"முடிஞ்சா எங்களை சேஸ் பண்ணுங்க" - DC ! "தம்பி உங்களுக்கு எங்களப் பத்தி தெரியாது !" - CSK ! IPL2019

"முடிஞ்சா எங்களை சேஸ் பண்ணுங்க" - DC ! "தம்பி உங்களுக்கு எங்களப் பத்தி தெரியாது !" - CSK ! IPL2019

இன்று IPL2019ன் ஐந்தாவது மேட்ச் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. DC மற்றும் CSK இடையிலான இந்த ஆட்டத்தில் டாசில் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதிக ரன்களை எடுத்து விட வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆரம்பத்தில் அபாரமாக விளையாடியது.


முதல் 20 பந்துகளில் ப்ரித்வியை தீபக் அவுட் செய்தார். அதன் பின்னர் நிதானமாக விளையாண்ட ஷிகர் தவான் 51 ரன்களில் ப்ராவோவின் விக்கெட் எண்ணிக்கையை ஆரம்பித்து வைத்தார். இதற்கிடையில் பிட்ச் சரியில்லையா என்னவோ சென்னை சூப்பர் கிங்ஸ் நிறைய வைட் ரன்களை டெல்லி அணிக்குத் தாரை வார்த்தது.அதன்பின் ஷ்ரேயாஸ் 18 ரன்களில் இம்ரான் தாஹிரின் பாலுக்கு அவுட்டானார். லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று கமென்டேடர் விவரித்த ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ப்ராவோவின் விக்கெட் ஆனார். அதன் பின்னர் வந்த கோலினை 2 ரன்களில் அவுட்டாக்கிய பிராவோ அதன் பின் செய்ததெல்லாம் அட்டகாசம்தான்.


போடும் பந்துகள் எல்லாம் விக்கெட் என்கிற ரீதியில் பிராவோ கத்த தோனியோ அமைதியாக புருவங்களை உயர்த்தி சிரிக்க அதன்பின்னர்தான் சமநிலைக்கு வந்தார் பிராவோ.


மேட்சில் ப்ராவோ மற்றும் தோனியின் கெமிஸ்ட்ரி அற்புதமாக இருந்தது. முதல் பாதி மேட்சை பிராவோ விக்கெட் எடுத்து முடித்து வைத்தார்.


dhoni3


இரண்டாம்பாதியில் ஷேன் வாட்சன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தது சென்னைக்கு பலம் சேர்த்தது. அம்பதி ராயுடுவோ 5 ரன்களில் ஈசி கேட்ச் கொடுத்தார். அதன் பின்னர் களமிறங்கிய ரெய்னா 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். IPL டிஜிட்டல் போர்டில் raina - ing" என்று சந்தோஷமாக பாராட்டியது. அதே போலவே IPL மேன் எனும் வாசகமும் ரெய்னாவிற்கு கிடைத்தது.


அதன்பின்னர் ஜாதவ் மற்றும் தோனி இருவரும் முன்னவர்கள் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து சேர்த்து வைத்த பந்துகளில் சிறிய அளவை வீணாக்கி விட்டு நமக்கு வழக்கமான பதட்டமான ஆட்டத்திற்கு மைதானத்தை கொண்டு வந்தனர். 20 பால் 22 ரன் 10 பால் 10 ரன் என்று பார்வையாளர்களின் பதட்டம் அதிகரித்தது.எந்த நேரம் வேண்டுமானாலும் எந்த அணி வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்கிற அந்த பதட்டம் கடைசி ஓவர் வரை நீடித்தது.தோனியால் பவுண்டரி கூட அடிக்க முடியாமல் டெல்லியின் பந்து வீச்சு இருந்தது. அதன்பின்னர் 9 பால் 9 ரன் என்கிற நிலையில் அதற்கடுத்த பாலைத் தோனி தனக்கே உரிய பாணியில் சிக்சருக்குத் தூக்கினார். எப்போதும் போலவே அதிக உயரம் சென்ற அந்த பால் அதன்பின்னர் பெவிலியனில் விழுந்தது.


எப்போது வேண்டுமானாலும் இப்படி ஒரு சிக்ஸர் வரலாம் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. தல என்கிற பெயர் தோனிக்கு மட்டும்தான் சால பொருந்துகிறது என்பது போல தனது குழுவை திறமையாகக் கையாண்டார்.


e1984-15536243759470-800


பிறகென்ன 2 ரன் 7 பால் என்கிற நிலையில் நாம் வென்று விடுவோம் என்று நினைக்கையில் அடுத்த பாலில் ஜாதவ் அவுட்டானார். அதன் பின்னர் வந்த பிரேவோ இரண்டு பந்துகளை வீணாக்கி மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். முதல் பாதி விளையாட்டில் தான் ஆரம்பித்து வாய்த்த வெற்றியை தனது வின்னிங் ஷாட் மூலம் முடித்தும் வைத்தார் பிரேவோ!


வாவ் பிராவோ ! நீங்க நிஜமாவே பிராவோ தான் ! அந்த விக்கெட் எடுத்ததும் நீங்க ஆடினீங்க அதுக்காக ஸ்டைலிஷ் பர்சன்கற ஒரு லட்ச ருபாய் பரிசையும் கொண்டு போனீங்க ! இட்ஸ் ரியலி லவ்லி !


 CSK இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளோடு IPL பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.


ஆகவே எங்களைப் பிடிங்க என்று DC அணி நியமித்த இலக்கை CSK தனக்கே உரிய தனிப்பட்ட ஸ்டைலில் கொடுத்த இலக்குக்கு மேல் 2 ரன்கள் அதிகமாகவே எடுத்து வெற்றி பெற்றது.படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo. 11:07 AM