நடுரோட்டில் செம 'சண்டை' போட்ட பிரபல நடிகர் .. 'வைரல்' வீடியோ உள்ளே!

நடுரோட்டில் செம 'சண்டை' போட்ட பிரபல நடிகர் .. 'வைரல்' வீடியோ உள்ளே!

நடிப்பு தவிர்த்து நிஜ வாழ்விலும் நடிகர்களை ரசிகர்கள் தங்கள் ரோல் மாடலாக ஏற்றுக்கொள்வதுண்டு. இதனால் சினிமா ஷூட்டிங் தவிர்த்து பொது இடங்களில் அவர்கள் என்ன செய்தாலும் அது வைரலாகி விடும். குடித்து விட்டு கார் ஓட்டுவது, போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்வது, பொது இடங்களில் சண்டை போடுவது போன்ற பிரச்சினைகளில் நடிகர்கள் மாட்டும்போது சமூக வலைதளங்களின் உதவியுடன் அது வைரலாகி விடுகிறது.


அந்த வகையில் மலையாள நடிகர் சுதீர்(Sudeer) கடந்த ஞாயிறன்று நடுரோட்டில் சண்டை போட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Subscribe to POPxoTV

சம்பவத்தன்று கேரள மாநிலம் ஆழப்புலா அருகேயுள்ள எஸ்.எல்புரம் பகுதியை சேர்ந்த பார் ஹோட்டலுக்கு வெளியே நடிகர் சுதீர்(Sudeer) தனது காரை நிறுத்தி இருந்திருக்கிறார். அப்போது அப்பகுதி வழியே சென்ற ஒருவர் சுதீரின் கார் கதவை இடித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபருடன் சுதீர் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து இந்த சண்டையில் சுதீர் மற்றும் அவரது நண்பர்கள் அடிவாங்கிய நபரின் நண்பர்கள் என பலரும் ஈடுபட இது மிகப்பெரிய சண்டையாக உருவெடுத்துள்ளது.இதனை வேடிக்கை பார்த்த பலரும் இந்த சண்டையை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட, தற்போது இணையத்தில் அது வேகமாகப் பரவி வருகிறது.சுதீரிடம் அடிவாங்கிய நபர்கள் காவல் நிலையத்தில் நடிகர் சுதீர் மீது புகார் கொடுக்க, காவல்துறை நடிகர் சுதீர்(Sudeer) உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.


இந்த நிலையில் இதுதொடர்பாக நடிகர் சுதீர்(Sudeer) வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,''பாடி பில்டர் ஆகும் ஆசையில் சில ஆண்டுகளுக்கு முன்பே தான் குடிப்பதை விட்டுவிட்டதாகவும், தனது சகோதரைக் காப்பாற்றும் எண்ணத்துடன் தான் சம்பவ இடத்துக்கு தான் சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த நபர்கள் சண்டையைத் துவக்கிவிட்டு தற்போது பழியைத் தன்மீது போடுவதாகவும் சுதீர்(Sudeer) மேற்கண்ட வீடியோவில் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.


மகனை அடித்து நொறுக்கிய நடிகர்


இதுவும் சண்டை தொடர்பான வீடியோ தான். ஆனால் நடுரோட்டில் அல்ல, ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற சண்டை. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிந்துபாத் படத்தில் நடித்து வருகிறார். இதில் நானும் ரவுடி தான் படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக நடித்திருந்த சூர்யா(விஜய் சேதுபதி மகன்) இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்தநிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் மகன் சூர்யாவை விஜய் சேதுபதி அடித்து நொறுக்குவது போல வீடியோ ஒன்றினை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. மகனை அடிஅடியென அடித்துத் துவைக்கும் விஜய் சேதுபதி கடைசியில் மகனுக்கு முத்தம் கொடுப்பது போல அந்த வீடியோ உள்ளது. விஜய் சேதுபதி, சூர்யா இருவரும் இப்படத்தில் திருடர்களாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வாசன் மூவீஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். விஜய் சேதுபதியின் பிறந்தநாளன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.


சிந்துபாத் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுவரும் நிலையில் படத்தினை கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Video Credit: Manorama News


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும். பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.