எப்படியோ மாட்டிகிட்டேன் குட்டி செவுத்துல முட்டிகிட்டேன்! சிச்சுவேஷன் சாங் பாடும் Losliya!

எப்படியோ மாட்டிகிட்டேன் குட்டி செவுத்துல  முட்டிகிட்டேன்! சிச்சுவேஷன் சாங் பாடும் Losliya!

பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பத்தில் இருந்தே நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. லாஸ்லியா கவினின் ஆக்கிரமிப்புகளைத் தவிர மற்ற எல்லாமே பார்ப்பவர்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

முதல் நாளில் கவினுடன் காதலை ஆரம்பித்து மூன்றாம் நாளில் முகேன் மீது அதனை டைவர்ட் செய்த அபிராமி முதல் சாக்ஷிக்கும் கவினுக்கும் இடையிலான நெருக்கம் தெரிந்த பின்னரும் கவினை கை விடாமல் காப்பாற்றும் லாஸ்லியா (losliya) வரை இந்த தலைமுறையின் காதல் போக்கு குழப்பங்களைத்தான் தருகிறது.

வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும் நபர்களுக்காவது தங்கள் காதல் எதை நோக்கி செல்கிறது என்கிற தெளிவு பிறந்தால் நல்லது. அவ்வளவுதான் இவர்களிடம் இருந்த நாம் கற்றுக் கொள்ள முடிவது.

லாஸ்லியா கவின் காதல் பற்றி பலவிதமான விமர்சனங்கள் வீட்டுக்குள் இருந்து எழுந்தன. வீட்டிற்கு வெளியே இருந்தும் குரல்கள் அவர்களை நோக்கியே நீண்டன. ஆனாலும் எதற்கும் அசராமல் லாஸ்லியா கவினை காப்பாற்றுவதன் அர்த்தம் அவருக்கே இன்னும் விளங்கியிருக்காது

Hotstar

இதனைப் பற்றி சேரன் கவின் லாஸ்லியா இருவரிடமும் பேசினார். அப்போதும் விட்டு கொடுக்காத கவின் இவர் யார் நடுவில என்னமோ பெத்து வளர்த்த மாதிரி என்று கூறியிருந்தார். சேரன் பலமுறை சென்று பேசியும் கவின் சேரனை இன்று வரை மதிப்பதே இல்லை.

டாஸ்கில் முதுகு பிடித்துக் கொண்டு சேரன் நடக்க முடியாமல் அவதிப்பட சாண்டி , தர்ஷன், முகேன் ஆகியோர் சேரனுக்கு உதவி செய்கின்றனர். ஆனால் கவின் இதனை படுத்துக் கொண்டே வேடிக்கை பார்க்கிறார். அதைப்போலவே ஹாலில் சேரன் அமர முடியாமல் தவிக்க லாஸ்லியா அப்பா முறை என்று முடிவெடுத்த சேரனை கண்டுகொள்ளாமல் கவினுடன் ஒன்றாக அமர்ந்து இருவரும் சைலண்டாக சாப்பிட்டபடியே இருக்கின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது நிச்சயம் சுயநலத்தில் இருவருக்கும் ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருப்பதாகவே தெரிகிறது. லாஸ்லியாவின் அப்பா அம்மா குடும்பமே வந்து அத்தனை அறிவுரை சொல்லியும் திருந்தாத லாஸ்லியா மீண்டும் கவினுடன் மட்டுமே இருக்கிறார்.

இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் கவின் தனக்காக வரிந்து கட்டிக்கொண்டு வரும் லாஸ்லியாவை "இரை சிக்கி விட்டது" என்று நினைத்தபடி லாஸ்லியாவின் "என்னை விட்டு கொடுக்காதவங்களை எனக்கு பிடிக்கும்" என்கிற வீக் பாயிண்டை பிடித்துக் கொண்டு லாஸ்லியாவிற்கு ஒன்று என்றால் துடிப்பது போல காட்டிக்கொள்கிறார். 

எதற்கெடுத்தாலும் தத்துவம் பேசி ஆளைக் கவிழ்க்கும் தந்திரம் கவினுக்கு கை வந்த கலையாக இருக்கிறது. ஆனாலும் அதிகமாக பேசினால் உண்மை முகம் தெரிந்து விடலாம் என்பதற்காக லாஸ்லியாவின் அன்பு குறையாத அளவுக்கு அளவாகவே பேசிக்கொள்கிறார்.

 

Hotstar

கூடையில் பந்து சேர்க்கும் டாஸ்கில் சாண்டி தெரியாமல் லாஸ்லியா மீது விழுந்து விட அனைவர் முன்னிலையிலும் கத்துகிறார் கவின். உடனடியாக லாஸ்லியாவுக்கு அடி எதுவும் படவில்லையே என முதலில் ஓடி வந்து கேட்டது முகேன் தான். இரண்டாவதாக தர்ஷன் கேட்கிறார். மூன்றாவதாக சேரன் உடல்நிலை காரணமாக நின்ற இடத்தில் இருந்தே கேட்கிறார்.

இத்தனையும் முடிந்த பிறகு நிதானமாக டாஸ்க்கிற்கு நடுவே கவின் மெதுவாக நடந்து சென்று லாஸ்லியாவிடம் ஆர் யூ ஓகே எனக் கேட்கிறார். மற்ற ஆட்களிடம் முறைப்போடு பதில் சொன்ன லாஸ்லியா கவினிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்.

விளையாட்டிற்கு நடுவே இது நடக்கவே ஷெரீனுக்கு கோபம் வருகிறது. காரணம் எல்லா விளையாட்டிலும் ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்ளவே லாஸ்லியா மற்றும் கவின் முனைகின்றனர் என்பதே அந்த கோபம். அதனால் கூடையை கோபத்தில் உதைக்கும் ஷெரின் பின்னர் மன்னிப்பு கேட்டு தன்னுடைய பந்துகளை பொறுக்கி கூடையில் போடுகிறார்.

அப்போதும் கவினுக்கு அதனை எடுத்து போட விருப்பமில்லாமல் அந்த கேமில் இறுதி இடத்தில் இருக்கிறார். அடுத்தது தங்க முட்டை டாஸ்க்கிலும் மற்றவர்களை விட குஷியாக இருந்தது கவின் மற்றும் லாஸ்லியா தான். காரணம் விடிய விடிய நாங்கள் பேசினாலும் இனி தவறில்லை என்பதை போலவே பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு கேப்பில் தர்ஷன் லாஸ்லியா பாலை உடைத்து விட அதனைத் தொடர்ந்து கவின் மற்றும் லாஸ்லியா சாண்டி மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

Hotstar

இதனால் மனம் உடைந்த சாண்டி ஆறுதலுக்காக சேரனிடமும் தன்னுடைய குருநாதரிடமும் பேசுகிறார். அந்த காட்சிகள் சாண்டி எனும் வெள்ளந்தி மனிதரின் வேதனையை நமக்கு புரிய வைக்கிறது. ஆனால் சாண்டி உங்களின் இந்த பாசத்திற்கு கவின் தகுதியானவர் இல்லை என்கிறார்கள் பார்வையாளர்கள்.

இத்தனை களேபரங்களுக்கு நடுவில் விடிய விடிய கவினுடன் பேசிக்கொண்டிருக்கும் லாஸ்லியா மிக சந்தோஷமாக இருக்கிறார். உறங்காத அசதி எதுவும் இல்லாத லாஸ்லியா முகத்தில் தனிப்பொலிவும் ஒரு தெளிவும் தெரிகிறது.

இந்த எபிசோடின் ஆரம்பத்தில் லாஸ்லியா பாடுகிறார் "எப்படியோ மாட்டிகிட்டேன் குட்டி செவுத்துல நான் முட்டிகிட்டேன் " எனும் பாடலை. கவினை பற்றிய முடிவோடுதான் அந்த பாடல் அவருக்குள் முளைத்திருக்கலாம். தெரிந்தே குட்டி சுவரில் முட்டிக் கொள்ளும் லாஸ்லியாக்களுக்கு காலம் மட்டுமே மிக சிறந்த பாடத்தை கொடுக்கும்.

Hotstar

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்