காதலர் தினத்தன்று நீங்கள் எந்த கலரில் உடை அணிய வேண்டும் தெரியுமா? - Valentine's Day Dress Code

காதலர் தினத்தன்று நீங்கள் எந்த கலரில் உடை அணிய வேண்டும் தெரியுமா? - Valentine's Day Dress Code

இரு மலர்கள் ஒன்றினைந்தால் அழகான வாசனை வரும். அது போல இரு மனங்கள் ஒன்றினையும் போது அழகான வாழ்க்கை ஆரம்பமாகும். அந்த இரு மனங்கள் தங்களுக்கு பிடித்த நபருடன் ஒன்றிணையும் நாள் தான் காதலர் தினம்(valentines day). இந்த தினத்தின் சிறப்பை பொதுவாக நாம் சொல்ல வேண்டியது இல்லை. அனைவருக்கும் நன்றாக தெரிந்த ஒன்றே. இருப்பினும் காதலர் தினத்தில் எந்தமாதிரியான என்ன கலரில் உடையணிய வேண்டும் என்பது தெரியுமா? அதன் முழு விபரத்தை இங்கே காணலாம்.


இந்த காதலர் தினத்தன்று அணிய ஆடைகள் (Dresses To Wear This Valentines Day)


valentines-day-dress-code-1


பச்சை நிற உடை- எனக்கு விருப்பம் உங்களிற்காகக் காத்திருக்கிறேன் (Stylish Green )


பச்சையை விரும்பும் பெண்களின், ஆண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள். ஆனால் இந்த நிறத்தை விரும்பும் பெண்களிடம் காதல் உணர்வுகள் அதிகம் இருக்கும். காதலர்ரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள(valentines day) துடிப்பார்கள். முத்த மழையில் குளிப்பாட்டி விடுவார்கள்.


valentines-day-dress-code-2


ரோஸ் கலர் உடை- இப்பதான் காதலை ஏற்றேன் (Rose Colour Style)


ரோஸ் நிறத்தை விரும்புபவர்கள் கணக்கற்ற காதல் கனவுகள் கொ ண்டவர்களாக இருப்பார்கள். தினமும் இரண்டு மூன்று பேருக்காவது அவர்கள் ரூட் விடுவார்களாம். காதல் விஷயங்களை படிப்பதிலும், அதை செயல்படுத்திப்பார்த்து உண்மையா, பொய்யா என்று கண்டறிவதிலும் மெனக் கெடுவார்கள். தங்கள் காதல் இணையை ரொம்ப வும் புகழ்ந்து, கனவு காணவைத்து தான் நினைப்பதை சாதிக்க முயற் சிப்பார்கள். ரோஸ் நிறத்தை விரும்பும் பெண்கள் தனி த்துவம் பெற்ற வர்களாக இருப்பார்கள். ஆண்களை எளிதில் நம்பி ஏமாந்துவிட மாட்டார்கள்.


valentines-day-dress-code-3


நீலநிற உடை- இன்னும் ப்ரீயாக இருக்கிறேன் (Pretty In Blue Dress)


நீல நிறத்தை விரும்பும் பெண்கள் நாலைந்து ஆண்களை ஆராய்ந்து, இறுதியில் அதில் ஒருவரை தேர்வு செய்து காதலிப்பார்கள். `தாம்பத்ய’ விஷயத்திலும் இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். இந்த நிறத்தை விரும்பு கிறவர்களிடம் காதல் உணர்வு அதிகமிருக்கும். நீல நிறத்திற்குரிய ஆண்களிடமும் இதே இயல்புகள் இருக்கும்.


valentines-day-dress-code-4


ஞ்சள் நிற உடை- காதல் தோல்வி (Elegant Yellow)


மஞ்சள் நிறப் பிரியர்களின் காதல் ஆசைகள் அளவுக்கு மீறியதாக இருக்கும். அத்தனை ஆசைகளையும் இவர்களது காதல்(valentines day) இணையால் நிறைவேற்ற முடியாது. அதனால் இந்த நிற மனிதர்களின் காதலுக்கு ஜோடி கிடைப்பது கஷ்டம். காதலுக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செல வழிக்க யோசிப்பார்கள். இவர்கள் அறிவாளியாகவும், கொள்கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இருப்பதால் கல்யாண வாழ்க்கை என்று வந்துவிட்டால், தனது ஜோடியை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள்.


valentines-day-dress-code-5


கறுப்புநிற உடை – காதல் நிராகரிக்கப்பட்டது (Classic Black)


கறுப்பு நிறத்தை விரும்புபவர்கள் யாரிடமும் மனம்விட்டுப் பேச மாட்டார்கள். இறுக்கமான மனிதர்களாக இருப்பதால் இவர்கள் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள்ளாமல் நழுவிச்சென்றுவிடும். காதல் இவர்களுக்கு பெரும்பாலும் கைகூடாது. மன அழுத்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. அதை தீர்க்க சரியான மருந்து தாம்பத்ய உறவு கொள்வதுதான் என்று நம்புவதால் விரைவில் திருமணம் முடிக்க ஆசைப் படுவார்கள்.


valentines-day-dress-code-6


ஆரஞ்சு நிற உடை- நிச்சயதார்த்தம் செய்யரெடி (Sunny In Orange)


ஆரஞ்சு வர்ணத்தை விரும்புபவர் கள்காதல் என்றாலும், கல்யாணம் என்றாலும் தனது எதிர்காலத்திற்கு அதன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போடும் சுயநல வாதிகள். கல்யாணத்திற்கு பெண் பார்த்தாலும் அவளிடம் தனியாக ப்பேசி தன் எதிர்பார்ப்புகளை எல்லாம் `டன்` கணக்கில் கொட்டுவார்கள். அதைக் கேட்டு அதிர்ந்து போகும் பெண், `அவரோடு தன்னால் வாழ்க்கை நடத்த முடியாது` என்று கூறிவிடுவாள். அதனால் இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு காதல் மட்டுமல்ல, கல்யாணமும் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும்.


valentines-day-dress-code-7


சிவப்பு நிற உடை- என்னை விட்டிடுங்க (Hot Red)


சிவப்பு வர்ண பார்டிகளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். காதல் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. யாராவது காதல் தூது விட்டாலும் தத்துவம் பேசி விரட்டிவிடுவார்கள். அதற்கு போய் யாராவது நேரத்தை செலவிடுவார்களா என்று தத்துவம் பேசுவார்கள். இந்த நிறத்தை விரும் பும் ஆண்களை, பெண்கள் சாமியார் என்பார்கள்.


valentines-day-dress-code-8


கிரேகலர் உடை- காதலில் இன்ரெஸ்ட் இல்லை (Grey Dress)


கிரே நிறத்தை விரும்புபவர்கள் `காதலாவது கத்தரிக்காயாவது..’ என்று எப்போதும் காதலுக்கு எதிராகவே பேசுவார்கள். காதலிப் பவர்களை தூற் றவும் செய்வார்கள். இதனை விரும்பும் ஆண்களைப் பார்த்தாலே பெண்கள் நாசூக்காக நழுவிப்போய் விடுவார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.


valentines-day-dress-code-10


வெள்ளைநிற உடை- ஏற்கனவே காதலிக்கிறேன் (White Is Love)


வெள்ளை வர்ணத்தை விரும்புபவர் கள்காதல் உணர்வில் செம ஸ்பீடா இருப்பார்களாம். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய கற்பனையில் கண்டதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் வெள்ளை என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப் பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இவர்கள் ஆசைப் பட்டதை அடையாமல் விடமாட்டார்கள்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo