உங்களுக்குப் பிடித்த நடிகர்-நடிகைகளின் 'சைடு பிசினஸ்' விவரங்கள் உள்ளே!

உங்களுக்குப் பிடித்த நடிகர்-நடிகைகளின் 'சைடு பிசினஸ்' விவரங்கள் உள்ளே!

நடித்து சம்பாதிப்பதை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வதை நடிகர்(Hero)-நடிகைகள்(Heroines) வாடிக்கையாக வைத்துள்ளனர். சினிமாவில் ஏற்ற-இறக்கங்கள் என்பது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஒரு படம் ஓடாவிட்டால் கூட நடிகர்(Hero)-நடிகையின்(Heroines) மார்க்கெட் சற்றே சரிந்து டல்லடித்து விடும். இதனால் நடிப்பு தவிர்த்து சைடு பிசினஸ்களிலும் நடிகர்(Hero)-நடிகைகள்(Heroines) கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.


முன்பு ஒருசில நடிகர்(Hero)-நடிகைகள்(Heroines) மட்டுமே நடிப்பு தவிர்த்து சைடு பிசினஸ்களை நடத்தி வந்தனர். தற்போது கால ஓட்டத்தில் கிட்டத்தட்ட அனைவருமே சைடு பிசினஸ் ஒன்றினை சொந்தமாகத் தொடங்கி நடத்த ஆரம்பித்துள்ளனர்.இங்கே உங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகைகள் நடிப்பு தவிர்த்து வேறு என்னென்ன சைடு பிசினஸ்களை சொந்தமாக நடத்தி வருகின்றனர் என்பதைப் பார்க்கலாம்.


விஜயகாந்த்


நடிகரும், தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் ஸ்ரீ ஆண்டாள் அழகர் என்னும் பெயரில் என்ஜினியரிங் காலேஜ் ஒன்றினை நடத்தி வருகிறார்.


பிரசாந்த்


நடிகர் பிரசாந்த் தன்னுடைய பெயரிலேயே பிரசாந்த் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் என்னும் காம்ப்ளெக்ஸ் ஒன்றினை, சென்னையின் பிரபல பகுதிகளில் ஒன்றான தி.நகர் பகுதியில் நடத்தி வருகிறார்.


நெப்போலியன்


நடிகர் நெப்போலியன் ஜீவன் டெக்னாலஜிஸ் என்னும் பெயரில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.அமலாபால்- சஞ்சனா கல்ராணி


நடிகை அமலாபால் எம்ஆர் யோகா ஸ்டுடியோ என்னும் பெயரில் யோகா ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார். நடிகை சஞ்சனா கல்ராணி அக்ஷர் பவர் ஏரோபிக்ஸ் என்னும் பெயரில் ஏரோபிக்ஸ் ஸ்டுடியோ ஒன்றினை நடத்தி வருகிறார்.


சன்னி லியோன்


நடிகை சன்னி லியோன் ஸ்டார் ஸ்டரக் என்னும் பெயரில் லிப்ஸ்டிக் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.


ஏ.ஆர்.ரகுமான்


இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரகுமான் வொய்எம் என்னும் பெயரில் ஷூட்டிங் ஸ்டுடியோ ஒன்றினை நடத்தி வருகிறார்.


தமன்னா-காஜல் அகர்வால்


தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழும் நடிகை தமன்னா வொய்ட் அண்ட் கோல்டு என்னும் பெயரில் ஜுவல்லரி பிராண்ட் ஒன்றினை நடத்தி வருகிறார். இதேபோல ஸ்வீட் நடிகை காஜல் அகர்வால் மார்ஷல் ஜுவல்லரி என்னும் பெயரில் ஜுவல்லரி நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார்.ரஜினிகாந்த்


நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபம் என்னும் பெயரில் திருமண மண்டபம் ஒன்றினை நடத்தி வருகிறார்.


நிக்கி கல்ராணி


நடிகை நிக்கி கல்ராணி ஸ்மாலிஸ் என்னும் பெயரில் ரெஸ்டாரண்ட் ஒன்றினை சொந்தமாக நடத்தி வருகிறார்.


டாப்ஸி பன்னு


நடிகை டாப்ஸி பன்னு தி வெட்டிங் பேக்டரி என்னும் பெயரில் திருமண ஏற்பாடுகளை செய்து தரும் நிறுவனம் ஒன்றினை தனது தோழிகளுடன் இணைந்து நடத்தி வருகிறார்.நடிகர் விஜய்


தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் தி ஷோபா மேரேஜ் ஹால் என்னும் பெயரில் திருமண மண்டபம் ஒன்றினை சென்னை விருகம்பாக்கம் பகுதியில் நடத்தி வருகிறார்.


சிம்ரன்-ஆர்யா-சூரி-அனிருத்-ஆர்.கே.சுரேஷ்


இன்றளவும் இளைஞர்களின் மனங்கவர்ந்த நாயகியாக விளங்கும் நடிகை சிம்ரன் கோட்கா பை சிம்ரன் ரெஸ்டாரண்ட் என்னும் பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதேபோல நடிகர் ஆர்யா ஷீஷெல் ரெஸ்டாரண்டையும், நடிகர் சூரி அம்மன் ஹோட்டல் என்னும் பெயரில் ஹோட்டல் ஒன்றினையும் நடத்தி வருகிறார். இசையமைப்பாளர் அனிருத் தி சம்மர் ஹோட்டல் ஈட்டரி என்னும் பெயரில் ரெஸ்டாரண்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார். தயாரிப்பாளர்-நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஸ்டார் ரெசிடென்ஸி என்னும் பெயரில் ஹோட்டல் ஒன்றினை நடத்தி வருகிறார்.கருணாஸ்-பூர்ணிமா பாக்யராஜ்


இதேபோல நடிகர் கருணாஸ் ரெத்தின விலாஸ் என்னும் பெயரில் ஹோட்டல் ஒன்றினையும், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் பொட்டிக் ஷாப் ஒன்றினையும் நடத்தி வருகின்றனர்.POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும். பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.