ஒவ்வொரு மனிதனும் இன்று ஒழுக்க நெறியோடும், நாகரீகத்தோடும் வாழ்கின்றான் என்றால், அதற்கு அவனது ஆசிரியருக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. தாய் தந்தையருக்கு அடுத்த படியாக குருவாகிய ஆசிரியரே வருகின்றார். அதன் பின்னரே நாம் வணங்கும் தெய்வங்கள் வருகின்றன. இப்படி நம் வாழ்க்கையில் முக்கியமான ஓர் இடத்தில் இருக்கும் ஆசிரியருக்கு(teachers), அனைவரும் தங்களது நன்றியை தெரிவிக்கும் ஒரு சிறந்த தினமாக இந்த ஆசிரியர் தினம் இருகின்றது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ஆம் தேதி இந்த ஆசிரியர் தினம் கொண்டாடப் படுகின்றது. இந்த தினம் பேராசிரியரம், முதல் துணை ஜனாதிபதியும் மற்றும் இரண்டாவது ஜனாதிபதியுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் அன்று நாடு முழுவதும் கொண்டாடப் படுகின்றது. இந்த அற்புதமான தினத்தன்று நீங்கள் உங்கள் ஆசிரியருக்கு வாழ்த்துக்களையும், பொன்மொழிகளையும் கூற விரும்பினால், உங்களுக்காக, இங்கே சில தொகுப்புகள்
Table of Contents
- ஊக்கமூட்டும் ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள் (Inspirational Message for Teacher’s Day)
- மகிழ்ச்சியுடன் ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள் (Happy Teacher’s Day Wishes)
- முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் வாழ்த்துக்கள் (Happy Teacher’s Day Quotes for Whatsapp / Facebook)
- ஆசிரியர்கள் தின வாழ்த்து அட்டைகள்! (Teacher’s Day Greeting Card Wishes)
- ஆசிரியர் தினம் கொண்டாட வாழ்த்துக்கள் (Quotes to Celebrate Teacher’s Day)
- பிரபலமான ஆசிரியர் தின வாழ்த்துக்கள் (Famous Teacher’s Day Messages)
Also Read: Heartwarming Teacher’s Day Wishes (In English)
ஊக்கமூட்டும் ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள் (Inspirational Message for Teacher’s Day)
1. நல்ல குரிகொல்களையும், சமுதாய உணர்வுகளையும்
விதைத்து சிறந்த கல்விப்பநியாற்றிட வேண்டும்…..
இனிய ஆசிரியர்கள் தினம் நல்வாழ்த்துக்கள்…..
2. நம்மை விட வளர்ந்து விட்டானே என்று பொறாமைப்படாத
ஒரே ஜீவன் – நம் ஆசிரியர்கள் மட்டும் தான்…!
இனிய ஆசிரியர்கள்(teachers) தின வாழ்த்துக்கள்!
3. ஆசிரியர்களின் ஆசீர்வாதம் இல்லாவிட்டால்
நான் கவிதை எழுதியிருக்க மாட்டேன்…
பலசரக்கு கடையில் கணக்கு தான் எழுதி கொண்டிருப்பேன்…
அவர்கள் இல்லையென்றால் நான் யாரும் ரசிக்கும் படியான மனிதனாக ஆயிருக்க மாட்டேன்
என் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
4. ஆசிரியர்கள் என் ஆறாம் அறிவிற்கு கல்வி புகட்டி,
கூர்மை சேர்த்தவர்கள்
நாளைய சமுதாயத்திற்கு
நல்லெண்ணம் போதிப்பவர்கள்
உலகே வாழ்த்துகிறது உங்களை
நான் வணங்குகிறேன் – இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
5. உங்கள் சேவைக்கும், நீங்கள் தந்த கல்விக்கும்
நன்றி சொல்வது மட்டும் போதாது
நான் என் ஆயுள் முழுவதும் உங்களுக்கு கடமை பட்டுள்ளேன்
உங்கள் சேவையை என்றும் மறக்க மாட்டேன்!
நன்றியுடன் உங்களை நினைத்து பார்க்கும்
உங்கள் மாணவன்!
ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
6. அ முதல் ஃ வரியினுள்
இவ்வுலகத்தை
உள்ளடக்கி
என்னுடைய
ஐயங்கள் அனைத்தும்
ஒளிதாயே…
இனிய ஆரிசியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
7. உயிரெழுத்தில் உள்ள உயிராய்
கல்வி புகட்டும் அனைத்து ஆசான்களுக்கும்
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
8. அறிவென்னும் விளக்கேற்றி
அன்பெனும் வழிகாட்டி
சந்தனத் தென்றலாய் வளம் வந்து குளிர்
சந்திரனில் நன்மையைக் கொண்டு
கனியமுத மொழியோடு
கல்வி தனிப் போதிக்கும்
என் மரியாதைக்குரிய ஆசானுக்கு வணக்கங்களுடன்
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
9. நான் வாழ நான் முன்னேற எனக்காக உழைத்தவர்கள்
நான் இன்று இன்பம் காண அன்று துன்பம் பொறுத்தவர்கள்
நான் முத்து சேர்க்க மூச்சடக்கி முத்து குளித்தவர்கள்
என் இளம் வயதில் கண்ட நடமாடும் தெய்வங்கள் என் ஆசிரியர்கள்!
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
10. நாங்கள் எபோதும் நன்றியுடன் இருப்போம்;
எங்களுக்காக கடினமாக உழைத்த எல்லா கடின உழைப்புக்கும் முயற்சிகளுக்கும்
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
Also Read About தாய் மகள் மேற்கோள்
shutterstock
மகிழ்ச்சியுடன் ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள் (Happy Teacher’s Day Wishes)
1. எங்கள் இதயங்களின் உண்மையான வழிகாட்டியாக
இருக்கும் எங்கள் ஆசிரியர்களுக்கு
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
2. எங்களுக்கு கல்வி கற்பதற்கு
நீங்கள் செய்த அனைத்து கடின உழைப்பிற்கும்
நாங்கள் உங்களுக்கு என்றும் மனமார்ந்த நன்றியை தெரிவிகின்றோம்!
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
3. ஆசிரியர்கள் மட்டுமே நாம் நினைப்பதை விட அதிகமாக நமக்குள் இருக்கும்
திறமையை வெளிக்கொண்டு வருகிறார்கள்!
இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்!
4. நான் பள்ளிக்கு வந்தவுடன், உங்கள் வகுபிர்க்காக காத்திருப்பேன்
நீங்கள் ஒரு அற்புதமான ஆசிரியர்,
உங்களுடன் நான் என் நண்பனை பார்கின்றேன்,
ஆசிரியராக மட்டும் இல்லாமல், தோழனாகவும் எண்ணை ஊக்கவித்த உங்களுக்கு
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
5. என் ஆசிரியராக உங்களை பெற்றதற்கு நான் பெருமை அடைகிறேன்!
உங்களது ஒவ்வொரு வகுப்பையும் நான் எண்ணை அறியாமல் ரசித்து இருப்பேன்!
என்னுடைய வழிகாட்டி நீங்கள்!
நீங்கள் எனக்கு கொடுத்த ஊக்கமே, இன்று நான் உலகம் போற்றும் இடத்தில் நிற்கின்றேன்!
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
6. இன்று நான் வாழும் இந்த வாழ்க்கைக்கும்
எனக்கு கிடைத்த வெற்றிக்கும், ஒருவருக்கு முக்கிய பங்கு உள்ளது என்றால்
அது நான் என்றும் போற்றும் எனது ஆசிரியருக்கு தான்!
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
7. விதிகளை மட்டும் தூவி விட்டால் பத்தாது!
அந்த விதைகள் தன்னைத்தானே ஒரு மரமாக வடிவெடுக்க பல தூண்டுகோல்கள் வேண்டும்
அப்படி நான் என்கின்ற இந்த விதையை ஊக்கத்துடன் வளர வைத்த
எனது தூண்டுகோல் – எனது ஆசிரியர்!
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
8. ஏன் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று கடமையே என்று
கட்டாயத்தால் பள்ளிக்கு சென்ற எண்ணை,
எப்போது பள்ளி திறக்கும் என்று ஆவலுடன் காக வைத்த என் அன்பு ஆசிரியருக்கு
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
9. வெறும் மதிப்பென்களை மட்டும் குறிகோளாக வைத்து
கட்டாயத்தின் அடிப்படையில் படித்து கொண்டிருந்த எங்களுக்கு
சுவாரசியத்தை காட்டி, ஆர்வத்துடனும், புரிதலுடனும் படிக்க தூண்டிய எங்கள் ஆசிரியருக்கு
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
10. நாங்கள் என்றும் உங்களுக்கு நன்றியோடு இருப்போம்!
எங்கள் மீது நீங்கள் வைத்து நம்பிக்கையும்,
உங்களது கடின உழைப்புமே, இன்று எங்களுக்கு இந்த அங்கீகாரத்தை கொடுத்துள்ளது!
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
Also Read About சிறந்த உந்துதல் மேற்கோள்கள்
முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் வாழ்த்துக்கள் (Happy Teacher’s Day Quotes for Whatsapp / Facebook)
1. ஒருவரிடம் நான் நண்பனை, வழிகாட்டியை, பெற்றோரை,
இறைவனை ஒன்றாக பார்க்க முடியும் என்றால்
அது என் ஆசிரியர் மட்டுமே!
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
2. ஒரு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட வேண்டும் என்றால்
அது உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நான் மனமார்ந்து வேண்டுகிறேன்!
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
எங்களை நல் வழி நடத்தி,
பாடம் கற்பித்து,
நல்ல ஒழுக்கங்களை கற்றுக்கொடுத்து
நல்ல பண்புகளை புரிய வைத்து
நல்ல ஒரு மனிதனாய் இந்த சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்திய
எங்கள் ஆசிரியருக்கு
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
3. இன்று ஒரு சிறப்பான நாள்!
எங்கள் வாழ்க்கையில் என்றும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்பும் சிறந்த நாள்!
நான் யார் என்கின்ற உண்மையை புரிய வைத்த என் ஆசிரியருக்கு
எனது நன்றியை தெரிய படுத்த இதை விட ஒரு சிறந்த நாள் கிடைக்குமா?
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
4. அன்பாகவும், பொறுமையாகவும், ஆதரவாகவும்
எங்களுக்கு ஒவ்வொரு பாடத்தையும் நலல் புரிதலோடு வகுபெடுத்த
எங்கள் ஆசிரியர்களுக்கு
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
5. வெகு குறைந்தவர்களே ஒருவரின் வாழ்க்கையில் ஒரு நல்ல தாக்கத்தை உண்டாக்க முடியும்!
அப்படி என் வாழ்க்கையிலும் ஒரு நல்ல தாக்கத்தை உண்டாக்கிய பெருமை
எனது ஆசிரியருக்கே சேரும்!
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
6. என் வாழ்நாள் முழுவதும் நான் ஒருவருக்கு நன்றியோடு இருக்க விரும்பினால்
அது என் ஆசிரியருக்கு மட்டுமே!
என்றும் நன்றியுடன்
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
7. நான் மறக்கவே கூடாது என்று நினைக்க ஒருவர் இருகின்றார் என்றால்,
அது எனது ஆசிரியராக மட்டுமே இருக்க முடியும்!
இவன் எங்கே முன்னேறப் போகிறான் – என்ற சத்தங்களுக்கு முன்
இவனா இப்படி வளர்ந்து நிற்கின்றான் இந்த போட்டி நிறைந்த சமுதாயத்தில் என்று எண்ணை பார்த்து வியக்க வைத்த – என் ஆசிரியர்!
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
8. ஒரு ஆசிரியர் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பவராக இருக்க கூடாது
மாணவர்களுக்கு வாழ்க்கையையும் புரிய வைப்பவராக இருக்க வேண்டும்.
அப்படி ஒரு ஆசிரியரை பெற்றதற்கு நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்!
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
9. ஐயோ இந்த வகுப்பா என்று சலித்து கொண்டு இருந்த போது,
இந்த வகுப்பிலும் இத்தனை சுவாரசியமா என்று வியக்க வைத்து
படிப்பில் ஆர்வத்தை வளர்த்த என் ஆசிரியருக்கு,
இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்!
10. கடமையே என்று பள்ளிக்கு சென்ற நாட்கள் மறைய,
நான் வீட்டிற்கே வர மாட்டேன் என்று சொல்ல வைத்த என் ஆசிரியரின்
சுவாரசியமான வகுப்புகள் என்றும் எனக்கு வாழ்க்கையில் முன்னேற ஒரு தூண்டுகோலாக இருக்கும்!
இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்!
Also Read : ஒரு செல்ஃபி எடுப்பது எப்படி
ஆசிரியர்கள் தின வாழ்த்து அட்டைகள்! (Teacher’s Day Greeting Card Wishes)
1. உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உண்டு.
ஒன்று தாயின் கருவறை; இன்னொன்று
ஆசிரியரின் வகுப்பறை.
தாயின் கருவறையில் ஒருவன் உயிரை பெறுகிறான்
ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவை பெறுகிறான்.
அனைத்து ஆசிரியர்களுக்கும், என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
2. என் ஆசிரியர்களை
கை எடுத்து வணங்குகிறேன்
நன்றியுடன் நினைத்து பார்கிறேன்
நான் வாழ! நான் முன்னேற!
எனக்காக உழைத்தவர்கள்!
நான் இன்று இன்பம் காண அன்று துன்பம் பொறுத்தவர்கள்!
நான் முன்னேற எனக்கு ஏணியாக இருந்தவர்கள்!
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
3. ஒரு ஆசிரியர் மாணவர்களை அவர்கள் நினைப்பதை போல உருவாக்குவதை விட
அவர்கள் நினைப்பதை உருவாக்க தூண்டுபவர்கள்!
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
4. நீங்கள் ஒரு அற்புதமான ஆசிரியர் மட்டுமல்ல!
எங்களுக்கான தூண்டுகோலும் நீங்களே!
உங்கள் அன்பிற்கும், அரவனைபிற்கும், ஊக்கத்திற்கும்
என்றும் நன்றி கூறுவோம்!
இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்!
5. குறும்பு செய்யும் குழந்தையாக நங்கள்
அதை திருத்தும் தாயாக நீங்கள்….
கடின பட்டு உழைக்கும் இயந்திரம் போன்று நாங்கள்
அதை உருவாக்கிய அறிஞர்கள் நீங்கள்…
கருவறையில் இருக்கும் சிலையாக நாங்கள்
அதை செதுக்கிய சிற்பியாக நீங்கள்…
அழகிய பூக்களாக நாங்கள்
அதை மலர்ந்து மனம் வீச செய்த மாண்பாளர்கள் நீங்கள்
சேட்டைகளின் உச்சமாக நாங்கள்
அதை கண்டிக்கும் தந்தையாக நீங்கள்…
நீங்கள் – எங்கள் அன்பிற்குரிய ஆசிரியர்!
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
6. உலகின் உயர்வுக்கு உன்னத மானவர்கள்
உயிராகி உருவாகித் தலைசிறந்து மிளிர
உடலாலும் உள்ளத்தாலும் உதவி நிற்கும்
உன்னத தோளிலே ஆசிரியர் தொழில்!
அனைத்து ஆசிரியர்குக்கு ஏன் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
7. எங்களை உயரத்திற்கு அனுப்பி விட்டு
கீழிருந்து ரசிக்கும் ஆசிரியர்களுக்கு
கோடான கோடி நன்றிகள்…!
ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்!
8. நம் கனவுகளை அடைய உறுதுணையாய் இருப்பவர்கள்
ஆசிரியர்கள்…
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
9. தொடர்ந்து எங்களை ஊக்கவிக்கும் ஆசிரியர்கள்!
தொடர்ந்து எங்களை மேலே தூக்கி விட்டுக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள்!
தொடர்ந்து நாங்கள் வெற்றி பெற உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள்!
என்றும் இந்த நன்றியை மறவாத மாணவர்கள் நாங்கள்!
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
10. எனது குறிக்கோளை அடைய எனக்கு பக்கபலமாய் இருந்த
எனது ஆசிரியர்
இன்று நான் இந்த சிகரத்தை அடைய காரணமாக இருந்த
எனது ஆசிரியர்
இப்பிறவியின் பொருளை உணர செய்த எனது ஆசிரியர்!
என்றும் நன்றியுடன்,
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
ஊக்கமளிக்கும் குட் மார்னிங் செய்திகளையும் படிக்கவும்
ஆசிரியர் தினம் கொண்டாட வாழ்த்துக்கள் (Quotes to Celebrate Teacher’s Day)
1. ஏனிப்படியாய் இருந்து எண்ணை ஏற்றி விட்ட என் ஆசிரியர்
சோர்வடைந்த போது எண்ணை ஊக்கவித்த என் ஆசிரியர்
இன்று நான் இந்த சிகரத்தை தொட காரணமாக இருந்த ஏன் ஆசிரியர்
நன்றி மறவா மாணவனின்
ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
2. ஒருவரிடத்தில் நான் என் தாய், தந்தை, நண்பன் என்று
அனைவரையும் பார்க்க முடியும் என்றால்,
அது என் ஆசிரியரிடம் மட்டும் தான்!
இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்!
3. என் கண்களை திறந்து,
விழிப்புணர்வை ஏற்படுத்தி,
சிந்தனையில் தெளிவை உண்டாக்கி
முகத்தில் புன்னகையையும்
மனதில் தன்னம்பிக்கையையும் கொடுத்த என் ஆசிரியருக்கு
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
4. மாணவனின் கனவுகளை கைவசப்படுத்தி கொடுக்க உதவும்
தூண்டுகோலே சிறந்த ஆசிரியர்…!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்….!
5. ஒவ்வொரு குழந்தையையும் ஒரு சிறந்த மனிதனாக
வடிவெடுத்து, இந்த உலகுக்கு வழங்குபவரே
நல்லாசிரியர்!
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
6. அறிவென்னும் விளக்கேற்றி
அன்பெனும் வழிகாட்டி
சந்தனத் தென்றலாய் வளம் வந்து குளிர்
சந்திரனின் தன்மையைக் கொண்டு
கனியமுத மொழியோடு
கல்வி தனைப் போதிக்கும்
என் மரியாதைக்குரிய ஆசானுக்கு
வணக்கங்களுடன்
இனிய ஆசிரயர் தின வாழ்த்துக்கள்!
7. நான் வழி அறியாது வந்த போது
எனகென ஒரு பாதையை உருவாக்கி என்னுடைய குருவாகி
என் வாழ்க்கைக்கு சுடர் ஏற்றிய என் குருவுக்கு
இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்!
8. அனுபவம் கற்றுத் தரும் பாடத்தை எவராலும் கற்றுக் கொடுக்க
முடியாது என்பர்…
இந்த வரிகளை நமக்கு கற்பித்தவர்கள், ஆசிரியர்கள்….
அனுபவத்தை ஏன் கற்றுக் கொடுக்க முடியாது…
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
9. என் அறிவுக் கண்ணை திறந்து,
அற்புதமான வாழ்வை எட்டி பிடிக்க ஏணியாய் உதவிய
என் ஆசிரியருக்கு என்றும் எனது மனமார்ந்த
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
10. நீங்கள் எனக்கு ஆசிரியர் மட்டும் இல்லை..
எனது நண்பன், எனது வழிகாட்டி, எனது தூண்டுகோலும் நீங்கள் தான்!
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
ரேஅது தமிழில் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
பிரபலமான ஆசிரியர் தின வாழ்த்துக்கள் (Famous Teacher’s Day Messages)
1. ஆசிரியர் பணி என்பது கல்வியோடு ஒழுக்கம்,
பண்பு, தன்னம்பிக்கை, ஊக்கம், விடா முயற்சி ஆகியவற்றை
மாணவர்களுக்கு ஊட்டி சிறந்த மனிதர்களாக்கும் உன்னத பணி…!
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
2. எங்களுக்காக கடினமாக உழைக்கும், உழைத்துக் கொண்டிருக்கும்
ஒவ்வொரு ஆசிரியருக்கும்,
எங்களது இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
3. உங்கள் மாணவனாக இருக்க நான் பெருமைப் படுகிறேன்!
நான் நானாக உருவெடுக்க எனக்கு உதவிய என் ஆசிரியருக்கு
என்றும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
4. கல்வி மட்டுமல்ல
நன்மை, தீமை, ஒழுக்கம், கட்டுப்பாடு
நற்பண்பு, மரியாதை, தலைமை, விளையாட்டு
தன்னம்பிக்கை, விடா முயற்சி, அன்பு, பாசம்,
இறக்கம், ஊக்கம் என அனைத்தையும்
விதைக்கும் ஆசஈரியர்களுக்கு
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
5. வெற்றி பெருகிரானே என்று எண்ணாமல், எப்படியாவது இவன் வெற்றி பெற வேண்டும் என்று ஒரே குறிகோளுடன் உழைக்கும் ஒரு ஜீவன்
உள்ளது என்றால், அது ஆசிரியர் மட்டுமே!
இனிய ஆசிரயர் தின வாழ்த்துக்கள்!
6. ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும், பள்ளி திறந்து விட்டதே என்று சோகமாக கிளம்பும் ஒவ்வொரு மாணவனும்,
கல்வி ஆண்டு முடியும் போது, ஏன் முடிகின்றது என்று நினைக்க வைக்கும்
சக்தி, ஒருவரிடம் உள்ளது என்றால், அது ஆசிரியர் மட்டுமே!
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
7. முதன் முதலில் பள்ளிக்கு சென்ற போது ஆசிரியரை கண்டு பயந்த நான்
இன்று ஆசிரியர் இல்லாமல் பள்ளி முடிந்து வெளியேறும் போது ஆசிரியர் கற்றுகொடுத்த ஒவ்வொரு வரிகளும், என் வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்!
என்றும் என்னுடன் ஞானம் என்னும் உணர்வில் என்னுடன் பயணிக்கிறார்!
இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்!
8. எனது கல்வி பருவம் எப்படி கடந்தது என்று நினைத்து பார்க்கும் போது
அது அர்த்தமுள்ளதாக இன்று மாறியுள்ளதை எண்ணி வியந்து நிற்கின்றேன்.
இதற்கு ஒரே காரணம், எனது ஆசிரியர்கள் மட்டுமே!
இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்!
9. எனது பரிச்சை தேர்வு முடிவுகள் வரும் தருணத்தில் எண்ணை விட அதிக பதற்றத்துடன் ஒருவர் இருப்பார் என்றால் – அது எனது ஆசிரியர் தான்!
எனது வெற்றியை தனது வெற்றியை நினைத்து உழைக்கும் ஒரே மனிதம் – ஆசிரியர்!
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
10. என்றும் நமக்கு பெரிதாக எந்த முன்னேற்றமும் கிடையாது என்று தெரிந்தாலும், என் மாணவன் அவன் இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.