logo
ADVERTISEMENT
home / ஃபேஷன்
காலேஜ் பெண்கள் அணிய விரும்பும் உடைகள்! இனி தினமும் அசத்தலாம்

காலேஜ் பெண்கள் அணிய விரும்பும் உடைகள்! இனி தினமும் அசத்தலாம்

காலம் மாற மாற, அதற்கேற்ற வகையில் ஃபேஷன்களும் மாறிக் கொண்டே இருக்கும். உடைகளாகட்டும், நகைகளாகட்டும் ஃபேஷன்களின் அணிவகுப்பு முதன் முதலில் கல்லூரிகளில்(college girl) தான் களை கட்டும். இளமையில் புதுமை தான் காணச் சலிக்காத அழகு. தங்களில் ரசனைக்கு ஏற்றவகையில் பெண்கள் இன்று தங்களை நன்கு அலங்கரித்துக் கொள்கிறார்கள். அழகுக் கலை பராமரிப்பு தனித்துவம் பெற்றிருக்கும் இந்தக் காலத்தைச் சேர்ந்த இளம் நங்கைகள் என்ன மாதிரியான உடைகளை விரும்பி அணிகிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.

ஜீன்ஸ்
கல்லூரி பெண்களுக்கு மட்டுமல்ல பெண்கள் (college girl) ஆண்கள் என அனைவருக்கும் பிடித்த தேசிய உடையாகி விட்டது ஜீன்ஸ். ஜீன்ஸ் பலவிதமாக இருந்தாலும் காலேஜ் பெண்கள் விரும்பி அணிவது 3/4த் ஜீன்ஸ். இவை டீஷர்ட்டுகள் அருமையாக ஒத்துப் போகும்.
லெக்கின்ஸ்
அணிய வசதி எல்லா கலர்களிலும் கிடைக்கிறது. மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்து அணிய இதைவிட சிறந்த உடை எதுவுமில்லை என்கிறார்கள்.

லெஹங்கா
பாவடை தாவணியின் வெஸ்டர்ன் அவதாரம் தான் இது. கேஷுவலாக அணிய முடியாவிட்டாலும் பிறந்த நாள், வெள்ளிக்கிழமை அல்லது காலேஜ் பங்ஷனுக்கு அணிகிறார்கள்.

 

ADVERTISEMENT

Youtube

ஸ்கர்ட்
ஸ்கர்ட்களின் ஏ லைன், அம்பெரல்லா, பென்சில், மெர்மெய்ட், பானல், ஏசிமெட்ரிகல், என விதம் விதமான பாவடைகள் உள்ளன. கால் பாதம் வரைத் தொடுகிற லாங் ஸ்கர்ட்களைத்தான் கல்லூரிப் பெண்கள் அதிகம் விரும்பி அணிகிறார்கள். இவை வண்ண வண்ணமாக அழகிய டிசைன்களில் பிரின்ட் செய்யப்பட்டுக் கிடைக்கிறது.

பலாஸோ
தொள தொளவென்று பாவாடை போலிருக்கும் இந்த தோத்தி வகை உடை அணிய வசதியானது. கேஷுவலாக அணியலாம். தகுந்த டாப்ஸுடன் அணிய பார்வைக்கும் அழகாக இருக்கும்.

ADVERTISEMENT

ஃபார்மல் பேண்ட், கேதரிங், பாரலல், டைட்ஸ் என்று பல வகை உடை இருக்கிறது. டெனிம் ரகத்தில் குட்டைப் பாவாடை மற்றும் ஷார்ட்ஸ் கூட சில பெண்கள் விரும்பி அணிகிறார்கள்.

டாப்ஸ் பொருத்தவரையில் கல்லூரி பெண்கள் அடிக்கடி அணிய விரும்புவது

டீஷர்ட்
ஜீன்ஸுக்கு ஏற்ற மேலாடை இதுதான். ப்ளெயின், பிரிண்டட் டிசைன்களில் கிடைக்கிறது. பெண்களுக்கான ப்ராண்டட் டீஷர்ட் பெரிதும் விரும்புகிறார்கள். வாசகங்கள் ப்ரிண்ட் செய்யப்பட்ட டீஷர்டுகளுக்கு அதிக மவுசு.

குர்தி
ஷார்ட் குர்தி பார்க்கவும் அணியவும் வசதியாக இருப்பதால் அதிகம் வாங்குகிறார்கள். மிக்ஸ் மேட்ச் செய்து அணியவும் வசதியானது. எத்னிக்காக இருக்கும் அதே சமயம் மாடர்னாகவும் காண்பிக்கும் இந்த குர்தியை ஆல் டைம் ஃபேவரைட்டாக காலேஜ் பெண்கள் அறிவித்துவிட்டார்கள்.

ADVERTISEMENT

 

Shutterstock

சுடிதார்
டைட் ஃபிட்டிங்கில் ஆரம்பித்து, அம்ப்ரெல்லா, அனார்க்கலி என சுடிதாரின் பரிணாம வளர்ச்சி எப்படியிருந்தாலும் அதை விரும்பி வாங்கி அணியவே இளம் பெண்கள் விரும்புகிறார்கள். மெட்டீரியல் வாங்கி தைத்து அணிவது அல்லது ரெடிமேடாகக் கிடைக்கும் சுடிதார்களையும் வாங்குகிறார்கள்.

ADVERTISEMENT

ஷர்ட்
பெண்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட ஷர்ட்டுகள் சந்தையில் உள்ளன. ஃபார்மல் கேஷுவல், ஷார்ட் ஷர்ட்ஸ் என்று பலவகை உண்டு. ஜீன்ஸ், பென்சில் ஸ்கர்ட்டுகளுக்கு டாப்பாக அணியலாம். விதவிதமான காலர் வைத்த ஷர்ட்டுகளையும் அணிகிறார்கள்.

ஸ்டோல்
இது பார்க்க துப்பட்டா போல இருந்தாலும் அது இல்லை, ஆனால் அதைப் போன்ற ஒன்று. விதவிதமான ஸ்டைல்களில் கிடைக்கிறது. ஜீன்ஸ் டிஷர்ட் அணிந்தாலும் சரி அல்லது குர்திக்கும் சரி இது பொருந்தும். இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் முகத்தையும் தலையையும் பாதுகாக்கவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
எப்போதாவது உடுத்தும் புடவை கூட இவர்களின் லிஸ்டில் உள்ளது. அழகான டிசைனர் ப்ளவுஸுடன் கூட புடவைகளை விரும்பி அணிகிறார்கள். இந்தக் காலத்துப் பெண்களுக்கு ஏற்ற வகையில் ப்ளீட்ஸ் தைக்கப்பட்ட புடவை கூட கடைகளில் கிடைக்கிறது.
என்ன உடையாக இருந்தாலும் அதை நேர்த்தியாக தகுந்த ஆக்ஸசரிகளுடன் காலேஜ் பெண்கள் அணிவார்கள். உடைக்குப் பொருத்தமான நிறத்தில் அணிகலன்களும் அணிந்து, கச்சிதமான ஹேர் ஸ்டைல்களுடன் வலம் வரும் இவர்கள் சின்ன சின்ன தேவதைகள் என்றால் மிகையாகாது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்கு மராத்தி மற்றும் பெங்காலி!                            

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.  

ADVERTISEMENT
28 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT