‘உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அதுதான் அன்பே காதல் காதல்’ என நினைத்தேன் வந்தாய் பட கிளைமாக்ஸ் காட்சியில் ரம்பாவும்,
விஜய்யும் கண்ணீரை மறைத்துக்கொண்டு பாடும் இந்த பாடல் காதலின் பிரிவை, வலியை, வேதனையை மற்றவர்களுக்கு உணர்த்துவதாய்
அமைந்திருக்கும். இதேபோல எக்கசக்கமான பாடல்கள், படங்கள் தமிழ் சினிமாவில் வந்துகொண்டே இருந்தாலும் இன்றும் கூட, காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் கணிசமான படங்கள் வெற்றிப்படங்களாக அமைகின்றன.
இன்னும் சரியாக பத்து நாட்கள் இருக்கின்றன காதலர் தினத்திற்கு (Valentines Day). அது தெரிந்தாலும் எப்போடா வரும் என காதலர்கள் (Lovers) ஏங்கிக் காத்துக் கொண்டிருப்பார்கள். காதலர்களுக்கு அது நல்ல நாளாக அமையும். எங்கே போகலாம் என்ன செய்யலாம் என ஏற்கனவே திட்டம் போட்டு வைத்திருப்பார்கள். ஆனால் காதலை இன்னும் சொல்லாதவர்களுக்கு, சொல்லிக்கொள்ளாமலே காதலிப்பவர்களுக்கு எப்போடா அந்த நாள் வரும் என ஏகப்பட்ட திட்டங்கள் தீட்டி வைத்திருப்பார்கள்.
‘காதலர் தினத்த’ ஒருநாள் மட்டுமில்ல…ஒருவாரம் கொண்டாடலாம்.காதலர் தினம்(Valentines Day) என்றால் அன்று ஒருநாள் மட்டுமே கொண்டாடக் கூடியதல்ல, அதற்கு முன்னால் வரும் 7 நாட்களுமே காதலர்களுக்கு கொண்டாட்ட தினம் தான். ரோஸ் தினம்(Rose day), காதலை சொல்லும் தினம், சாக்லேட் தினம்(Chocolate Day) என்று நீங்கள் கொண்டாடிக் களிக்க ஒரு வாரம் இருக்கிறது. அதனால் என்னென்ன நாட்களில் எதை செய்ய வேண்டும்? என தெரிந்து கொண்டு உங்கள் காதலன்/காதலியை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துங்கள். காதலர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் காதலர் தின(Valentines Day) வாழ்த்துக்கள்!
பிப்ரவரி 7-ரோஸ் தினம்(Rose Day)
வாரத்தின் முதல்நாளை ரொமாண்டிக்காக தொடங்க வேண்டும் என்பதற்காக ரோஸ் தினம்(Rose Day) கொண்டாடப்படுகிறது. உங்கள் காதலனுக்கோ
அல்லது காதலிக்கோ சிவப்பு நிற ரோஜாவை பரிசளித்து அவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடியுங்கள். ஒரு ரோஜா தான் குடுக்கணுமானு கேட்காதீங்க. ஒரு ரோஜாக்கொத்தையே பரிசாக அளித்தாலும் சந்தோஷம் தான்.
பிப்ரவரி-8 காதலை சொல்லும் நாள்
இது முக்கியமான நாள். யாரெல்லாம் உங்கள் காதலை சொல்ல தயங்கிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்கள் தயங்காமல் இந்த நாளில் உங்கள் காதலை
சொல்லலாம். உங்க ஆளுக்கு புடிச்ச மாதிரி ஒரு இடத்துக்கு கூட்டிப்போய் உங்கள் மனதில் இருக்கும் காதலை ரொமாண்டிக் ஆக சொல்லுங்கள்.
பிப்ரவரி 9-சாக்லேட் தினம்(Chocolate Day)
இன்று உங்கள் காதலன்/காதலிக்கு சாக்லேட் வாங்கி பரிசளிக்கலாம். சாக்லேட் ஹார்மோன்களை தட்டி எழுப்பும், காதலை அதிகரிக்க செய்யும்
என்பதால் சாக்லேட் தினம் (Chocolate Day)கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 10-டெடி(Teddy) தினம்
பெண்களுக்கு எப்போதுமே டெடி(Teddy) பியர் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் உங்கள் காதலிக்கு இன்று டெடியை(Teddy) வாங்கிக்கொடுத்து
அசத்துங்கள். ஒரு ஆளுயர டெடியை வாங்கிக் கொடுத்தீர்கள் என்றால் அது உங்களை அவருக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். அதோடு
உங்களுக்கும் சிலபல பரிசுகள் கிடைக்கலாம்.
பிப்ரவரி 11 – சத்திய வாக்கு அளிக்கும் தினம்
நீங்கள் காதலில் எந்த அளவிற்கு உண்மையாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் நாள். காதல் பொதுவாக நம்பிக்கையின் அடிப்படையில் தொடர்வது. அதனை இன்னும் உறுதியாக்க சிறந்த வாய்ப்பு இந்த நாள்தான். இந்த நாளில் உங்கள் காதலன்/காதலிக்கு உங்கள் காதல் குறித்த சத்திய வாக்கினை பகிர்ந்து கொள்ளுங்கள்.
பிப்ரவரி 12-முத்த தினம்
முத்த நாள் என்றதும் சின்னபிள்ளை தனமாக குதித்துக்கொண்டு ஓடாதீர்கள்.முதலில் அன்பை வெளிப்படுத்தும் விதமாக நெற்றியில் முத்தமிட்டு ஐ லவ் யூ எனச் சொல்லுங்கள். பின் கைகளைப் பிடித்து முத்தம் கொடுத்து அவரை காதலிப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறீர்கள், அவர் உங்கள் வாழ்க்கைத் துணையாகக் கிடைத்ததில் நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி என கூறுங்கள். அதன்பிறகு எங்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்பது உங்கள் இருவரது விருப்பம்.
பிப்ரவரி 13-கட்டியணைத்தல் தினம்
இந்த நாளில் உங்கள் காதலியை கட்டியணைத்து அவரை பாதுகாப்பாக உணர செய்யுங்கள். இதனால் நீங்கள் எப்போதும் உங்கள் காதலியுடன் உடன்
இருப்பீர்கள் என்ற எண்ணத்தை இது உருவாக்கும். இதன் மூலம் இருவரும் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
பிப்ரவரி 14-காதலர் தினம்(Valentines Day)
ஒரு வாரகாலமாக நீங்கள் காத்துக் கொண்டிருந்த நாள் இதுதான். இன்று உங்கள் காதலை உங்கள் காதலன்/காதலியிடம் சொல்லி அவர்களை
மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துங்கள்.அவர்களுக்குப் பிடித்தமான பொருட்களை பரிசாக அளியுங்கள். இந்த நாளை நினைத்தால் அவருக்கு மகிழ்ச்சி மட்டுமே
ஞாபகத்திற்கு வரவேண்டும். அந்தளவு நீங்கள் அவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இருவரும் இணைந்து மகிழ்ச்சியாக காதலர்
தினத்தைக்(Valentines Day) கொண்டாடுவது போல வாழ்விலும் இணைந்து திருமண நாளைக் கொண்டாட வேண்டும் என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.