logo
ADVERTISEMENT
home / Bath & Body
தாரகையை  போல் ஜொலிக்கும் நயன்தாராவின் அழகு மற்றும் ஒப்பனை இரகசியங்கள் இதுதான்!

தாரகையை போல் ஜொலிக்கும் நயன்தாராவின் அழகு மற்றும் ஒப்பனை இரகசியங்கள் இதுதான்!

முன்பெல்லாம், ஒப்பனைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருவது இல்லை. ஆனால், இப்போது அனைவரும், ஒரு சிறிய விழாவாக இருந்தாலும், கல்யாணம் என்றாலும், நன்றாக அலங்கரித்து, ஒப்பனை செய்து கொள்ள விரும்புகிறார்கள். அதுவும், அவர்களுக்கு பிடித்த நடிகை போன்ற ஒப்பனை, மற்றும் கூந்தல் பாணியை போன்ற தோற்றம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

அழகான நட்சத்திரம் தரையில்  இறங்கி வந்தது போல இருப்பவர் நம் ‘லேடி சூப்பர்ஸ்டார்’  – நயன்தாரா! எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், தன் தனிப்பட்ட நடிப்பில், சிரிப்பில், அழகில்  அனைவரையும் ஈர்த்தவர் நயன்தாரா. அவருடைய அழகின் இரகசியம் தெரிந்து கொள்ள ஆசையா?! இதோ அவர் அன்றாடம் செய்து வரும் அழகுக் குறிப்புகளைப் (beauty secret/tips) பார்க்கலாம்.

1. சரும பராமரிப்பு

Instagram

ADVERTISEMENT

எல்லோரும் தரும் குறிப்பு தான் இது.  முதலில் உங்களை நீரோட்டமாக வைத்திருங்கள். உங்கள் உடலுக்குத் தேவையான தண்ணீர் அருந்துங்கள்.நாள் முழுவதும் போதிய அளவு தண்ணீர் மற்றும் பழச்சாரை அருந்துவது, மேலும், தினமும் முகத்தை சுத்தம் செய்வது, சருமத்தின் நிறத்தை பராமரிப்பது, மேலும் ஈரத்தன்மையோடு வைத்திருப்பது போன்ற விஷயங்களை தவறாமல் செய்யவேண்டும். சரும பராமரிப்பின் முழு விவரங்களுக்கு இங்கு கிளிக் செயுங்கள். 

வெயில், மழை என எந்த நேரத்திலும் நயன்தாராவை போல் வேலை செய்பவராகா இருந்தால் , சன்ஸ்கிரீன் முகத்தில் தடவாமல் வெளியில் செல்லாதீர்கள். இதற்கு ஒரு பிராண்டட் சன் ஸ்க்ரீனை தேர்ந்தெடுங்கள். 

இதற்கு POPxo பரிந்துரைப்பது – நியூட்ரோஜெனா அக்னே கேர் காம்போ ( ரூ 924 )

2. கூந்தல் பராமரிப்பு

ADVERTISEMENT

Instagram

நயன்தாராவின் கூந்தல் ஒவ்வொரு முறையும் வெவ்வேறாக தோன்றும்.  அவரின் கூந்தல் சிறிது தடிமனாகவும் அற்புதமாகவும் ஒவ்வொரு பெண்ணும் விரும்பும்விதமாக இருக்கும். நயன்தாராவின் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் கூந்தல் பாணி –  ஒவ்வொரு சின்னப் பெண்ணும் அணிந்துகொள்ளும் ஹேர்பேண்ட் மட்டும்தான் போட்டிருப்பார். ஆனால் அதுவே அவருக்கு அழகாக தோன்றுமாறு அமைத்துக் கொண்டுள்ளார். இதற்கு அவர் தினமும்  தன் கூந்தலுக்கு தவறாமல் எண்ணெய் பயன்படுத்தி பராமரிக்கிறாராம். அப்படி உங்களுக்கு பொருத்துமாறு உங்கள் கூந்தல் தன்மைக்கேற்ப அழகுபடுத்திக் கொள்ளுங்கள். 

POPxo பரிந்துரைக்கும் கூந்தல் பராமரிப்பு வொல்யூம் ஹேர் ஷாம்பு ரகங்கள் – சன்சில்க் தேங்காய் நீர் & அலோ வேரா வொல்யூம் ஹேர் ஷாம்பு (ரூ 95), ட்ரெசெம்மே பியூட்டி ஃபுள் வொல்யூம் ஹேர் ஷாம்பு (ரூ 389) 

மேலும் படிக்க – அடர்த்தியான நீண்ட கூந்தல் வேண்டுமா? இதோ உங்களுக்கான ஹேர் பேக்! 

ADVERTISEMENT

3. உடற்பயிற்சி

Instagram

நயன்தாரா எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உடற்பயிற்சியை கைவிடுவதில்லை. தினமும் உடற்பயிற்சி, சரியான உணவு(டயட்) மற்றும் யோகா ஆகியவற்றை கடைபிடிக்கிறார். கடந்த 13 வருடங்களாக அதே அழகை பராமரித்து வருகிறார் நயன்தாரா. அதற்கு அவர் கடினமான டயட் திட்டமிடல் எல்லாம் இருப்பது கிடையாதாம். ஆனால், சரியான ஒழுங்குமுறையை கையாளுகிறாராம். இது நமக்கு இதுவரை அவர் பொது இடங்களில் சாப்பிடுவது போல உள்ள புகைப்படம் எதுவும் கிடைக்காதே கிடைக்காததே   சான்றாக வைத்துக்கொள்ளலாம்!

முதன்மை நடிகையான நயன்தாரா, அவர் தனக்கென ஒரு பிட்னெஸ் எக்ஸ்பெர்ட்(fitness expert) வைத்திருப்பதாகவும், அவருக்கென தனி உணவு முறையை வகுத்துக் கொடுத்திருப்பதாகவும், அதை அவர் சலித்துக்கொள்ளாதவாறு அடிக்கடி மாற்றி அமைப்பதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

“குறைவாக உண்டு, அதிகம் உழைக்கும்” பாணியை பின்பற்றுகிறார் நயன். அப்புறம், நீங்க எப்படி? ஸ்லிம் மற்றும் ஆரோக்கியமான உடல் வேண்டுமெனில் நல்ல சத்தான உணவை கொஞ்சமா சாப்பிட்டு, நிறைய வேலை செய்யுங்கள்.

4. ஒப்பனை

Instagram

தற்போது ட்ரெண்ட் என்றால் நயன்தாராவின் நூட் ஒப்பனைத் தோற்றத்தைத்தான் உதாரணமாக சொல்வார்கள். ஸ்மோகியான கண்கள், நூட் நிற உதடுகள்(அதாவது மிகவும் அடர்ந்த ஒப்பனை இல்லாமல், சாந்தமான நிறத்தில், இயற்கையாக தோன்றுமாறு), இதுவே தற்போது நயனின் அடையாளம்.

ADVERTISEMENT

நயன்தாரா(nayanthara) எந்த ஒப்பனை செய்வதற்கு முன்னும், தன்னுடைய சருமம் சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்துகொண்டு பின்னர்தான், ஒப்பனையை ஆரம்பிப்பார்.மஸ்காரா போடுவதற்குமுன் கண் இமைகளை வளைத்து அழகு செய்து கொண்டு,  அவருடைய கண்களுக்கு அதிக காஜல் உபயோகித்து, அவருடைய புருவத்தை அடர்த்தியாக வரையுவது தற்போது அவர் மாற்றிகொண்டுள்ள தோற்றம். கன்னத்தில் தடவும் ப்ளஷ், அவருடைய லிப்ஸ்டிக்கிற்கு தகுந்தவாறு பயன்படுத்துவார். பளபளப்பான பழுப்பு நிற லிப்ஸ்டிட்தான் பெரும்பாலும் அணிகிறார். அது அவருக்கு இயற்கையாக இருப்பது போல தோன்றும் அளவிற்கு தற்போது பயன்படுத்துகிறார். 

POPxo பரிந்துரைப்பது – பேசஸ் கனடா புரோ மேட் லிப் க்ரேயன் மேக் மீ மயின் (ரூ 397),நைகா சோ மேட் லிப்ஸ்டிக் – ஐரிஷ் காபி (ரூ 399)

மேலும் படிக்க – எங்கள் லிப்ஸ்டிக் கையிடை கொண்டு உங்களுக்கான பர்ஃபெக்ட் லிப்ஸ்டிக்கை கண்டறியுங்கள்

மேலும், சினிமாவில் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு தேவையை  தவிர, நயன்தாரா அதிக நகைகள் போட விரும்புவது கிடையாது. எளிமையாக நேர்த்தியாக இருக்கவே அவர் விரும்புகிறார். கவனித்துப் பார்த்தல் ,  விழாவிற்கு அவர் பெரிய பெரிய தோடுகள் அணிந்து வருவார், ஆனால் கைகளிலோ, கழுத்திலோ எதுவும் போட்டிருக்கக்கூட மாட்டார். இதுவே ஒரு நேர்த்தியான தோற்றத்தை அளிக்கிறது! 

ADVERTISEMENT

இந்தக் குறிப்புகளை மனதில் வைத்துக்கொண்டு, உங்கள் சருமத்திற்கும், நிறத்திற்கும், எந்த ஒப்பனை அழகாக இருக்குமோ அதை பயன்படுத்தி தனித்துவமாக இருக்க நினைப்பதே  சிறந்தது.

பட ஆதாரம்  – Instagram 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! 

ADVERTISEMENT
29 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT