உங்க 'செக்ஸ்' வாழ்க்கைல மகிழ்ச்சி பொங்கணுமா? 'இத' மட்டும் பாலோ பண்ணுங்க!

உங்க 'செக்ஸ்' வாழ்க்கைல மகிழ்ச்சி பொங்கணுமா? 'இத' மட்டும் பாலோ பண்ணுங்க!

'கடலின் ஆழத்தை விட பெண்களின் நெஞ்சம் ரொம்ப ஆழமானது' என காலம் காலமாக சினிமாக்களிலும்,சமுதாயத்திலும் சொல்லப்பட்டு வருகிறது.இதனை வலியுறுத்துவது போல சினிமா பாடல்களும் அது தொடர்பான நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. காலம் காலமாக ஆணுக்கு கீழே பெண் என்று இந்த சமுதாயம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அது உண்மைதான் என நம்புவதற்கு குடும்பத்திலும், சமூகத்திலும் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், அவமதிப்புகளும் நடைபெற்று வருகின்றன.இதனால் புதிதாக திருமணமாகும் ஒரு ஆண்(Men) தனக்கு வரப்போகும் மனைவி(Wife) தன்னுடைய தேவைகளைக் கவனித்துக் கொண்டு, வீட்டிற்கு அடங்கி 'நல்ல' பெண்ணாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். சமையல்,குழந்தை வளர்ப்பு, பெற்றோர்களைக் கவனித்துக் கொள்ளுதல், துணி துவைத்தல், வீட்டு வேலைகள் செய்தல் என ஒரு வேலைக்காரி போல இருக்க வேண்டும். வேலை செய்து சம்பாதித்தால் அது ஒரு கூடுதல் தகுதி என்பது தான் பெரும்பாலான ஆண்களின் எண்ணமாக உள்ளது.


இது தொடர்கதையாகும் பட்சத்தில் ஆணுக்கு நிகராக படித்து வேலைக்கு சென்று அவனைவிட எல்லா விதத்திலும் சரிசமமாக இருக்கும் நாம் நமது
வாழ்க்கையை வாழவே இல்லையே என்ற ஏக்கம் பெண்ணுக்குள் எழ ஆரம்பிக்கிறது. விளைவு இன்று விவாகாரத்துகளும், உறவை மீறிய தொடர்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனை விடுத்து ஒரு மகிழ்ச்சியான(Joy),நிறைவான இல்வாழ்க்கை எப்படி வாழ்வது என்பதை இங்கே பார்க்கலாம். குறிப்பாக பெண்கள் தங்கள் கணவனிடம் எதிர்பார்ப்பது என்ன? என்பதனை இங்கே வாசித்து தெரிந்து கொண்டு வாழும் வாழ்வை மகிழ்வுடன் வாழ்ந்திடுங்கள்.


நல்ல தோழனாகஉங்கள் மனைவியிடம்(Wife) ஒரு நல்ல தோழனாக மனம் விட்டு உரையாடுங்கள். உனக்கு எல்லாமுமாக நான் இருக்கிறேன், என்பதை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரிடம் செயல்கள் வழியாக வெளிப்படுத்துங்கள். தாம்பத்திய வாழ்க்கையைப் பொறுத்தவரை சின்னச்சின்ன விஷயங்கள் கூட பெரிய பூகம்பங்களை ஏற்படுத்தக்கூடும் எனவே முடிந்தவரை அவரிடம் எதையும் மறைக்காதீர்கள்.


பகிர்ந்து கொள்ளுங்கள்பகிர்ந்து கொள்வதென்பது படுக்கையோடு மட்டும் மட்டும் நின்று விடாமல் உங்கள் மனைவியின் வேலைகளிலும் உதவி செய்யுங்கள். காய் நறுக்குவது, வீடு சுத்தம் செய்தல், துணி துவைத்தல் என அனைத்து வேலைகளையும் உங்கள் மனைவியுடன்(Wife) நீங்கள் பகிர்ந்து கொண்டால் அங்கு அலுப்பு குறைந்து ஆனந்தம்(Joy) மேலோங்கும். வேலைகளை பகிர்ந்து கொள்வதால் நேரம் மிச்சப்படுவதோடு, இருவருக்கு மத்தியிலும் ஒரு இணக்கமும் உண்டாகக்கூடும்.


கேளிக்கை,கொண்டாட்டம்நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகில் இருக்கும் பூங்கா, கோயில், கடற்கரை என மனைவியுடன்(Wife) சென்று வாருங்கள். இது உங்கள் பணத்தை மிச்சப்படுத்தி மகிழ்ச்சியை(Joy) அதிகரிக்கச் செய்திடும். மாதம் ஒரு சினிமா, ஒரு ஹோட்டல் என இருவரும் சென்று வாருங்கள். சினிமா,ஹோட்டலுக்கு செல்வதை விட அவருக்கு என்ன மாதிரியான உணவு பிடிக்கும் எந்த நடிகரைப் பிடிக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு அழைத்துச் செல்வது நல்லது. உங்களுக்கு விஜய் பிடித்திருந்தால் அவருக்கு அஜித் பிடிக்கலாம், உங்களுக்கு பிரியாணி பிடித்தால் அவருக்கு செட்டிநாட்டு உணவு வகைகள் பிடிக்கலாம். அதனால் இதுபோன்ற விஷயங்களில் அவரிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யுங்கள். நீங்கள் இப்படி செய்யும்போது அவரும் உங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்திட தானாகவே முன்வருவார்.


மரியாதைஉங்கள் துணைக்கு மரியாதை கொடுங்கள். மரியாதை என்றால் வாங்க,போங்க என அழைப்பதல்ல. பிறர் முன்னால் அவரை தாழ்த்திப் பேசுவது, பிறருடன் ஒப்பிட்டு பேசுவது போன்ற விஷயங்களை செய்யாதீர்கள். நீங்கள் உங்கள் துணைக்கு மரியாதை அளிக்கும்போது அதனைப் பார்த்து வளரும் உங்கள் குழந்தைகளும் அவருக்கு உரிய மரியாதையை அளிப்பார்கள். எந்த இடத்திலும் உங்கள் துணையை விட்டுக்கொடுக்காதீர்கள். இது உங்கள் மீதான காதலையும்,நேசத்தையும் அதிகப்படுத்தும்.


தூண்டுகோலாகஎழுதுவது,பாடுவது, தலைமைப்பண்பு, சமையல் என உங்கள் மனைவிக்கு(Wife)எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அதில் மேலும் முன்னேற அவருக்கு ஒரு தூண்டுகோலாக இருங்கள். உங்கள் மனைவிக்கு(Wife)தெரியாத விஷயங்களை கற்றுக்கொடுங்கள். இதனால் உங்களுக்கு பெரிதாக எந்த நட்டமும் வந்துவிடப் போவதில்லை. மாறாக உங்கள் இல்வாழ்க்கையில் அன்பு பெருக்கெடுத்து ஓடும்.


செக்ஸ்(Sex)இல்வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்கள் தாம்பத்தியத்தை செக்ஸ்(Sex) மற்றும் குழந்தைகள் தாங்கிப்பிடிக்கலாம். ஆனால் வாழும் காலம் முழுமையும் துணையின் மீதான உங்கள் அன்பும்,அக்கறையுமே உங்கள் வாழ்க்கையை தாங்கிப்பிடிக்கும் தூண்களாக அமையும். இளமை இருக்குவரை இஷ்டத்திற்கு ஆடிவிட்டு முதுமையில் துணையின் அன்பை,அக்கறையை எதிர்பார்த்து நிற்பது கதைகளுக்கும், சினிமாக்களுக்கும் வேண்டுமானால் பொருந்தக்கூடும். நிஜவாழ்க்கைக்கு அல்ல என்பதை உணர்வது உங்களுக்கும் நல்லது உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.