ப்ரியங்கா நிக் ஜோன்ஸ் திருமணத்தில் நடைபெற்ற சில சுவாரசிய தகவல்கள்

ப்ரியங்கா நிக் ஜோன்ஸ் திருமணத்தில்  நடைபெற்ற சில சுவாரசிய தகவல்கள்

வித்யாசமான மற்றும் தைரியமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை பிரியங்கா சோப்ரா. சில வருடங்களுக்கு முன் ஹாலிவுட்டில் நடிக்க தொடங்கிய இவர் பின்னர் அங்கே பாடகராக இருக்கும் நிக் ஜோன்ஸ்  என்பவரைக் காதலித்தார்.


பாலிவுட் பிரபலமான பிரியங்கா சோப்ரா மற்றும்  ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்ஸ் ஆகிய இருவருக்கும் டிசம்பர் 2 அன்று ஜோத்புரில் திருமணம் நடக்க இருக்கிறது.


பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டில் கால் பதித்த நடிகை பிரியங்காவின்  முதல் அறிமுகமே தமிழ் திரைப்படம் என்பது முக்கியமான செய்தி.


தனது திருமணத்தை பழங்கால மகாராணி திருமணத்தைப் போன்று நடக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார் ப்ரியங்கா. ஆகவே தனது திருமணம் ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனையில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்த ப்ரியங்கா அதற்காக அந்த அரண்மனையை நான்கு நாட்கள் வாடகைக்கு எடுத்திருக்கிறார்.


 


அந்த அரண்மனைக்கான ஒரு நாள் வாடகை 2 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் நிச்சயத்திற்கு ப்ரியங்காவிற்கு நிக் ஜோன்ஸ் போட்ட மோதிரத்தின் மதிப்பு இரண்டு கோடி ரூபாய் எனவும் கூறப்படுகிறது.


நான்கு நாட்கள் நடக்கும் இந்த திருமண வைபவத்தில் முதலில் மணமகன் நிக் ஜோனஸ் சின் மரபுப்படி கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது பின்னர் மணமகள் ப்ரியங்காவின் மரபுப்படி இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.


நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ளப்போகும் இவர்கள் திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு பரிசு ஒன்றை இந்த புதுமணத்தம்பதியினர் வழங்கினர்.


திருமணத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் வெள்ளி காசு பரிசளித்தனர் அதில் ஒரு பக்கம் விநாயகர் மற்றும் லக்ஷ்மியின் உருவமும் மறுபக்கம் NP என்கிற எழுத்தும் பொறிக்கப்பட்டிருப்பதாகவும் மும்பையின் பிரபல நகைக்கடையில் இந்த காசுகள் தயார் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.


கோடிகளில் செலவழித்து நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்களை விளம்பரதாரர்களுக்கு 18 கோடிக்கு விற்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் திருமணத்திற்குப்  பிறகு இவர்கள் இருவரும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வாழப் போவதாகத் தகவல் கசிந்துள்ளன.


இவர்கள்  கலிபோர்னியாவின் பெவிரிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் திருமண உரிமை சான்றிதழ் பெற வேண்டி விண்ணப்பித்து இருக்கின்றனர்.


இவர்கள் திருமணத்தை ஒட்டி பல்வேறு ஹாலிவுட் பிரபலங்கள் இந்தியா வந்தனர்.ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான சீரியல் ஆன கேம் ஆப் த்ரோன்ஸ்சின் நடிகையும் நிக் ஜோனஸின் சகோதரர் ஜோ ஜோனஸின் காதலியுமான ஷோபி டர்னர் உள்ளிட்ட பல முக்கிய ஹாலிவுட் பிரபலங்கள் இந்த திருமணத்திற்காக இந்தியா வந்தனர். 


இதில் சில நாட்களுக்கு முன் தனது நாத்தனார் சோஃபி டர்னரை உப்பு மூட்டை தூக்கி வலம் வந்த விஷயத்தை ப்ரியங்காவே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது இணைய தளத்தில் பிரபலமானது அனைவருக்கும் நினைவிருக்கும்.


திருமணத்திற்கு முன்பு மும்பை ஜூஹூவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ப்ரியங்கா சோப்ரா நண்பர்கள் அனைவருக்கும் பார்ட்டி தந்தார். இந்த பார்ட்டியில் நடிகை அலியா பட் ப்ரியங்காவின் அண்ணன் சித்தார்த் சோப்ரா மற்றும் ஜோ ஜோனஸ் மற்றும் ஷோபி டர்னர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இந்த திருமணத்தில் அனில் அம்பானி ஆகிய பல முக்கிய பிரமுகர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினர்.


பிரியங்கா நிக் திருமணம் இரண்டு நாடு மற்றும் மதங்கள் இணையும் ஒரு திருவிழாகவே கொண்டாடப்பட்டது. அவரது திருமணத்தன்று இந்தக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜோத்பூர் அரண்மனையில் பல்வேறு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தினர்


மொத்தத்தில் பிரியங்கா நிக் திருமணம் அவர்களது விருப்பப்படியே கோலாகலமாக நடந்து முடிந்தது. தம்பதிகள் இருவரும் இப்போது தேனிலவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது


பிரியங்கா நிக் தம்பதியின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய POPxo வாழ்த்துகிறது


--


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.