மகாத்மா காந்திக்கு(Gandhi) அறிமுகம் தேவை இல்லை. இந்த உலகமே போற்றும் காந்தி அடிகளார், இந்திய சுதந்திரத்திற்காகவும், பெண் சுதந்திரத்திற்காகவும், சாமான்ய மக்களின் உரிமைக்காகவும் போராடியுள்ளார். இந்திய சுதந்திரதிர்க்காக போராடிய பலருள், மகாத்மா காந்தியும் ஒருவர். இவரல் அக்டோபர் 2, 1869ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இன்று அனைவராலும், மகாத்மா காந்தி என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர் அகிம்சையை தனது ஆயுதமாக எடுத்து சுதந்திரத்திற்காக போராடினார். இந்திய சுதந்திரதிற்கு இவருக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. பல போராட்டங்களை நடத்தியுள்ளார். அமைதி மற்றும் அகிம்சை ஆகியவற்றை தனது ஆயுதமாக எடுத்துக் கொண்டு, வெள்ளையனுக்கு எதிராக போராடினார். இவரை பல ஆயிரம் மக்கள் பின்பற்றி தங்கள் தேச சுதந்திரதிர்க்காக போராடினார்கள். நீங்களும் உங்கள் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்களை உங்கள் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பகிர விரும்பினால், உங்களுக்காக சில தொகுப்புகள்
காந்தி ஜெயந்தி பொன்மொழிகள் (Mahatma Gandhi Quotes In Tamil)
1. உங்களை நீங்கள் அறிந்து கொள்ள ஒரு சிறந்த வழி எதுவென்றால்,
பிறருக்கு சேவை செய்வதில் உங்களை அர்பணித்துக் கொள்வது தான்!
இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
2. முதலில் அவர்கள் உங்களை நிராகரிப்பார்கள்
பின் உங்களை போலிஎன்று கூறுவார்கள்
அதன் பின் உங்களை தண்டிப்பார்கள்
இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!
இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
3. அனைவரும் உண்மையின் பாதையை பின் தொடருவோம்
அனைவரும் ஞானத்தை பெரும் பாதையை பின் தொடருவோம்
மகாத்மா காந்தியின் பாதையை இந்த பொன்னாளில் பின் பற்றுவோம்!
இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
4. இந்த உலகத்தில் மாற்றத்தை காண
உன்னுள் முதலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
5. நீங்கள் உலகத்தில் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள்!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
6. அன்புள்ள இடத்தில் தான் ஆண்டவன் இருக்கிறான் – மகாத்மா காந்தி!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
7. துணிவு இல்லையேல் வாய்மை இல்லை வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை – மகாத்மா காந்தி
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
8. நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள் – மகாத்மா காந்தி
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
9. கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன குற்றங்களை
உணராதவனே குருடன் – மகாத்மா காந்தி
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
10. நீங்கள் எதை சித்தாளும், உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும்
உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்!
இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
Also Read About வாழ்க்கைக்கு உத்வேகம் தரும் மேற்கோள்கள்
ஊக்கமளிக்கும் காந்தி பொன்மொழிகள் (Inspirational Quotes by Mahatma Gandhi)
1. பலம் உங்கள் உடலில் இருந்து வரவதில்லை
அது உங்கள் மனதில் இருந்து பிறப்பது!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
2. இந்த உலகத்தில் உண்மையான அமைதி நிலவ வேண்டும் என்று நினைத்தால்
அதனை குழந்தைகளிடம் இருந்து தொடங்க வேண்டும்!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
3. இந்த உலகத்தில் மாற்றம் உண்டாக வேண்டும் என்றால்
உங்களுள் முதலில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
4. ஒரு தேசத்தின் கலாசாரம் அதில் வாழும் மனிதர்களின் மனதிலும், ஆன்மாவிலும் உள்ளது!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
5. அன்புள்ள இடத்தில் தான்
ஆண்டவன் இருக்கிறான்!
காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்!
6. நாளை நீங்கள் இறந்து விடுவீர்கள் என்று நினைத்து உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்!
7. என்றுமே நீங்கள் வாழபோகின்றீர்கள் என்று நினைத்து கற்றுக்கொள்ளுங்கள்!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
8. நீங்கள் செய்யும் காரியம் முக்கியமானதா என்பதை விட
நீங்கள் செய்கின்றீர்கள் என்பதே முக்கியம்!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
9. குறிக்கோளை அடையும் முயற்சியில் தான் மகிமை இருக்கிறது
அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை!
இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
10. ஒரு தேசத்தின் பெருமை அங்கு இருக்கும் விலங்குகளாய் மக்கள் எப்படி நடதுகஈன்றார்கள் என்பதில் இருகின்றது!
பிரபலமான காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் (Gandhi Jayanti QuotesIn Tamil)
1. அன்புள்ள இடத்தில் தான் ஆண்டவன் இருக்கிறான்!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
2. துணிவு இல்லையேல் வாய்மை இல்லை….
வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை…
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
3. உண்மையை விட ஒரு பெரிய கடவுள் இங்கு இருக்க முடியாது!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
4. எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளை
ஏற்படுத்திக் கொள்கிறானோ
அவனே சுதந்திர மனிதனாவான்!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
5. பூரண ஞானம் அடைந்தவனுக்கு, துயரம் என்பது இல்லை.
நம்பிக்கையுடையவன, எதையும் எளிதில் முடிக்கும் திறமையுடையவன்.
மன்னிக்கும் குணம், ஆற்றல் வாய்ந்தவர்களுக்கு ஓர் அடையாளம்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
6. கண் பார்வை அற்றவன், குருடன் அல்ல; தன் குற்றங்களை உணராதவனே குருடன்.
எவர் ஒருவர் தன் கடமைகளை சரிவர செய்கிறாரோ, அவருக்கு உரிமைகள் தானாகவே வந்தடையும்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
7. பிறர் தவறு கண்டு, தன் தவறை திருத்திக் கொள்பவன் அறிவாளி.
எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை, அன்பாலேயே வென்று விடுங்கள் .
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
8. செயலில் கெட்டவனை விட, மனதில் கெட்டவனே மிகவும் கெட்டவன்.
பொய்யை மெய்யாலும், விரோதத்தை அன்பாலும், ஆத்திரத்தை சகிப்புத் தன்மையாலும் வெல்லலாம்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
9. அகிம்சை, மனித குலத்துக்கு கிடைத்துருக்கும் மாபெரும் சக்தி.
மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே, உண்மையான கல்வி.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
10. எப்போதும் உண்மையை மறைக்காமல் சொல்கிற மனத்திடம் வேண்டும்..
உயர்ந்த எண்ணங்களை உடையோர், ஒருநாளும் தனித்தவராகார்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
மேலும் படிக்க வெற்றிக்கான உந்துதல் மேற்கோள்கள்
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் (Gandhi Jayanti Wishes)
1. தியாகம்தான் வாழ்க்கை; இது, இயற்கை கற்றுத்தந்த பாடம்.
கல்வியில் சிறந்தவன் என்று பெயர் வாங்குவதை விட, ஒழுக்கத்தில் சிறந்தவன் என்று பெயர் வாங்க வேண்டும்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
2. பகைமையை அன்பால் வெல்லுங்கள்; சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள். மிருகத்தைப் போல நடக்கும் மனிதன், மிருகத்தை விடவும் மோசமானவன்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
3. நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால், நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகி விடும்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
4. எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே, சுதந்திர மனிதனாவான்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
5. இதயம் என்பது அறிவைவிட உயர்ந்தது!
இதயத்தை பண்படுத்தி வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துங்கள்!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
6. உடலின் வீரத்தை விட உள்ளத்தின் வீரம் மிகவும் உயர்வானது!
வீரம் உடலின் ஆற்றல் அல்ல. உள்ளத்தின் பண்பு!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
7. தோல்வி மன சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது!
நம்மை அறிமுகப்படுத்துபவை நம் வார்த்தைகளல்ல… நமது வாழ்கையே…
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
8. எல்லா சமயங்களுக்கும் பொதுவானது அகிம்சை!
வலிமையையும், வீரமும் மிக்கவர்களின் ஆயுதம் அகிம்சை!
அகிம்சையிலும், சத்தியத்திலும் தோல்வி என்பதே கிடையாது!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
9. தற்பெருமை எங்கு முடிவடைகிறதோ அங்கு தான் ஒழுக்கம் தொடங்குகிறது!
சுய கட்டுபாடுடையவனே சுதந்திரமான மனிதன்!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
10. வன்முறையின் அடையாளம் ஆயுதங்களான ஈட்டி, கத்தி, வாள், துப்பாக்கி. அகிம்சையின் அடையாளம் கடவுள்.
11. அகிம்சையின் சக்தியை ஆண்களைக் காட்டிலும் பெண்களிடமே கடவுள் அதிகமாக திரட்டி வைத்திருக்கிறார். மவுனமாக இருப்பதனாலேயே அது அதிக பலனளிப்பதாகவும் உள்ளது.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
12. அகிம்சையுடன் இணைந்த சத்தியாக்கிரகத்தின் மூலம் உலகையே உங்களுக்கு அடிபணியாகி செய்யலாம்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
13. செல்லும் பாதை சரியாக இருந்தால் அதன் முடிவும் சரியாக இருக்கும். அதனால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கண்ணியமானதாக இருக்க வேண்டும்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
14. தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது ; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது.பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும்.அது தன்னிலையுடையது.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
15. சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
16. மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
17. ஒவ்வொருவரும் அவர்களுக்கான அமைதியை அவர்களுக்குள்தான் காண வேண்டும். மேலும், அமைதி உண்மையானதாகவும் வெளிப்புறச் சூழல்களால் பாதிக்கப்படாததாகவும் இருக்க வேண்டும்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
18. உங்கள் உள்ளே இருக்கும் மனசாட்சி நண்பன் இதைச் செய் என்று கூறும்போது பிற நண்பர்கள் கூறுவதைக் கேட்க வேண்டாம்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
19. நேரானப் பாதையிலிருந்து விலகியவன் ஒருபோதும் தன் இலக்கை அடைய மாட்டான்.
சுயமரியாதை இருக்கும் இடத்தில் எந்தவித பரிசீலனைக்கும் இடமில்லை.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
20. மனசாட்சியின் மெல்லிய குரல் எட்டிப் பார்க்கும் இடத்திற்கு, மனிதர்களின் சாதாரண குரல்கள் எட்டிப் பார்க்காது.
காந்தி ஜெயந்தி வாட்ஸ் ஆப் வாழ்த்துக்கள் (Gandhi Jayanti Messages)
1. மகிழ்ச்சி உன் எண்ணத்தில் இருக்கிறது, உன் வார்த்தையில் இருக்கிறது. மற்றும் நீ செய்யும் நல்லிணக்கத்தில் இருக்கிறது.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
2. முதலில் அவர்கள் உன்னை உதாசீனம் செய்வார்கள், பிறகு கேலி செய்வார்கள், அதன் பிறகு சண்டையிடுவார்கள், கடைசியில் நீ வென்றுவிடுவாய்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
3. நீ செய்ததற்கான பலன் என்னவாக வரப்போகிறது என்று உனக்கு தெரியாது, ஆனால் நீ எதுவும் செய்யாவிடில், எதுவுமே கிடைக்காது என்பதை உணர்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
4. நாளையே இறந்துவிடுவாய் என்றால் இன்றே வாழ்ந்துவிடு, வாழ்நாள் நிறைய இருக்கிறது என்றால் கற்றுக் கொண்டே இரு. உன் மனதில் இருக்கும் எண்ணங்கள் தான், உன் வாழ்க்கையை மாற்றும் வண்ணங்கள் என்பதை மறந்துவிடாதே.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
5. மனிதர்களை திருப்தி படுத்த அனைத்துமே உலகில் உண்டு, ஆனால் மனிதனின் பேராசையை திருப்தி படுத்த எதுவும் இல்லை.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
6. உன்னை நீயே முழுதாய் தெரிந்துக் கொள்ள வேண்டும் எனில், மற்றவர்களுக்கு சேவை செய்வதில் உன்னை நீயே தோற்கடிக்க வேண்டும்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
7. நீ செய்வது வலிக்கிறது எனில் அது எப்படி தியாகம் ஆகும்?, உண்மையில் நீ தியாகம் செய்கிறாய் எனில் அது உனக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரும்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
8. இந்த உலகில் மனிதனின் தேவைக்கு போதுமான அளவு வளம் உள்ளது. அவனின் பேராசை அளவுக்கு வளங்கள் இங்கில்லை.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
9. உலகில் வன்முறையை ஏற்படுத்தும் ஏழு முக்கியமான அறிவுஏற்படுத்தும் பெருந்தவறுகள்:
1. உழைக்காமல் சேர்ந்த பணம்.
2. மனசாட்சியில்லாத மகிழ்ச்சி.
3. நன்னடத்தை இல்லாத அறிவு.
4. நேர்மையில்லாத வணிகம்
5. மனிதாபிமானம் இல்லாத அறிவியல்.
6. தியாகம் இல்லாத மதம்.
7. கொள்கை இல்லாத அரசியல்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
10. நீ எந்த விதமான உலகத்தைப் பார்க்க விரும்புகிறாயோ அதுபோலவே நீ மாறு.
பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ முதலில் அதுபோல நீ மாறு.
சிறந்த காந்தி ஜெயந்தி பொன்மொழிகள்(Best/Special Gandhi Jayanti Quotes)
1. பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும்.
கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
2. தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.
எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
3. கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
4. உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
5. சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
6. செல்வம், குடும்பம், உடம் முதலியவற்றில் உள்ள பாசத்தை நாம் உதறித் தள்ளி விடும்போது நம் இதயங்களில் உள்ள அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விடுகிறது.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
7. மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
8. சுதந்திரமாக வாழ்வது மனிதனின் உரிமை. அதுபோலவே மற்றவர்களைச் சார்ந்து வாழ்வது அவன் கடமை.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
9. கடவுள் விண்ணிலுமில்லை, மண்ணிலுமில்லை. உள்ளத்தில்தான் இருக்கிறான். அவனை மக்களுக்குச் செய்யும் சேவை மூலம் அறிய விரும்புகிறேன்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
10. ஜனநாயகத்தில் வலிமையற்றவருக்கும், வலிமை மிக்கவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
உயர்ந்த எண்ணங்களைய உடையவர் ஒருநாளும் தனித்தவராகார்.
மகாத்மா காந்தியின் பொன்மொழிகள் (Mahatma Gandhi Quotes on Peace)
1. அன்பு ஒருபோதும் தோற்பதில்லை. பகையுணர்வோ, மனிதனை அழிவுப்பாதைக்குஅழைத்துச் சென்று விடும்.
அகிம்சையால் வெல்ல முடியாமல் போனால், அதற்குக் காரணம் நம்மனபலவீனமே ஆகும்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
2. ஒரு நல்ல மனிதன் என்பவன், வாழும் அனைத்துப் பொருட்களுக்கும் நண்பன்.
அமைதி அதற்கான தனி வெகுமதியைக் கொண்டுள்ளது.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
3. கண்ணுக்குக் கண் என்று பழிவாங்கினால் இந்த உலகமே குருடர்கள் உலகமாகிவிடும்.
அகிம்சை என்பது இருதயத்தின் ஒரு பண்பு. அதற்கு மூளையுடன் தொடர்பு கிடையாது.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
4. வன்முறையால் பெற்ற வெற்றி தோல்விக்கு சமமானது. அந்தத் தோல்வி அந்தக் கணமே வந்துவிடுகிறது.
நான் இறக்கத்தயார்தான். ஆனால், என்னை நானே கொல்வதற்காக எந்த காரணமும் இருக்க முடியாது.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
5. உண்மையை பின்தொடர்பவர்கள், எதிரிக்குக்கூட வன்முறையை அனுமதிக்க மாட்டார்கள்.
சகிப்புத்தன்மை இல்லாததுகூட ஒருவித வன்முறைதான். உண்மையான ஜனநாயக அறநெறி வளர்ச்சிக்கு அது முட்டுக்கட்டையாக இருக்கும்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
6. நான் போதிப்பது கோழைகளின் அகிம்சையை அல்ல.
அகிம்சையின் மூலமே மனித வர்க்கம் பலாத்காரத்திலிருந்து வெளியேறியாக வேண்டும்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
7. அகிம்சைப் போர் எப்போதும் உடன்பாட்டில் முடிகிறதே தவிர, எதிரியை பணிய வைப்பதிலோ, அவமானப்படுத்துவதினாலோ அது ஒருக்காலும் முடிவதில்லை.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
8. அகிம்சையின் சக்தியை ஆண்களைக் காட்டிலும் பெண்களிடமே கடவுள் அதிகமாக திரட்டி வைத்திருக்கிறார். மவுனமாக இருப்பதனாலேயே அது அதிக பலனளிப்பதாகவும் உள்ளது.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
9. அகிம்சையுடன் இணைந்த சத்தியாக்கிரகத்தின் மூலம் உலகையே உங்களுக்கு அடிபணியாகி செய்யலாம்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
10. மனித குலத்தை அன்பு என்ற விதிதான் ஆள்கிறது.
வெறுப்பு போன்ற வன்முறை போன்றவை நம்மை ஆண்டால், நீண்டகாலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்களாக மாறிவிடுகிறோம்.
அதாவது, காட்டுமிராண்டிகளாகி விடுகிறோம்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது!ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.