logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
ஜெயலலிதாவாக மாறிய பிரபல நடிகை கங்கனா ரணாவத்.. சம்பளம் 24 கோடியாம்!

ஜெயலலிதாவாக மாறிய பிரபல நடிகை கங்கனா ரணாவத்.. சம்பளம் 24 கோடியாம்!

தமிழக முன்னாள் முதல்வர், இரும்புப் பெண்மணி ஜெயலலிதா(Jayalalithaa) அவர்கள் இறந்து 2 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. தனது கம்பீரத்தால், உறுதியான முடிவுகளால் இந்தியளவில் புகழ்பெற்று விளங்கியவர் ஜெயலலிதா(Jayalalithaa). அவர் இறந்த சில மாதங்களில் ஜெயலலிதாவின்(Jayalalithaa) வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படும் என பல்வேறு தரப்பினரும் அறிவித்தனர். இதில் தலைவா பட இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் ஒருவர்.

இந்தநிலையில் சொன்னதுபோலவே ஜெயலலிதா(Jayalalithaa) படம் குறித்த அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக ஏ.எல்.விஜய் வெளியிட்டு இருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்(Kangana Ranaut) மறைந்த ஜெயலலிதா(Jayalalithaa கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதுகுறித்து கங்கணாவின்(Kangana Ranaut) பிறந்த நாளான இன்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் கங்கனா ரணாவத் நடிப்பதற்கு 24 கோடி ரூாபாய் சம்பளம் பெற்றுள்ளார். 

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தில் நாயகனுடன் ஓடிப்பிடித்து கண்ணாமூச்சி விளையாடிய கங்கணா(Kangana Ranaut) இன்று பாலிவுட் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து இருக்கிறார். சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக இவரது படங்கள் அங்கு வசூலைக் குவிக்கின்றன. ‘தலைவி‘ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு ‘பாகுபலி’ கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணை கதாசிரியராக பணிபுரியவுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

ADVERTISEMENT

மதன் கார்க்கி ‘தலைவி’க்கு பாடல்கள் எழுத, விப்ரி மீடியா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகவுள்ளது.இதில் ஜெயலலிதாவாக நடிக்க தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உள்ள முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் இயக்குநர் விஜய்.

சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் மற்றும் கங்கணா ரணாவத்(Kangana Ranaut) மூவரில் ஒருவர் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாவார் என்று தகவல்கள் வெளியாகின.அதன்படி தற்போது கங்கணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அக்னி vs தேவி

பாபி சிம்ஹாவுக்கும் படங்களுக்கும் அப்படி என்னதான் பிரச்சினையோ தெரியவில்லை. அடுத்தடுத்து அவரது படங்கள் ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறது. இந்த முறை தனது படத்துக்கு தானே தடை கேட்ட நடிகர் என்னும் புகழும் அவருக்குக் கிடைத்துள்ளது. நடிகை மதுபாலா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் அக்னி vs தேவ் என்று அறிவிப்பு வெளியானபோது அனைவரும் இது ஒரு நல்ல திரில்லர் படமாக இருக்கும் என நினைத்தனர். தொடர்ந்து அக்னி vs தேவி என்று படத்தின் தலைப்பு மாறியது.

ADVERTISEMENT

கடைசியில் என்னவென்றால் இவர்கள் படமெடுத்த கதையை முழுதாக ஒரு புதிய படமாக எடுத்து விடலாம் போல. இப்படத்தில் வெறும் 5 நாட்கள் மட்டுமே நடித்து விட்டு நான் ஒதுங்கிக் கொண்டேன். ஆனால் என்னைப் பயன்படுத்தி விளம்பரம் செய்கிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகளுடன் கோர்ட் படியேறி, மீடியாவிடம் பேசி தனது நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார் பாபி சிம்ஹா. தன்னைப்போலவே மார்பிங், டூப் போட்டு படத்தை எடுத்து முடித்துவிட்டதாக தெரிவித்திருக்கும் பாபி சிம்ஹா, ”இந்தப் படத்துக்குத் தடை வாங்கியதற்கு அனைத்து ஆதாரங்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பியிருக்கேன். ஆனாலும், படத்தை வெளியிடுகிறார்கள் என்றால் அது நீதிமன்ற அவமதிப்புதான். இதற்குப் பின், ஏதோ பெரிய அரசியல் நடக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதையும் நான் சட்டப்படி சந்திக்கத் தயார்,’ என தெரிவித்துள்ளார்.

உறியடி 2

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ஸ்லோவாக மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்த படம், மாணவர்களைச் சுற்றி நடக்கும் அரசியலை எதார்த்தமாக சொன்ன படம் என்று சினிமா விரும்பிகளால் கொண்டாடாப்பட்ட படம் உறியடி. இப்படம் எடுக்க தான் பட்ட ரியல் கஷ்டங்களை தயாரிப்பாளர்+நடிகர் விஜயகுமார் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டிருந்தார்.இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்ற நிலையில் தன்னுடைய வீட்டை அடமானமாக வைத்து படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்தேன் என அவர் தெரிவித்ததைப் பார்த்து சினிமாவில் இவ்வளவு அரசியலா? என அனைவரும் கண்டிப்பாக நினைத்து இருப்பார்கள்.

ADVERTISEMENT

‘கடவுள் இருக்கான் குமாரு’ என்பது போல நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் ‘உறியடி’ படத்தின் 2-வது பாகத்தைத் தயாரிக்க முன்வந்தது. இந்தநிலையில் உறியடி 2 படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இன்று இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம்…

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

ADVERTISEMENT

 

23 Mar 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT