பட்டுப்புடவை இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் குறிக்கிறது. உங்களுக்குள் இருக்கும் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் இந்த பட்டுப்புடவையை நாம் பெரும்பாலும் பண்டிகை நாட்களிலும் விசேஷ நாட்களிலும் அணிந்து செல்வது வழக்கம்.
உங்கள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் இந்த பட்டுப் புடவையை அணிந்து செல்ல உங்களுக்கு ஆசை இருந்தால் அதன் வகைகளைப் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்.பலவகையான பட்டுப்புடவை ரகங்கள் இருக்கிறது .இதை உற்பத்தி செய்யும் நகரத்தின் பெயரையே இதற்கும் பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முக்கியமான பிரபலாமான பட்டு புடவை ரகங்களை நாம் இங்கு பார்க்கலாம் .மேலும் அதை எங்கு வாங்கலாம் என்ற விவரங்களையும் அளிக்கிறோம்.
1. பனாரஸ் பட்டு புடவை (Banaras Silk Saree)
தனது திருமண நாளன்று ஒரு திகைப்பூட்டும் தோற்றத்தில் தோன்றும் எண்ணம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ள ஆசைதான்! அதை நிறைவேற்றும் வகையில் உள்ளது இந்த பனாரஸ் பட்டு. இதன் விரிவான வடிவமைப்புகளுடன் சிறந்த தரத்தில் இதை நெய்வதுதான் இதன் சிறப்பு . இதில் கட்ஒர்க் , தஞ்சொய், புடிடார், ஜங்களா மற்றும் வஸ்கட், பனாரசி புடவைகளின் சில வகைகள் ஆகும். வெள்ளி மற்றும் தங்கத்தில் இந்த புடவைகளின் பள்ளுவில் இருக்கும் வடிவமைப்புகள் தான் இதன் சிறப்பம்சம் !
மேலும் இதில் வரும் பூக்கள் மற்றும் இலைகள் முகலாய வடிவமைப்புகளை கொண்டு நெய்த ஒன்றாகும்! பனாரஸ் பட்டுப் புடவையை நீங்கள் அணியும்போது உங்கள் தனித்துவத்தை நிச்சயம் இது முன்வைக்கும். மேலும் ஒரு அட்டகாசமான தோற்றத்திற்கு இதுவே சிறந்த ஒன்றாகும்
இதை எங்கு வாங்கலாம் ?
ராஜன் சில்க் ஸ்டோர்
முகவரி: மைதானம் புளனால மெய்தகின் வீதி
பாங்க் ஆஃப் இந்தியா அருகில் , புதிய சந்தை அச் பைரோ , கோவிந்த்புரா, வாரணாசி, உத்தரப்பிரதேசம் 221001
தொலைபேசி : 0542 241 3123
http://www.banarasi.net/
சுமங்கல் சில்க்ஸ் – பனாரஸ் புடவைகளுக்கான முன்னணி கடை
முகவரி: பாலாஜி காம்ப்ளக்ஸ், சிக்ரா சௌராஹா ரோடு, காந்தி நகர், சித்திபுரா, சிக்ரா, வாரணாசி, உத்தரப்பிரதேசம் 221010
தொலைபேசி : 0542 222 2271
https://www.sumangalsilks.com/
2. மைசூர் சில்க் (Mysore Silk)
மல்பெரி எனும் பட்டை கொண்டு தயாரிக்கப்படும் மைசூர் பட்டுப் புடவைகள் முக்கியமாக கர்நாடகா மாநிலத்தில் 70 % வரை தயாரித்து வருகிறது .இது இந்தயாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை முக்கியமாக குறிக்கிறது. இந்த மைசூர் பட்டுப் புடவைகளின் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் தூய்மையான பட்டு, இதன் தங்க ஜரிகை மற்றும் உயர்தரம் ஆகியவைதான்.
நீங்கள் பட்டு புடவைகளில் வகைகளை தேடிக்கொண்டிருந்தால் மைசூர் சில்க் உங்களுக்கு ஏற்றது!
இதை எங்கு வாங்கலாம்?
பத்ஷா ஸ்டோர்ஸ் – 1965 முதல்
முகவரி: கடை # 5, விஷ்வேஸ்வரி பவன், கே.ஆர் சிர், தேவராஜா மொஹல்லா, சம்ராஜ்ரபுரா, மைசூரு, கர்நாடகா 570001
தொலைபேசி: 0821 400 4022
http://www.badshastores.com/
KSIC மைசூர் பட்டு
முகவரி: மனந்தவாடி சாலை, விடையாரண்ய புரம், மைசூர், கர்நாடகா 570008
தொலைபேசி: 0821 248 0801
http://www.ksicsilk.com/Web/Mananthody
3. கொன்ராட் சாறி (Konrad Saree)
ஒரு ஒரு பண்டிகையை நாட்களுக்கும், விசேஷ நாட்களுக்கும் ஏற்ற புடவையை நீங்கள் இந்தியாவில் நிச்சயம் காணலாம். இதை நிரூபிக்கும் வகையில் உள்ளது இந்த கொன்ராட் சேலைகள். இது தமிழ்நாட்டில் நெய்து வரும் சேலை ரகம் ஆகும் . இது முக்கியமாக டெம்பிள் சாறி என்று கூறுவார்கள். இதை ஆரம்பத்தில் கோவிலுக்கு செல்லும் பெண்மணிகளுக்கு என்றே வடிவமைக்கப்பட்டது. தூய்மையான பட்டு மற்றும் கையால் நெயுவதினால் இதன் விலை அதிகமாக இருக்கலாம். மேலும் இதில் பறவைகள், பூக்கள், இலைகள் ,மிருகங்கள் என இயற்கை அம்சங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த சேலை ரகங்கள் மற்ற பட்டுப்புடவைகளை விட இலகுவான இடையில் உள்ளதால் இதை நீண்ட நேரம் அணிந்திருக்கவும் சிறந்ததாகும்.
இதை எங்கு வாங்கலாம் ?
சுஜாத்ரா
B 704 மோன்ட்வர்ட் பியாரிட்ஜ் கட்டம் 1, பானர் பாஷான் லிங்க் ரோடு, புனே, மகாராஷ்டிரா 411021
தொலைபேசி: 9920950345
https://www.sujatra.com
நிக்விக்
E – 11 / D, தெரு எண் 8, கணேஷ் நகர், பாண்டவ நகர், புது தில்லி, தில்லி 110092
தொலைபேசி : 011 4103 6327
https://www.nikvik.com/
4. காஞ்சிபுரம்/ காஞ்சிவரம் பட்டு புடவை (Kancheevaram silks)
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் நகரத்தில் உற்பத்தியாகும் காஞ்சிபுரம் பட்டு புடவைகள் இந்தியாவின் பழமை வாய்ந்த புகழ் பெற்ற பட்டு புடவைகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் பெருமை வாய்ந்த பட்டு ரகங்களில் ஒன்றாகும். இதை முதலில் தங்கம் மற்றும் சிவப்பு நிறங்களில் மட்டுமே செய்து வந்தனர். பிறகு பல நிறங்களில் நெய்ய துவங்கினர். இதை தென் இந்தியாவில் மணமகள்கள் முக்கியமாக தனது திருமண நாளில் அணிந்து கொள்ளும் பட்டு புடவை ஆகும் .இதன் சிறப்பான வடிவமைப்பு, தூய்மையான பட்டு மற்றும் இதன் கம்பீரமான தோற்றம் அளிக்கும் வடிவமைப்புகள், இதன் செழுமை இவை அனைத்தும் வேறு எந்தவிதமான பட்டிலும் காண முடியாது . இந்த புடவைகளை உயர்தர பட்டு நூலில் நெய்வதனால் இது அவ்வளவு எளிதில் கிழிந்து போகாது .மேலும் இது நீண்ட காலம் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் பட்டுப் புடவை வாங்க தயாராக இருந்தால் நிச்சயம் உங்கள் வாட்ராப்பில் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க- சிவப்பை மறந்துவிடுங்க ! இந்த மாறுபட்ட திருமண புடவை நிறங்களில் உங்கள் தனித்துவத்தை காண்பிங்கள்
இதை எங்கே வாங்கலாம்?
பி. எஸ் சில்க் சாறி ஷாப் – காஞ்சிபுரம் பட்டு சாரி உற்பத்தியாளர்
முகவரி: எண் 9J / 3, விலாக்காடி கோயில் தோப்பு தெரு, மண்டபம் தெரு , கீரை அருகே, காஞ்சிபுரம், தமிழ்நாடு 631501
தொலைபேசி: 080157 57904
http://www.pssilksarees.com/
ஏ.எஸ். பாபு ஷாஹ்
முகவரி: 40-ஏ, நார்த் ஸ்ட்ரீட், ஷேக்பெட் , காஞ்சிபுரம், தமிழ்நாடு 631501
தொலைபேசி: 044 2722 2058
https://www.asbabusah.in/
5. போச்சம்பள்ளி பட்டு புடவை(Pochampalli Silk Saree)
பட்டு புடவைகளில் நீங்கள் இன்னும் கொஞ்சம் மார்டெனாக தேடிக்கொண்டிருந்தால் போச்சம்பள்ளி பட்டுப் புடவைகளை நீங்கள் அணிந்து கொள்ளலாம் . இது ஆந்திரா மாநிலத்தில் டெலெங்கான நகரத்தில் உற்பத்தியாகும் சேலை . இதில் இதன் விரிவான வடிவியல் வடிவமைப்புகள் இந்த ரக சேலையின் தனித்துவத்தை முன்வைக்கிறது.இன்றைய நவீன பெண்மணிகளின் பாரம்பரிய தோற்றத்திற்கு ஏற்ற பட்டுப்புடவை இதுவே!
இதை எங்கே வாங்கலாம்?
போச்சம்பல்லி இக்கத் சாரீஸ்
முகவரி: பூடான் போச்சம்பல்லி, நல்கொண்டா மாவட்டம், தெலுங்கானா 508284
தொலைபேசி: 088856 58055
https://mbasic.facebook.com/pochampallyikkathsarees/
போச்சம்பல்லி இக்கத் பட்டு சாரீஸ் (எஸ்.என். ஹேண்டலூம்ஸ்)
முகவரி: 3-163, லக்ஸ்மன் நகர், பூதன் போச்சம்பல்லி, தெலுங்கானா 508284
தொலைபேசி: 074163 37416
https://www.facebook.com/ikkatsareesilk/
6. செட்டிநாடு சேலைகள் (Chettinad Silk Sarees)
மற்றொரு பாரம்பரியமிக்க சேலை ராகங்களில் ஒன்றுதான் இந்த செட்டிநாடு பட்டு புடவைகள் . இதில் நீங்கள் பளிச்சிடும் நிறங்கள் ,கட்டம்போட்ட வடிவங்கள் ,பெரிய பார்டர்கள் என்று பல வகைகளைப் பார்க்கலாம். இவை அனைத்தும் தமிழ்நாட்டின் காரைக்குடி செட்டிநாடு கலாச்சாரத்தை குறிப்பிடும் வகையில் அமைந்திருக்கும் பழமைவாய்ந்த பிரபலமான சேலைகள் ஆகும் .
இலகுவான இடை கொண்ட பட்டுப் புடவைகளை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால் இதுவே அதற்கு பொருத்தமானது.
இதை எங்கே வாங்கலாம்?
செட்டிநாடு தறி
முகவரி: # 13/7, கி.பி. தாசன் ரோடு, சீட்டம்மால் காலனி, எம்.ஐ .ஜி காலனி, ஆல்வார்பேட், சென்னை, தமிழ்நாடு 600018
தொலைபேசி: 094443 47701
https://www.chettinadthari.com/
துளசி சில்க்ஸ்
முகவரி: 68, லஸ் சர்ச் ரோடு, கபாலி தொட்டம், மைலாப்பூர், சென்னை, தமிழ்நாடு 600004
தொலைபேசி: 044 2499 1086
https://tulsisilks.co.in/
மேலும் படிக்க – பேஷன்னை தனது சொந்த பாணியில் மறுவரையுறை செய்த கோலிவுட் பிரபலங்கள் : குறிப்பு எடுங்கள்
7. டஸ்ஸர் சில்க் (Tussar Silk)
பிஷ்ணுபூர் பட்டுப்புடவைகள் மேற்கு வங்காளத்தில் கொல்கத்தாவில் இருக்கும் பிஷ்ணுபூர் எனும் நகரத்தில் தயாரித்து வருகிறார்கள். தூய்மையான பட்டு நூலில் உற்பத்தியாகும் இந்த உயர்தர புடவைகள் உங்களுக்கு மிகவும் மென்மையான அமைப்பில் வருகிறது. மேலும் இதன் இலகுவான இடை மற்றும் சிறப்பு அம்சங்கள், லேட்டஸ்ட் டிசைன் இவை அனைத்தும் இந்த ரக புடவையின் தனித்துவத்தை காட்டுகிறது. பட்டுப் புடவையில் உங்களுக்கு இன்றைய காலகட்டத்தில் இருக்கும் நவீன வடிவமைப்புகளும் கொண்டு வேண்டும் என்றால் இது போல் விஷ்ணுபூரி பட்டுப்புடவைகளை உங்கள் கல்லெக்ஷன்சில் நிச்சயம் சேர்க்க வேண்டும்!
இதை எங்கே வாங்கலாம்?
பரினீதா ஒன்லைன் சாறி ஸ்டார்
முகவரி: 3F ஃபல்குனி, டியூக் ரெசிடென்சி, 13 சண்டிலாலா லேன், கொல்கத்தா, மேற்கு வங்கம் 700040
தொலைபேசி: 098202 28720
https://www.parinita.co.in
பங்காள லம்ஸ்
13B பிதான் சரனி, 1 வது மாடி, கொல்கத்தா – 700006, மேற்கு வங்காளம்
தொலைபேசி: 9830896362
https://bengalloomsindia.com
8. கட்வல் பட்டு புடவை (Gadwal Silk Saree)
பெரும்பாலும் வலைத்தளங்களில் இப்போது நாம் பார்க்கும் அந்த ஈர்க்க வைக்கும் சேலைகளில் ஒன்று நிச்சயமாக கட்வல் சேலைகளாக இருக்கும். இது பெண்களின் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறது . இதன் முக்கியத்துவம் என்னவென்றால் இதன் பெரிதளவில் இருக்கும் ஜரியின் வேலைப்பாடுகள் தான். இந்த வகையில் முக்கிய பகுதியுடன் இதன் பல்லு மற்றும் பார்டர் மூன்றையும் தனித்தனியாக நெய்து அதன் பிறகு இதை ஒரே சோலையாக சேர்ப்பார்கள். இதன் நவீன வடிவமைப்புகள் , லேசான அமைப்பு நவீன பெண்மணிகள் இதை தேர்ந்தெடுப்பதற்கான காரணமாகும். உங்களுக்கும் இது பிடித்திருந்தால் இதை இங்கே வாங்குங்கள்!
நவீன் சாரி மையம்
முகவரி: ரைச்சூர் சாலை, வேதா நகர், கிஸ்டி ரெட்டி புன்ன்கலோ, கத்வால், தெலுங்கானா 509125
தொலைபேசி: 094403 71295
ஸ்ரீ மாதவ கத்வால் சரீஸ் (மொத்த பாட்டு சாரி)
முகவரி: ராஜோலி கிராமம் அல்ம்பூர் தாலுக், மஹபூப்நகர் தொலை, தெலுங்கானா 509126
தொலைபேசி: 090144 49440
https://gadwal-sarees.business.site/
பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.