மும்பையில் களை கட்டிய ப்ரியங்கா-நிக் வரவேற்பு விழா கொண்டாட்டங்கள்!

மும்பையில் களை  கட்டிய ப்ரியங்கா-நிக் வரவேற்பு விழா கொண்டாட்டங்கள்!

பிரியங்கா நிக் ஜோனஸ் ஆகிய இருவரின் திருமணமும் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி நடந்து முடிந்தது. இதற்கென பிரியங்கா ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனையை வாடகைக்கு எடுத்து தனது திருமணத்தை பழங்கால ராணிகள் முறைப்படி பிரம்மாண்டமான முறையில் ஆடம்பரமாக நடத்தினார்.                                          


மணமகன் நிக் ஜோனஸ் ஹாலிவுட்டின் பிரபல பாடகர். ஆகவே இவர்கள் திருமணம் நடந்த அன்று பல்வேறு ஹாலிவுட் பிரபலங்கள் இந்தியாவுக்கு வந்து மணமக்களை வாழ்த்தினர்.                                                                                                    


இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தோடு திருமணத்தில் கலந்து கொண்டு இத்திருமணத்தை சிறப்பித்தார்.                   


ப்ரியங்காவின் நெருங்கிய தோழிகளான சல்மான்கானின் தங்கை அர்பிதா , மற்றும் பரினீதி சோப்ரா ,பரினீதி சோப்ராவின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் திருமணத்திற்கு முதல் நாளே அங்கு சென்றது குறிப்பிடத்தக்கது.                         


பல்வேறு முக்கிய உற்சாக நிகழ்வுகளுடன் பிரியங்கா நிக் ஜோடியின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.                                                                           தற்போது மும்பையில் பிரியங்கா நிக் ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.                                                                                           


மும்பை ஏர்போர்ட்டில்புது மாப்பிள்ளையாக நிக் ஜோனஸ் தனது இரண்டாவது வரவேற்பு நிகழ்விற்கு தயாராக இருப்பது போல உற்சாகமாக வந்திறங்கினார். வெள்ளை நிறத்தில் ஒரு ஸ்வெட் ஷர்ட்டும் கருப்பு நிற டெனிம் ஜீனும் அணிந்திருந்த நிக் அதற்கு பொருத்தமாக தொப்பி ஒன்றையும் அணிந்திருந்தார். அடர் நிற ஷூவும் கருப்பு நிற பேகும் அவரை இன்னும் தனித்துக் காட்டியது.               


இத்தனை அட்டகாசமாக புது மாப்பிளை மும்பை ஏர்போர்ட் வருகையில் அவரது இணையான பிரியங்காவை அங்கு எங்குமே பார்க்க முடியவில்லை. நிக் வருகை பற்றிய சில விடியோக்கள் இதோ. 
 

 

 


View this post on Instagram


 

 

#nickjonas arrived back in mumbai for Grand Reception


A post shared by Viral Bhayani (@viralbhayani) on
                                                          


திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்புகள் ஆகியோர் மட்டுமே அழைக்கப்பட்டதால் இந்த மும்பை வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் பலர் இதில் அழைக்கப்பட்டுள்ளனர். ஆகவே இந்த நிகழ்வும் அவர்கள் திருமணத்தை போலவே களை கட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.                                                                                                             


பிரியங்கா தனது முதல் வரவேற்பை டெல்லியில் பிரதம மந்திரி நரேந்திர மோடி முன்னிலையில் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான இரண்டாவது வரவேற்பு ஆகும்.வரவேற்பிற்கு பிரியங்காவும் நிக் ஜோனசும் அசத்தலான உடையில் அழகாக இருந்தனர். பிரியங்கா ஒரு அடர் நீல நிறத்தில் அழகிய லெஹங்கா ஒன்றை அணிந்திருந்தார். இதனால் அவரது அழகு மேலும் கூடியிருந்தது.


நிக் க்ரே நிறத்தில் டக்ஸ் அணிந்திருந்தார். அவரது நிறத்தை இந்த க்ரே நிறம் மேலும் அழகாகியது. தம்பதிகள் இருவரும் வரவேற்பு நிகழ்விற்கு வந்து சிறப்பித்தவர்களுக்கு நன்றி கூறியபடி இருந்தனர்.  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.