அமெரிக்க பாடகரை மணந்தார் பிரியங்கா சோப்ரா!

அமெரிக்க பாடகரை மணந்தார் பிரியங்கா  சோப்ரா!

 முன்னாள் மிஸ் இந்தியா மற்றும் இந்தியாவின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா, தனது காதலரான நிக் ஜோனாசை இன்று திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் இன்று  ஜோத்பூரில் உமைத் பவனில் நடைபெற்றது.இவர்கள் இருவரது நிச்சயதார்த்தம் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நிக் மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 10 என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்கா சோப்ரா அவரது காதலரை விட 10 வயது மூத்தவர். அதனால் என்ன..காதலுக்கு தேவை வயது அல்ல என்பதை இந்த உலகத்திற்கு ஆணித்தரமாக  சொல்லும் விதமாக இன்றைய தினம் இவர்களது திருமணம் நடந்தேறியது. பிரியங்கா சோப்ரா ஏற்கனவே கூறியது போலவே இந்து முறைப்படி மற்றும் கிறிஸ்துவ முறைப்படி என இரண்டு முறைகளில் திருமணம் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.இவர்கள் இருவரும் 2016 ஆம் ஆண்டு ட்விட்டரில் பேச தொடங்கி 2017ஆம் ஆண்டு விழா ஒன்றில் சந்திக்க தொடங்கி இன்று தங்கள் வாழ்வை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டுள்ளனர். பிரியங்கா சோப்ராவிடம் முதலில் காதலை தெரிவித்தது நிக் ஜோனாஸ் தான் என்று ஒருமுறை பேட்டியிலேயே பிரியங்கா கூறியது குறிப்பிடத்தக்கது. வோக் இதழ் நடத்தும் மெட் காலா நிகழ்ச்சியே இவர்கள் காதல் வாழ்வின் முக்கியமான தருணமாகும். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவில் இருவரும் ஒன்றாக பங்குபெற்றது இருவருக்கும் இடையே பரஸ்பரம் அன்பை பரிமாறிக்கொள்ள ஏதுவாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் புகழ்பெற்ற டிசைனர் ரால்ப் லாரன் ஆவார். இவரது வேண்டுகோளுக்கிணங்க இருவரும் அந்த விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது கைவண்ணத்தில் உருவான ஆடையையே பிரியங்கா சோப்ரா தனது திருமணத்திற்கும் பயன்படுத்த போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் இவரது டிசைனில் ஆடை அணியும் முதல் பிரபலம் பிரியங்கா சோப்ரா என்பது கூடுதல் சிறப்பு.


இந்த விழாவிற்கு அவரது நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல திருமணம் நடைபெற்ற இடத்தில யாருக்கும் செல் போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பங்கு பெற்ற அனைவருக்கும் ஐடி கார்டு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.


விழாவின் போது நிறைய புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை. மெஹந்தி நிகழ்வின் போது  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ,மட்டுமே பகிரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


3-priyanka-nick-wedding-mehendi


மேலும் திருமண நிகழ்வின் போது வாணவேடிக்கைகள் கண்ணை பறித்தது தற்போது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. ஏனென்றால் பிரியங்கா சோப்ரா தீபாவளி சமயத்தின் போது பட்டாசு வெடிக்கப்படுவதற்கு எதிராக தனது கருத்துக்களை ட்விட்டரில் பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


பிரியங்கா சோப்ரா 1982 ஆம்  பிறந்தவர். அவர் 2000ஆம்  ஆண்டு மிஸ் இந்தியா மற்றும் மிஸ் வேர்ல்டு பட்டம் வென்றார். அவர் தனது முதலாவது  திரைப்படத்தில் 2002ஆம் ஆண்டு  நடிக்க தொடங்கினார். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க தொடர்களில் நடித்து வருகிறார். பல்வேறு சிறப்பான வேடங்களில் நடித்து அசத்திய இவருக்கு 2016ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் , அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர்  என்பதும் குறிப்பிடத்தக்கது. டைம் நாளிதழ் இவரை செல்வாக்கு மிகுந்த 100 பெண்களில் ஒருவராக 2016ஆம் ஆண்டு தேர்வு செய்தது. மேலும் போர்ப்ஸ் இதழ் இவரை உலகின் 100 பவர்புல் பெண்களில் ஒருவராக தேர்வு செய்ததும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.நிக்கோலஸ் ஹென்றி ஜோனாஸ் என்ற இயற்பெயர் கொண்ட நிக் ஜோனாஸ் அமெரிக்காவை சேர்ந்த பாடகர் ,பாடலாசிரியர் மற்றும் நடிகர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தனது ஏழாவது வயது முதல் திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தனது முதலாவது ஆல்பத்தை இவர் 2002ஆம் ஆண்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


2-priyanka-nick-wedding-nick
இவர்கள் இருவரது சொத்து மதிப்பு 53 பில்லியன் டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் மதிப்பில் சுமார்  369 கோடியே 78 லட்சத்து பத்தாயிரம் ரூபாய் ஆகும் .


 படங்களின் ஆதாரங்கள் - இன்ஸ்டாகிராம்