நல்லவர்கள் 'தீயவர்கள்' கண்டுகொண்டு.. கன்னி யாரும் 'காதல்' செய்வதில்லை!

நல்லவர்கள் 'தீயவர்கள்' கண்டுகொண்டு.. கன்னி யாரும் 'காதல்' செய்வதில்லை!

நீங்கள் யாரையாவது காதலித்தால் அவர்கள் தான் உங்கள் உலகமாக இருப்பார்கள். காதலிக்கும் காலத்தில் அவர்கள் செய்யும் தவறுகள் எதுவும்
உங்கள் கண்களுக்குத் தெரியாது. அவர்கள் இல்லாமல் ஒருநாளை உங்களால் கற்பனை கூட செய்ய முடியாது. ஒருவேளை அவர்களை நீங்கள்
இழந்துவிட்டால் அல்லது இழக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் அதுதான் உங்கள் வாழ்வின் மிகப்பெரிய கொடுங்கனவாக இருக்கும்.ஆனால் பிரேக்கப் (Break Up) என்பது வாழ்வின் ஒரு பகுதி தான் என்பதை மனதில் கொள்ளுங்கள். சிலர் காதலை(Love) விட்டு விலகி இருக்கின்றனர்.
மறுபுறம் அது தங்கள் வாழ்வு முழுவதும் ஊடுருவி இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். பெரும்பாலான காதல்கள் ஏன் பிரேக்கப்பில்(Break Up)
முடிகின்றன என்பதற்கான காரணங்களை(Reasons) இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.


இவற்றைப் படித்து இதுபோல தவறுகள் உங்கள் காதல்(Love) வாழ்க்கையில் இருந்தால் அவற்றை மாற்றிக்கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் காதல்
வாழ்க்கை ஏற்கனவே பிரேக்கப்பில்(Break Up) முடிந்திருந்தால், இதனைப் படித்து இதுபோன்ற விஷயங்கள் உங்கள் வாழ்வில் மீண்டும் நடைபெறாமல்
பார்த்துக் கொள்ளுங்கள்.


தொடர்பு


நீங்களும் உங்கள் காதலரும் மற்றவர் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை ஒருவருக்கொருவர் உணராமல் இருந்தால் உங்கள் காதல்(Love) வாழ்வு
விரைவில் முடிவுக்கு வரும். ஏனெனில் தொடர்பு இல்லாத எந்தவொரு விஷயமும் விரைவில் வீழ்ச்சியடையும் என்பதே எதார்த்தம்.


நம்பிக்கை


காதலிக்கும்போது உங்கள் காதலனோ/காதலியோ உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது அல்லது நீங்கள் சொல்வதை அதற்கு நேர்மாறாக
நம்புவது நல்லதல்ல. இது போன்ற காதல்(Love) விரைவில் உடைந்து தான் போகும்.துரோகம்


நீங்கள் உங்கள் துணையை ஏமாற்றுவது மன்னிக்க முடியாத ஒரு குற்றமாகும். இது ஒரு குற்றமல்ல ஒருவகையில் இந்த காதல்(Love) உங்களுக்கு ஒரு சாய்ஸ் போன்றது தான். உங்கள் காதல் வாழ்வில் இதுபோல இருக்கும் பட்சத்தில் நீங்கள் அதுகுறித்து சிந்திப்பது நல்லது.


அதிக எதிர்பார்ப்பு


எதிர்பார்ப்புகள் எப்போதும் ஏமாற்றங்களுக்கே வழிவகுக்கும். பெரும்பாலான ஜோடிகள் தங்கள் துணை தங்களுக்கு செய்வதை விட அல்லது
வழங்குவதை விட அதிகம் எதிர்பார்க்கின்றனர். விளைவு அவர்களின் காதல் வாழ்வு விரைவில் வீழ்ந்து விடும்.சலிப்பு


அசட்டைப்போக்கு ஒரு உறவு வீழப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும். நீங்கள் அல்லது உங்கள் துணை உங்கள் உறவில் ஒரு சலிப்பை
உணர்ந்தால் அல்லது உங்கள் உறவு(Relationship) ஒரே மாதிரி செல்கிறது என நினைத்தால் அது உறவு முடிவதற்கான வழியாகும்.


தவறாகப் புரிந்து கொள்ளுதல்


நீங்கள் சொல்லும் ஒரு விஷயம் உங்கள் துணையால் தவறாக புரிந்து கொள்ளப்படும்போது அல்லது சரியாக உங்கள் இருவருக்கும் தகவல் தொடர்பு இல்லாதபோது அங்கு பிரச்சினைகள் உருவெடுக்கிறது. இதுவும் உறவுக்கு(Relationship) முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழியாகும். இந்த நேரத்தில் நீங்கள் சரியாக பேசி பிரிந்து செல்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்வது நல்லது.தவறான பழக்கங்கள்


தவறான பழக்க வழக்கங்கள் இதில் முதன்மை வகிப்பதாக கூறப்படுகிறது. சுகாதாரத்தைப் பற்றி கவலைப்படாமல் இருத்தல், போதை பழக்க
வழக்கங்களில் இருந்து வெளியேற மறுப்பது போன்றவை இருந்தால் கண்டிப்பாக காதலை விட்டுவிடுவது நல்லது.


வாதங்கள்


வாதங்கள் தவிர்க்க முடியாதவை. இரண்டு பேர் இருக்கும்போது இருவருக்கும் ஒரே மாதிரியான கருத்துக்கள் இருக்காது, இதனால் அடிக்கடி வாதங்கள் உருவாகக்கூடும். ஆனால் தீர்க்க முடியாமல் போகும் இடைவிடாத சண்டைகள் ஒரு உறவை(Relationship) கண்டிப்பாகக் கொன்றுவிடும்.


தேவையற்ற பொறாமை


தேவையற்ற பொறாமை அல்லது விளக்கி சொல்ல முடியாத பாதுகாப்பற்ற தன்மை ஆகியவை பெரும்பாலான பிரச்சினைகளுக்கு மூல காரணமாக
விளங்குகின்றன. மேலும் இது உறவை ட்ரிக்கர் செய்து பிரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.பொய் சொல்வது


உங்கள் துணையிடம் பொய் சொல்ல அல்லது மறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், நீங்கள் சொல்லும் உங்கள் தரப்பு விளக்கத்தை அவர் புரிந்து
கொள்ள மாட்டார் என நீங்கள் நினைத்தால் உங்கள் உறவு ஏற்கனவே வீழ்ந்து விட்டது என நினைத்துக்கொள்ளுங்கள்.


மோசமான செக்ஸ்(Sex)


படுக்கையில் ஏற்படும் இணக்கம் ஒரு வெற்றிகரமான உறவுக்கு மூலகாரணமாகத் திகழும். ஆனால் படுக்கையில் நீங்கள் உங்கள் துணையுடன் மோசமான செக்ஸில்(Sex) ஈடுபடும்போது பிரேக்கப்புக்கு அது ஒரு காரணமாகிறது.


கட்டுப்பாடு


உங்கள் துணை கட்டளையிடும் தன்மை கொண்டிருந்தால் அல்லது உறவில் அவரது கையே மேலோங்கி இருக்க வேண்டும், உங்களை ஆதிக்கம்
செலுத்த வேண்டும் என நினைத்தால் அந்த உறவில்(Relationship) இருந்து விடுபட வேண்டும் என நீங்கள் விரும்புவீர்கள்.பணம்


உங்களில் ஒருவர் ஊதாரித்தனமாக செலவு செய்து, மற்றவர் பணத்தின் மதிப்பை தெரிந்தவராக இருக்கும்போது அங்கு சிக்கல்கள் எழக்கூடும். பணம்
எந்தவொரு உறவிலும் முதன்மைப்பங்கு வகிக்கிறது. இருவரும் ஒரே வழியில் செல்ல முடியாதபோது அல்லது ஒருவருக்கொருவர் அட்ஜஸ்ட்
செய்துகொள்ள முடியாத போது அது பிரேக்கப்பில் தான் முடியும்.


தனக்கு மட்டுமே சொந்தம்


எதிர்பாலின நபருடன் நீங்கள் நட்பாக இருப்பது குறித்து உங்கள் துணை எப்போதும் அச்சப்பட்டுக்கொண்டே இருந்தால் அது இறுதியில்
பிரேக்கப்பிற்கு(Break Up) தான் வழிவகுக்கும். உங்கள் துணையைப் பாதுகாப்பதற்கும் அவர் உங்களுக்கு மட்டுமே சொந்தம் என நினைப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.


நீயே உலகம்


சிலருக்கு அவர்கள் துணையே உலகமாக இருக்கலாம். வேறு சிலருக்கு அவர்கள் துணை அவர்கள் உலகின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
முன்னுரிமைகள் வித்தியாசமாக இருக்கும் பட்சத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்து அதனாலும் உறவில்(Relationship) பிரிவு ஏற்படக்கூடும்.இடைவிடாத நச்சரிப்பு


தொடர்ந்து புகார் சொல்வது, திட்டுவது, விமர்சனம் செய்வது மற்றும் வக்கிரமான கருத்துக்கள் ஆகியவை இருக்கும் பட்சத்தில் உறவில்
ஒருவரையொருவர் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வது முடியாது. இது ஒருவர்மீது மற்றவர் வைத்திருக்கும் பிணைப்பை முடக்குவதுடன் உறவையும் முறித்து விடக்கூடும்.


இடைவெளி நல்லது


நீங்கள் உறவுக்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கை வாழவேண்டும், சிலசமயம் உங்களுக்கு கொஞ்சம் இடைவெளி தேவைப்படலாம். அதில்லாமல் உங்கள்
துணையை மூச்சுமுட்ட செய்வது அல்லது அளவுக்கு அதிகமாக தொங்க விடுவது போன்றவை உறவை நிரந்தரமாக மூடிவிடும். நீங்கள் உங்கள்
துணைக்கு தேவையான நேரத்தை கொடுக்கவில்லை என்றால் அவர்கள் இந்த உறவில் இருந்து வெளியேறக்கூடும்.


அவமானம்


உங்கள் நண்பர்கள் முன்னிலையில் உங்கள் துணையை அவமானப்படுத்துவது உங்களை 'கூல்' ஆகக்காட்டாது. அதற்கு மாறாக உங்கள் துணையை நீங்கள் இழக்க நேரிடும். யாரையும் மதிக்காத ஒருவரது உறவு கடுமையாக பாதிக்கப்படும்.மற்றவருடன் ஒப்பிடுவது


இங்கு யாரும் பெர்பெக்ட் ஆனவர்கள் கிடையாது. நீங்கள் உங்கள் துணையை காதலித்தால் அவரை அவரது குறைகளுடன் சேர்த்து ஏற்றுக்கொள்ள
வேண்டும். அதற்கு மாறாக மற்றவர்களுடன் ஒப்பீடு செய்துகொண்டே இருப்பது உங்கள் துணையின் சுயமதிப்பைக் குறைக்கும். மேலும் இது உங்கள் உறவுக்கும் அது முற்றுப்புள்ளி வைக்கக்கூடும்.துஷ்பிரயோகம்


உடல் மற்றும் மனரீதியான துஷ்பிரயோகம் ஆகிய இரண்டுமே உங்கள் துணையை கடுமையாகப் பாதிக்கக்கூடும். இதுபோன்ற சூழல்கள் ஏற்பட்டால்
உங்கள் உறவு நீண்ட காலத்திற்குத் தொடர வழியில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இதுபோன்ற அறிகுறிகள் உங்கள் காதல் வாழ்க்கையில் இருந்தால் முடிந்தவரை அவற்றை மாற்றிக்கொண்டு உங்கள் துணையுடன் மணவாழ்வில் இணைந்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.நல்லவர்கள் 'தீயவர்கள்' கண்டுகொண்டு.. கன்னி யாரும் 'காதல்' செய்வதில்லை. அதனை விடுத்து நான் இப்படித்தான் இருப்பேன் நான் பிடித்த 'முயலுக்கு மூன்று கால்'தான் என பிடிவாதமாக இருந்தால் நீங்கள் கடைசிவரை சிங்கிள் ஆகத்தான் இருக்க நேரிடும். எது உங்களுக்கு வசதி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஏனெனில் இது உங்களது வாழ்க்கை...


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.