இன்று சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் IPL 2019ன் 12வது லீக் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து தான் பங்கெடுக்கும் போட்டிகளில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது CSK.
டாஸில் ஜெயித்த ராஜஸ்தான் (RR) அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. 27 ரன்களில் 3 விக்கெட்களை பறிகொடுத்த சென்னைக்கு ஆபத்பாந்தவன் தோனியின் அசாதாரண விளையாட்டு திறனால் 176 ரன்கள் வெற்றி இலக்காக வைக்க முடிந்தது.
அம்பத்தி ராயுடு 1 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து வாட்சன் 13 ரன்களும் ஜாதவ் 8 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் இணைந்த ரெய்னா மற்றும் தோனி இருவருமே சென்னை சூப்பர் கிங்ஸ் காட்டில் ரன் மழையை பொழிந்தனர்.
ரெய்னா போல்ட் அவுட் ஆன பிறகு வந்த ப்ராவோவும் தோனியும் மீண்டும் இணை சேர்ந்தனர். ஆனால் 27 (16) ரன்களில் பிராவோ வெளியேறினார். அதன் பின்னர் ஜடேஜா 3 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தார்.
ஆனால் முதலில் களமிறங்கிய கேப்டன் தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தது CSK ரசிகர்களையும் தோனி ப்ரியர்களையும் உற்சாகத்தின் எல்லைக்கு கொண்டு சென்றது.
தோனியின் தனி ஸ்டைலான அதிலும் அந்த பிரீ ஹிட் சிக்ஸர் , கடைசி ஓவரில் கடைசி பந்துகளில் 3 சிக்ஸர் என தோனி இந்த மேட்சை தனதாக்கி கொண்டார்.
இலக்கு 176 என்பதால் கொஞ்சம் சிரமம் என்கிற நிலையில் ஆட வந்த ராஜஸ்தான் அணி தனது பேட்டிங்கால் அனைவரையும் அசத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப பேட்ஸ்மேன்களான ரஹானே 0 , சாம்சன் 8(7) , பட்லர் 6(7) ஆகிய மூவரும் அடுத்தடுத்து வெளியேற பின்னர் வந்த திரிபாதி 39(24), ஸ்மித் 28(30), ஸ்டோக்ஸ் 46 (26) ஆகியோர் நின்று தம் கட்டினர். 52 ரன்கள் 30 பந்துகள் என்கிற நிலையில் ஸ்டோக்சின் சிக்ஸர்கள் மேட்சின் போக்கை மாற்றின.
அதன் பின்னர் 22 ரன்கள் 10 பால்கள் என்கிற நிலையில் அந்த பதட்டம் அதிகரித்தது. வெற்றி யார் வசம் என முடிவு செய்ய முடியவில்லை.
மிக பதட்டமான இந்த மேட்சில் இறுதி இரண்டு ஓவர்களில் அத்தி பூத்தாற்போல CSK கேப்டன் தோனி பதட்டப்படுவது தெரிந்தது. பீல்டில் யார் எங்கு நிற்பது என்பதை மாற்றியபடியே இருந்தார்.
இறுதி ஓவர் பிராவோ வசம் வந்தது. CSK ரசிகர்களுக்கு பயமும் கூடவே வந்தது. காரணம் முந்தைய ஓவர்களில் பிராவோ விட்டு கொடுத்த சிக்ஸர்கள் பவுண்டரிகள் மற்றும் வைட்கள் அப்படி!
மிக பதட்டமான இந்த மேட்சில் இறுதி இரண்டு ஓவர்களில் அத்தி பூத்தாற்போல CSK கேப்டன் தோனி பதட்டப்படுவது தெரிந்தது. பீல்டில் யார் எங்கு நிற்பது என்பதை மாற்றியபடியே இருந்தார்.
இறுதி ஓவர் பிராவோ வசம் வந்தது. CSK ரசிகர்களுக்கு பயமும் கூடவே வந்தது. காரணம் முந்தைய ஓவர்களில் பிராவோ விட்டு கொடுத்த சிக்ஸர்கள் பவுண்டரிகள் மற்றும் வைட்கள் அப்படி!
ஆனாலும் இறுதி ஓவரில் கலக்கி பிராவோ கடைசி ஓவரில் 2 விக்கெட்கள் எடுத்தது IPL 2019ன் வரலாற்று சிறப்பு மிக்க தருணமாகவே கொண்டாடப்படுகிறது.
தாஹிர், சாகர் மற்றும் பிராவோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.. சென்னையின் வெற்றியை இறுதி ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்திய பிராவோ உறுதி செய்தார். இதற்கு முந்தைய வெற்றியின் கடைசி ஓவரில் வின்னிங் ஷாட் அடித்தவர் பிராவோ என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்!
இதில் கேப்டன் தோனியின் அட்டகாசமான விளையாட்டு அவரை சீனியர், வயதாகி விட்டது, ரன் எடுக்கவில்லை என்று சகட்டு மேனிக்கு விமர்சித்தவர்களுக்கு பதிலடியாக இருந்தது. அதிலும் முக்கியமாக ஐந்தாவது ஓவரில் வீசப்பட்ட பந்து ஸ்டம்ப் மீது உருண்டு சென்று அப்படியே நின்றது காலத்துக்கும் மறக்க முடியாத தோனி தருணங்களில் ஒன்று ! தோனியைக் கண்டால் பெயில் கூட விழுவதற்கு யோசிக்கும் என்று அவர் ரசிகர்கள் கூக்குரலிட்டனர் !
மொத்தத்தில் மூன்றாவது முறையாக போட்டியை வென்றுள்ளது CSK . புள்ளிகள் பட்டியலிலும் முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது
” வெற்றி நமக்கு அசால்ட்டு ” வேற லெவலில் விளையாடிய CSK ! பரிதாபத்தில் RCB !
“முடிஞ்சா எங்களை சேஸ் பண்ணுங்க” – DC ! “தம்பி உங்களுக்கு எங்களப் பத்தி தெரியாது !” – CSK ! IPL2019
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.