப்பை கூற வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. மன்னர் தூர தேசம் செல்ல விரும்பும் போது அவரை தூக்கி கொண்டு செல்ல வேண்டும் என கூறப்படுகிறது. அதன்படி அனைவரும் வேடிக்கையாக செய்கின்றனர். இதனால் பிக் பாஸ் வீடு கலகலப்பாக இருக்கிறது.
#Day93 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/d13U1Ka5Ep
— Vijay Television (@vijaytelevision) September 24, 2019
இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரோமோவில் இது உறுதியாகியுள்ளது. கடந்த சீசனிலுமே கூட முதல் சீசன் போட்டியாளர்களான ஆரவ், ரைசா மற்றும் ஹரீஷ் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றனர். பெரும்பாலும் இவர்கள் இருவரும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுத்து அதற்கு நடுவர்களாக இருப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு பிக் பாஸ் வீட்டில் தற்போது நான்கு ஆண் போட்டியாளர்கள் உள்ள நிலையில் இரண்டு பெண் போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே உள்ளனர். லாஸ்லியா, ஷெரின் என அவர்கள் இருவருக்குள்ளுமே நல்ல நட்பு எதுவும் இல்லை. எனவே அவர்களுக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் யாஷிகா உள்ளே சென்றிருப்பதாக தெரிகிறது.
பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களாக இருந்த மகத் (mahat) மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகிய இருவருமே சர்ச்சைக்குரிய போட்டியாளர்களாக கருதப்பட்டனர். மகத்துக்கு ஏற்கனவே ஒரு காதலி இருப்பது தெரிந்தும் யாஷிகா அவரை காதலித்ததும், மகத்தும் அந்த காதலை ஏற்றுக்கொண்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எப்படியோ மாட்டிகிட்டேன் குட்டி செவுத்துல முட்டிகிட்டேன்!சிச்சுவேஷன் சாங் பாடும் Losliya!
அதேபோல் தனது தோழி ஐஸ்வர்யா தத்தாவுக்காக பல குறுக்கு வழிகளில் ஈடுபட்டவர் யாஷிகா. போட்டியாளர்களை போட்டியாளர்களாக பார்க்காமல் எதிரி போல் யாஷிகா, ஐஸ்வர்யா ஆகிய இருவரும் கையாண்ட விதம் பார்வையாளர்களுக்கு வெறுப்பை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மகத் (mahat) மிகவும் முரட்டுத்தனமாக விளையாடி, அவ்வப்போது தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி மற்றவர்களை எரிச்சல்படுத்தினார்.
இந்த நிலையில் இன்று இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்து போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறுகின்றனர். விருந்தினராக சென்றுள்ள அவர்கள் ஒருவாரம் பிக்பாஸ் வீட்டில் தங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி மேலும் எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ளது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!