கடந்த சில நாட்களாக இங்கிலாந்தின் செய்தி தாள்களில் இந்த செய்திதான் பிரபலமாகி வருகிறது. இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா இங்கிலாந்து அரண்மனை வாரிசின் ஞான தாய் ஆகப் போகிறாரா என்பதுதான் இப்போது அங்கு பேசப்பட்டு வரும் செய்தி.
இங்கிலாந்து இளவரசி மேகன் மெர்கல் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். suits தொலைக்காட்சி தொடரில் பிரபலமடைந்த இவரை இங்கிலாந்து இளவரசர் ஹாரி காதலித்து மணந்து கொண்டார்.
இவர்கள் திருமணம் கடந்த மே மாதம் கோலாகலமாக நடைபெற்றது.
மேகன் மெர்கலுக்கு நெருங்கிய தோழியான பிரியங்கா சோப்ரா இவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டார். இப்போது மேகன் கர்ப்பமாக இருப்பதால் வரும் மே மாதம் இவருக்குக் குழந்தை பிறக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
இவர்களது குழந்தைக்கு மேலும் ஒரு ஞானப்பெற்றோரை நியமிக்க ஹாரியும் மேகனும் விரும்புதாகவும் அது பிரியங்கா நிக் தம்பதிதான் எனவும் கூறப்படுகிறது.
அரச குடும்பத்து வாரிசான இவர்களின் குழந்தைக்கு கிறிஸ்துவ முறைப்படி ஞானஸ்னானம் செய்து வைக்கப் போவதாகவும் அந்த சடங்கில் மேகனின் குழந்தைக்கு பிரியங்கா சோப்ராவை ஞானதாய் (Godmother ) ஆக நியமிக்கலாம் என்று கூறப்பட்டதாக அரண்மனை செய்தியாளர் ஆண்ட்ரூ போல்கெ தெரிவித்திருக்கிறார்.
பிரியங்கா சோப்ராவைத் தவிர மேகனின் ஸ்டைலிஸ்ட் ஜெஸ்ஸிகா வும் இந்தப் பட்டியலில் இருப்பதாகவும் இருவரில் யாரை முடிவு செய்வார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும் என்று அரண்மனை செய்தியாளர் ஆண்ட்ரூ போல்கெ கூறியிருக்கிறார்.
பிரியங்கா சோப்ரா தனது தோழியான மேகன் மெர்கலுக்கு எப்போதும் தனது ஆதரவைத் தெரிவித்தபடியேதான்இருந்திருக்கிறார்.
இவர்களது நட்பு குவான்டிகோ சீரியலில் ஒன்றாக நடிக்கும்போது ஆரம்பித்தது.
மேகன் மெர்கல் செய்யும் அத்தனை விஷயங்களையும் ஆதரித்து பதிவிடுபவர் பிரியங்கா. மேகனைப் பற்றிய கட்டுரை ஒன்றையும் டைம் நாளிதழில் எழுதி இருக்கிறார்.
தொலைக்காட்சி நிருபர் “ஹாரியின் கேர்ள் பிரண்ட்” என்று மேகனைக் குறிப்பிட்டபோது உடனடியாக பிரியங்கா அதனை தடுத்து “மேலும் மேகன் ஒரு நடிகை சூட்ஸ் அவரைப் பிரபலப்படுத்தியது” என்று மேகனை உயர்வாக பேச வைத்தது அவர்கள் நட்பில் முக்கியமானது.
மேகன் திருமணத்திற்கு பின் தனது முதல் குக்புக்கை வெளியிட்ட போதும் பிரியங்கா சோசியல் மீடியாவில் அதனைப் பாராட்டி பதிவு செய்திருந்தார்.
கரிபியன் தீவில் தங்களது தேனிலவை முடித்துக் கொண்ட பிரியங்கா நிக் ஜோடி தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ்சில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தூரங்கள் அதிகம் இருந்தாலும் பிரியங்கா மற்றும் மேகன் இடையேயான நட்பு எப்போதும் வளர்ந்தபடியே இருக்கிறது என்பதால் இங்கிலாந்து அரண்மனை வாரிசிற்கு நம் இந்திய நடிகை ஞானதாய் ஆவது நடந்தால் நமக்கும் பெருமைதான் இல்லையா?
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.